இந்த பிரசாதத்தை உங்கள் குழந்தைகளுக்கு 1 முறை கொடுத்தாலே போதும். அவர்கள் அறிவாற்றலோடு, கல்வியில் முதல் இடத்தை பிடிப்பார்கள்.

Hayagriva-mantra-1

எல்லா பெற்றோருக்கும் தங்களுடைய குழந்தைகள் படிப்பில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் ஒரு வகுப்பில் படிக்க கூடிய 30 மாணவர்களும் முதல் மதிப்பெண் எடுக்க முடியும் என்பது முடியாத காரியம். ஆனால் அவரவர் குழந்தைகள் ஞானம் பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி, அறிவாற்றல் திறமையோடு முன்னிலையில் நிற்க வேண்டும் என்பதை பெற்றோர்களின் ஆசை. இருப்பினும் அந்தந்த குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு அறிவாற்றல் இருக்கின்றதோ, எந்த அளவுக்கு திறமை இருக்கின்றதோ அந்த அளவிற்கு அவரவர் குழந்தைகளை படிக்கச் சொல்வது சிறந்தது. அதை விட்டு மற்ற குழந்தைகளைப் பார்த்து, நம் குழந்தையும் அந்த குழந்தை போல நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பது மிகவும் தவறான ஒரு விஷயம்.

hayagreevar

அடிப்படையாக எல்லா குழந்தைகளுக்கும் கல்வி என்பது தேவைதான். அதை இல்லை என்று சொல்ல வரவில்லை. இருப்பினும் எல்லாக் குழந்தைகளும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் நிச்சயம் எடுக்க முடியாது என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடங்கலாம். உங்களுடைய குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

குருவுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் ஹயக்ரீவர். விஷ்ணுவின் அவதாரமான இந்த ஹயக்ரீவர். புதன்கிழமையும் வியாழக்கிழமையும் உங்கள் குழந்தைகள், வீட்டின் ஹயக்ரீவர் வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டிற்கு தேவையான பூஜை முறைகளை பெற்றவர்கள் செய்துவிட்டு, ஹயக்ரீவரை மனதார உங்களது பிள்ளைகளை வேண்டிக் கொள்ள சொல்லுங்கள்.

hayagriva

வீட்டில் ஹயக்ரீவர் படத்தை வைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உள்ளது. தாராளமாக ஹயக்ரீவரின் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். புதன்கிழமையும் வியாழக் கிழமையும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாகவே இந்த வழிபாட்டை செய்வது மிகவும் சிறப்பானது. ஹயக்ரீவருக்கு வில்வ இலைகளாலும், மல்லிப்பூவாலும் அலங்காரம் செய்ய வேண்டும்.

- Advertisement -

நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். பூஜை செய்யும்போது கட்டாயம் ஹயக்ரீவருக்கு 2 ஏலக்காய்களை நிவேதனமாக வைக்க வேண்டும். ஏலக்காய் தவிர தேன் நாட்டு சர்க்கரை போட்ட பால் இவைகளையும் நிவேதனமாக வைக்கலாம். முடிந்தவரை ஏலக்காயை நிவேதனமாகப் படைத்து அந்த ஏலக்காயை உங்களுடைய குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

Hayagriva mantra Tamil

உங்களுடைய குழந்தைகள் கொஞ்சம் பெரிய குழந்தைகளாக இருந்தால், அவர்களது கையாலேயே ஹயக்ரீவருக்கு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அவர்களது கையாலேயே பிரசாதத்தை வைத்து வில்வ இலைகளால் அவர்களது கையாலேயே மூன்று முறை ‘நன்றாக படிக்க வேண்டும்’ என்று மனதில் வேண்டிக்கொண்டு பகவானுக்கு அர்ச்சனை செய்து, அதன்பின்பு மனதார வேண்டுதல் வைத்து பூஜையை உங்கள் குழந்தைகளே நிறைவு செய்து கொள்ளலாம்.

Hayagriva mantra Tamil

பூஜை முடிந்ததும் அந்த இரண்டு ஏலக்காய்களை அப்படியே சாப்பிட முடிந்தால் குழந்தைகள் சாப்பிட்டு விடலாம். அப்படியில்லையென்றால் பொடி செய்து பாலில் கலந்து உங்களுடைய குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அந்த ஏலக்காய்களை வாரம் இரண்டு நாட்கள் புதன்கிழமையும் வியாழக்கிழமையும் தொடர்ந்து சாப்பிட்டு வரும் குழந்தைகள் நிச்சயமாக அறிவு திறன் கொண்டவர்களாக மாறுவார்கள் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

praying-god1

இந்த பூஜையை குழந்தைகள் மட்டும்தான் செய்ய வேண்டுமா இல்லை, அறிவு ஆற்றல் குறைவாக இருக்கும், மந்த புத்தி உடைய யாராக இருந்தாலும் இந்த பூஜையை செய்தால் அவர்கள் அறிவுத் திறன் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அடடா! அனுதினமும் நம்மை, நம்முடனே இருந்து காக்க கூடிய இந்த 1 தெய்வத்தை மட்டும் வழிபட மறந்து விட்டோமே! இவர்களை வழிபட்டால் பிரபஞ்சம் உங்களுக்கு நன்மையை மட்டும் தான் தரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.