தலைக்கு குளிக்கும்போது ஒரு முடி கூட கொட்டக் கூடாதா? அப்ப ஷாம்புவை, ஒரு முறை இப்படி போட்டு தலைக்கு குளிச்சு பாருங்க. ஒரு முடி கூட பாத்ரூமில் உதிர்ந்து இருக்காது.

hair-bath-wash-fall
- Advertisement -

என்ன செய்தாலும் இந்த முடி உதிர்வு பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட முடியவே இல்லை. தலை சீவினால் வீடு முழுக்க முடி, தலைக்கு குளித்தால் பாத்ரூம் முழுக்க முடி. முடி கையோடு வந்த வண்ணம் இருக்கிறது. இப்படியே விட்டால் நிச்சயம் 30 வயதை கடப்பதற்குள் வழுக்கையாவதை யாராலும் தடுக்க முடியாது. இதிலிருந்து தப்பிக்க என்ன செய்வது. முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒரு சிலவற்றை இப்போது பார்ப்போமா. முதலில் கெமிக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து உங்கள் முடியை நீங்கள் பாதுகாக்க வேண்டும். அதற்கு இயற்கையான சில வழிமுறைகளை தலைக்கு குளிக்க பயன்படுத்த வேண்டும்.

இதோடு சேர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். சரிதான். ஆனால், இதெல்லாம் பிராக்டிகல் லைஃப்க்கு ஒத்து வருமா. கொஞ்சம் கஷ்டப்பட்டு தானே ஆக வேண்டும். அழகான முடி தேவை என்றால் செயற்கையாக நீங்கள் பயன்படுத்தும் எந்த கெமிக்கலும் உங்கள் தலைமுடியை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் ஒரு அழகு குறிப்பு தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

- Advertisement -

தலை முடி உதிர்விலிருந்து தப்பிக்க சில வழிகள்:
அடிக்கடி நாம் தலையில் போடுவது ஷாம்பூ. கெமிக்கல் நிறைந்த பொருள். இதனால் நம்முடைய தலைமுடிக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்றால், என்ன செய்யலாம். இந்த ஷாம்புவை ஏதாவது ஒரு இயற்கையான பொருளோடு கலந்து நம்முடைய தலைமுறைக்கு போடலாம். ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். கூடவே இரண்டு கொத்து கருவேப்பிலையை சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க விட்டு அந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் ஷாம்புவை போட்டு கலந்து உங்கள் தலைக்கு போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வு கொஞ்சம் குறையும்.

இதேபோல செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, நெல்லிக்காய், கொய்யா இலை முருங்கைக் கீரை, கற்றாழை ஜெல் இப்படி தலை முடி உதிர்வை நிறுத்தக்கூடிய எந்தெந்த பொருட்கள் எல்லாம் உங்களுக்கு இயற்கையாக கிடைக்கிறதோ, அதிலிருந்து சாறு எடுத்தோ, அந்த சாரில் ஷாம்புவை கலந்து தலைமுடிக்கு போட்டு குளிக்கலாம். அரிசி வடித்த கஞ்சி, அரிசி களைந்த தண்ணீரை கூட நீங்கள் இதற்கு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

- Advertisement -

அடுத்து நாம் தலைக்கு வைக்கக் கூடியது எண்ணெய். விதவிதமாக எண்ணெய் கடைகளில் விற்கின்றது. அதையெல்லாம் தவிர்த்து விடுங்கள். சுத்தமான தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெயை, தலைக்கு பயன்படுத்தலாம். இது தவிர சுத்தமான பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், போன்ற எண்ணெய்களையும் கலந்து தலையில் தேய்க்கும் போது தலைமுடிக்கு வேர்க்கால்களுக்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மின்னல் வேகத்தில் உங்களை வெள்ளையாக மாற்றும் வெள்ளரிக்காய்! செலவே இல்லாமல் சினிமா நடிகை போல அழகாக மாற இதை விட்டா வேற வழி இல்ல.

அடிக்கடி ஹேர் ஸ்ப்ரே போடுவது, ஹேர் ஸ்டைட்னிங் செய்வது, கலரிங் செய்வது போன்ற விஷயங்கள் எல்லாம் உங்கள் முடியின் ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விடும். அதையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க. அதேபோல, ஒரே ஒருநாள் இதை எல்லாம் பின்பற்றி விட்டு, ரிசல்ட் கிடைக்கவில்லை என்று கைவிடாதிங்க. எந்த விஷயமாக இருந்தாலும் அதை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் பின்பற்றி வரும்போது தான் நல்ல ரிசல்ட்டை நம்மால் பார்க்க முடியும். மேல் சொன்ன விஷயங்களை எல்லாம் பின்பற்றி ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வரும்போது நிச்சயம் உங்கள் முடி உதிர்வில் மாற்றம் தெரியும். முடி வளர்ச்சியிலும் மாற்றம் தெரியும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -