வீட்ல இருக்கிற இந்த பொருட்களை வைத்து ஸ்ட்ரைட்னிங் கிரீம் தயார் செஞ்சு தடவி பாருங்க

hair straighting
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் தனக்கென்று இயற்கையிலேயே தனித்துவமான தலைமுடிகள் இருக்கும். காலப்போக்கில் அந்த தலைமுடி பிடிக்காமல் போய்விடும் பொழுது அதன் தன்மையை மாற்றிக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக சுருட்டை முடி வைத்திருப்பவர்கள் ஸ்ட்ரைட்னிங் செய்து கொள்வார்கள். நேரான முடி இருப்பவர்கள் சுருள் முடியாக மாற்றுவார்கள். இப்படி பல வகைகளில் தங்களின் முடியின் தோற்றத்தை மாற்றிக் கொள்வார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் வீட்டிலேயே முடியை எப்படி ஸ்ட்ரைட்னிங் செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

பொதுவாக நாம் தலைமுடியின் வகைகளாக நேரான முடி, அலையலையாக இருக்க முடி, சுருள் முடி, மிகவும் அதிகமான சுருள் இருக்கும் முடி என்று நான்கு வகைகளாக பிரிக்கலாம். இந்த காலத்தில் நாம் விருப்பப்படுவது போல் நம்முடைய தலைமுடியின் அமைப்பை மாற்றிக் கொள்ள பியூட்டி பார்லர் உதவுகிறது. அதில் இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் நம்முடைய இயற்கையான தலைமுடியின் அமைப்பை நாம் மாற்றுவதற்கு பியூட்டி பார்லரில் ரசாயன கலவைகளை உபயோகப்படுத்துகிறார்கள். அதனால் நம்முடைய முடியில் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு மாற்றாக நாம் வீட்டிலேயே முடியை நேராக்குவதற்கு ஸ்ட்ரைட்னிங் க்ரீம் தயார் செய்து உபயோகப்படுத்தினால் அதனால் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இதற்காக நாம் அதிக விலை கொடுத்து எந்த பொருட்களையும் புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து இந்த க்ரீமை தயார் செய்யப் போகிறோம்.

முதலில் 2 ஸ்பூன் தேங்காய் துருவலை எடுத்து அதில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் நன்றாக அரைத்து தேங்காய் பாலை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக 2 எலுமிச்சம் பழங்களை நறுக்கி எலுமிச்சை சாறு எடுத்து அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்க்க வேண்டும். பிறகு அதில் எலுமிச்சை சாற்றை ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். சிறிது நேரம் விட்டால் கூட அது கட்டி ஆகிவிடும் என்பதால் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றியவாறு கலக்க வேண்டும். நன்றாக கலந்த பிறகு அதில் தேங்காய் பாலை ஊற்றி மறுபடியும் கலக்க வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் நன்றாக கலந்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அடுப்பில் குறைந்த தீயில் வைத்து 2-3 நிமிடம் வைத்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது கெட்டியான பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அது கிரீம் போன்ற பதத்திற்கு வரும் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அது கட்டி கட்டி ஆகிவிடும். நன்றாக கலந்து கிரீம் பதத்திற்கு வந்த பிறகு 2 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது ஸ்ட்ரைட்னிங் கிரீம் தயாராகிவிட்டது.

இதை தலையில் தடவுவதற்கு முன்பாக தலைமுடியில் சிக்கு இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு முடியை சிறிது சிறிதாக எடுத்து இந்த க்ரீமை முடியில் தடவ வேண்டும். ஒவ்வொரு பிரிவாக எடுத்து தடவி பிறகு முழுவதுமாக தலை முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு தலையை அலசி விட வேண்டும். அதிகமாக சுழல் முடி இருப்பவர்கள் இந்த பேக்கை வாரத்தில் நான்கு நாட்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தி வர முடியும் தன்மையில் நல்ல மாற்றம் தென்படும்.

இதையும் படிக்கலாமே: இந்த முடி கொட்டுற பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு அப்படின்னு கேட்கிறவங்களுக்கு இதோ அருமையான டிப்ஸ். இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணி பாருங்க இனி ஒரு முடி கூட கொட்டவே கொட்டாது.

மிகவும் இயற்கையான முறையில் அதேசமயம் கூந்தலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாத பொருட்களை வைத்து ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்து உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -