சுருட்டையாக இருக்கும் முடி நேராக மாற டிப்ஸ்.

curling hair flax seeds egg white
- Advertisement -

பெண்களுக்கு முடி சுருள் சுருளாக இருந்தால் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். இந்த முடி பார்க்க எந்த அளவிற்கு அழகாக இருக்கிறதோ அதே அளவு கடினமாகவும் இருக்கும். இந்த சுருட்டை முடிகள் உள்ளவர்களால் தங்களால் நினைத்து ஹேர் ஸ்டைல் எதையும் செய்து கொள்ளவே முடியாது. அவர்களுக்கும் விதவிதமான சிகை அலங்காரங்களை செய்து கொள்ள ஆசை இருக்கும் தானே.

இப்போதெல்லாம் சுருட்டை முடிகளை நேராக மாற்ற ஸ்ட்ரெய்ட்டனிங், ஸ்மூத்தனிங் போன்ற பல முறைகள் வந்து விட்டன. அவைகளால் முடி பெரும் அளவு பாதிப்பு ஏற்படும் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற முறைகளை பின்பற்றும் போது நாம் நினைத்த நேரத்தில் முடியை பழையபடி சுருளாக மாற்ற முடியாது. நினைத்த நேரத்தில் முடி நீளமாக மாறாது.

- Advertisement -

இப்படி முடியை உடனடியாக ஸ்ட்ரைட் ஆகவும் ஸ்மூத்தாகவும் மாற்றிக் கொள்ளவும் மறுபடியும் உடனே பழைய படி முடியை சுருளாக மாற்றவும் எளிமையான வழிமுறைகள் உள்ளது. அது என்ன என்பதை அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சுருட்டை முடி நீளமாக மாற

இந்த முறைக்கு ஆளி விதைகள் நல்ல பலனை கொடுக்கும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஆளி விதையை சேர்த்தால் சிறிது நேரத்தில் அது ஜெல் பதத்திற்கு வந்து விடும். அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கி உடனடியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதை உடனே வடிகட்டி விட வேண்டும். அப்படியே விட்டால் பிறகு கெட்டியாகி விடும்.

- Advertisement -

இந்த ஜெல் நன்றாக ஆறிய பிறகு உங்கள் முடியின் வேர் கால்கள் முதல் அடி முடி வரை இந்த ஜெல்லை தேய்த்து அப்படியே விட்டு விடுங்கள். பத்து நிமிடம் வரை தலையில் இந்த ஜெல் ஊறினால் போதும். அதன் பிறகு தலைக்கு குளித்து விடுங்கள். முடி ஸ்மூத்தாகவும் ஸ்ட்ரைட் ஆகவும் மாறி விடும்.

ஆளி விதை ஜெல்லுக்கு பதிலாக முட்டையும் நாம் பயன்படுத்தலாம் முட்டையின் வெள்ளை கருவை எடுத்து குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு உங்கள் தலையில் தேய்த்து விடுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து முடியை அலசி விடுங்கள். இந்த முறையும் ஓரளவுக்கு சுருட்டை முடி நீளமாக மாற உதவி புரியும்.

- Advertisement -

இதே போல் சாதம் வடித்த கஞ்சியும் பயன்படுத்தலாம். ஆனால் அதை உடனே செய்ய முடியாது சாதம் வடித்த கஞ்சை ஒரு நாள் முழுவதும் புளிக்க விட வேண்டும். அடுத்த நாள் அதில் ஆலுவேரா ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்த பிறகு தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற விட வேண்டும். அதன் பிறகு எப்பொழுதும் போல நீங்கள் தலைக்கு குளித்து விடலாம்.

இந்த முறையும் முடி ஸ்ட்ரைட் ஆகவும் ஸ்மூத்தாகவும் மாற நன்றாக உதவி புரியும். இந்த ஜெல்லை எல்லாம் தேப்பதற்கு முன்பாகவே முடியை ஷாம்பு அல்லது சீயக்காய் சேர்த்து அலசி விடுங்கள். முட்டை தேய்த்து தலைக்கு குளிக்கும் போது மட்டும் மறுபடியும் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்துங்கள். ஆளிவிதையும், சாதம் வடித்த கஞ்சியும் பயன்படுத்திய பிறகு முடியை சாதாரண தண்ணீர் கொண்டு அலசினாலே போதும்.

இதையும் படிக்கலாமே: கருத்த முகம் சிவக்க ஃபேஸ் க்ரீம்

இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்களுடைய சுருட்டை முடி உடனே நேராக மாற உதவி புரியும். இதை பயன்படுத்திய ஓரிரு நாட்களில் முடி பழையபடி சுருளாக மாறி விடும். இதனால் உங்களுடைய முடியின் இயற்கை தன்மை அப்படியே இருக்கும். நீங்கள் விரும்பிய நேரம் மட்டும் உங்களுடைய முடியின் தன்மை மாற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -