வெறும் 4 பொருட்கள் போதும், முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு கருகருவென அடர்த்தியான கூந்தலை பெற முடியும்.

Home made hair pack Tamil
- Advertisement -

இன்றைய சூழலில் பலருக்கும் நரைமுடி, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் இளம் வயதிலேயே வர துவங்குகிறது. அதற்க்கு மிக முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம், உணவு முறை இப்படி பலவற்றை கூறலாம். ஏற்கனவே உள்ள மனஅழுத்ததோடு சேர்த்து இந்த முடி பிரச்சனையும் சிலருக்கு கூடுதல் மன அழுத்தத்தை கொடுக்கிறது என்றால் அது மிகையாகாது. அதோடு இது சிலருக்கு தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது. இது போன்றவற்றில் இருந்து விடுபட்டு உங்கள் முடியை பழைய நிலைக்கு கொண்டுவரவும், புதிய முடி வலர்ச்சியை தூண்டவும் செய்யும் ஒரு அற்புதமான ஹேர் பேக் எப்படி தயாரிப்பது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
கரிசலாங்கண்ணி பவுடர் – 5 டீ ஸ்பூன், கருஞ்சீரகம் – 2 டீ ஸ்பூன், தேங்காய் பால் – 2 டீ ஸ்பூன், கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு. அவ்வளவு தான் இவை நான்கை கொண்டே நாம் எளிதாக ஹேர் பேக் தயாரித்துவிடலாம்.

- Advertisement -

ஹேர் பேக் செய்வது எப்படி என்பதை பார்ப்பதற்கு முன்பாக நாம் இதில் சேர்க்கவுள்ள பொருட்கள் நம் முடிக்கு என்ன பயன்களை தருகிறது என்பது குறித்து சுருக்கமாக பார்த்துவிடுவோம்.

கருவேப்பிலை:
கருவேப்பிலையானது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதன் மூலம் புதிய முடி வளர்ச்சியானது தூண்டப்படும். அதே சமயம் முடியை வலிமாகிவதோடு முடியின் பொலிவை கூட்டும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு. அதனால் நாம் கருவேப்பிலையை சேர்த்துள்ளோம்.

- Advertisement -

கருஞ்சீரகம்:
கருஞ்சீரகம், நமது முடியின் வேரை பலப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது. அதே சமயம் முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. முடியின் தன்மை சேதமாகி இருந்தால் அதற்க்கு சிறந்த ஒரு தீர்வாக கருஞ்சீரகம் உள்ளது. அதோடு முடியின் கருமையையும் இது அதிகரிக்க செய்கிறது.

கரிசலாங்கண்ணி:
கரிசலாங்கண்ணி என்பது மிகசிறந்த ஒரு மூலிகையாகும். முடி வளர்ச்சியை தூண்டும் தன்மை கரிசலாங்கண்ணிக்கு உண்டு. அதே சமயம் நரைமுடியை கருமையாகவும் இது உதவுகிறது. நரைமுடி வர துவங்கும் சமயத்தில் இதை பயன்படுத்துவதன் மூலம் விரைவில் நரைமுடி பிரச்சனையில் இருந்து மீளமுடியும்.

- Advertisement -

தேங்காய் பால்:
தேங்காய் பால் உங்களின் சேதமடைந்த முடிகளுக்கு ஊட்டமளித்து அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர உதவுகிறது.

ஹேர் பேக் செய்வது எப்படி:
முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் கருஞ்சீரகத்தை சேர்த்து வறுக்க வேண்டும். பிறகு வறுத்த கருஞ்சீரகத்தை ஆறவைத்துவிட்டு, கருவேப்பிலையை தண்ணீரில் சுத்தமாக கழுவி எடுத்துக்கொண்டு அதை மிக்சி ஜாரில் போட்டு, அதோடு தேங்காய் பால் மற்றும் வறுத்து வைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து அரைக்க வேண்டும்.

மூன்றையும் நன்கு அரைத்த பிறகு ஒரு காட்டான் துணியில் இவற்றை வடிகட்டி இதன் சாறை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த சாறில் கரிசலாங்கண்ணி பவுடரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அவ்வளவு தான் நமக்கு தேவையான ஹேர் பேக் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: அந்த காலத்தில் தேங்காய் எண்ணெய் கூட இந்த எண்ணெய் சேர்த்து தான் பயன்படுத்துவாங்களாம்! இப்படி பண்ணினா 1 முடி கூட கொட்டவே கொட்டாது தெரியுமா?

இதனை நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தலையில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்து அப்படியே 20 நிமிடங்களுக்கு குறையாமல் ஊறவிட்டு தலைக்கு குளியுங்கள். வாரம் ஒருமுறை இதை செய்தால் போதும். தலைமுடி அடர்த்தியாகவும் இருக்கும், கருமையாகவும் இருக்கும், நரைமுடிகளும் நீங்கும்.

- Advertisement -