முடி அடர்த்தியாக வளர ஹேர் பேக்.

hair fall
- Advertisement -

ஒருவருடைய அழகை மேலும் அழகாக காட்டுவது அவர்களுடைய தலைமுடி தான். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும். வழுக்கை தலையுடன் இருப்பவர்களை விட முடி அதிகமாகவும் அடர்த்தியாகவும் இருப்பவர்களுக்கு அழகு சற்று அதிகமாகவே தான் தெரியும். அப்படி அழகை அதிகமாக காட்டக்கூடிய இந்த முடியை முடி உதிர்வில் இருந்து பாதுகாக்க உதவக்கூடிய ஹேர் பேக்கை பற்றினால் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முடி உதிர்தல் என்பது அனைவருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் என்றாலும் அதை பிரச்சினையாக கருதாமல் நம் உடல் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் கண்டிப்பான முறையில் முடி உதிர்தலை சரி செய்து விட முடியும். முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு இயற்கையில் பல பொருட்கள் இருக்கின்றன. நம்முடைய முடியின் தன்மைக்கேற்றவாறு அந்த பொருட்களை பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துமே நீங்கும் என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

சரி இப்பொழுது முடி உதிர்வை தடுக்கும் ஹேர் பேக்கை பற்றி பார்ப்போம். இதற்கு நமக்கு மூன்றே மூன்று பொருட்கள் தான் தேவைப்படும். கற்றாழை, முட்டையின் மஞ்சள் கரு மற்றும் விளக்கெண்ணெய். ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெயும், ஒரு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்த பிறகு இதை நம்முடைய தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவ வேண்டும். தடவிய பிறகு ஐந்து நிமிடம் நம்முடைய விரல்களை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விட வேண்டும்.

- Advertisement -

முடி உதிர்வை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களில் ஒன்றுதான் உடல் சூடு. இந்த உடல் சூடை குறைப்பதற்கு விளக்கெண்ணெய் மிகவும் உதவுகிறது. முடியின் வேர்க்கால்களை வலுவாக்குவதற்கு முட்டையின் மஞ்சள் கரு உதவுகிறது. தலையில் பொடுகு பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கும், அதே சமயம் முடிப் பிளவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் கற்றாழை உதவுகிறது. இவை மூன்றையும் நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது கண்டிப்பான முறையில் படிப்படியாக முடி உதிர்தல் பிரச்சனை என்பது குறைந்து அதே சமயம் புதிய முடிகள் வளர்ந்து முடி அடர்த்தி அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: முகம் தங்கம் போல ஜொலிக்க சாக்லேட் ஃபேஸ் பேக்

நம்முடைய வாழ்க்கை சூழலையும் மாற்றிக்கொண்டு அதே சமயம் இப்படிப்பட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முடியின் அழகையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக் கொள்வோம்.

- Advertisement -