மகாலட்சுமியின் அம்சம் மருதாணிக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

henna-mahalakshmi

பொதுவாக துளசி செடியைத்தான் அந்த மகாலட்சுமியின் அம்சம் என்று கூறுவார்கள். ஆனால் இந்த மருதாணி இலைக்கும் மகாலட்சுமியின் அம்சம் இருப்பது என்பதை தெரிந்து கொள்ளத்தான் இந்த பதிவு. ஸ்ரீ தோஷம் உள்ளவர்கள், சுமங்கலி தோஷம் உள்ளவர்கள் கூட இந்த மருதாணி இலையை வைத்து பரிகாரம் செய்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். முதலில் மருதாணி எப்படி மகாலட்சுமியின் அம்சம் ஆகும்? என்பதற்கான பதிலை தெரிந்து கொள்வோம்.

mahalakshmi

சீதாதேவி அவர்கள் ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்டு இருந்த சமயத்தில், சீதாபிராட்டிக்கு துணையாக இருந்தது இந்த மருதாணி செடி தான். சீதாதேவியின் கஷ்டங்களை எல்லாம் தொடர்ந்து பார்த்ததும் இந்த மருதாணி செடி தான். ஸ்ரீராமர் அவர்கள் தேவியை வனவாசத்தில் இருந்து மீட்ட பின்பு, தேவி ராமரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார்கள்.

சீதாதேவி ராமரிடம் கூறியதாவது: ‘நான் இந்த இடத்தில் சிறைப்பட்டிருந்த சமயத்தில் எனக்கு துணையாக இருந்தது இந்த மருதாணி செடி தான். என் கஷ்டங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டதும் இந்த மருதாணி செடி தான். ஆகவே இந்த மருதாணி செடியானது எந்த வரத்தினை கேட்டாலும், கொடுப்பது நமது கடமை’ என்று கூறினார்கள். சீதாதேவியின் கோரிக்கையை ராமரும் ஏற்றுக்கொண்டு மருதாணிக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

பெருந்தன்மையான குணத்தைக் கொண்ட மருதாணி ‘தேவி நீங்கள் இது நாள் வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் வந்துவிட்டது. உங்கள் முகத்தில் இந்த சமயம் இருக்கும் இந்த மகிழ்ச்சியானது எப்போதும் தொடர்ந்து இருக்க வேண்டும். அதுவே எனக்குப் போதும் என்று கூறிவிட்டது. மருதாணியின் இப்பேர்ப்பட்ட குணத்திற்கு சீதா தேவியாலும், ராமபிரானாலும் அளிக்கப்பட்ட வரம் தான் இது. ‘தனக்கென்று எந்த விதமான வரத்தையும் கேட்காமல், இப்படிப்பட்ட ஒரு தன்னலமற்ற குணத்தைக் கொண்ட உன்னை யார் கைகளில் இட்டுக் கொண்டாலும் அவர்களுக்கு சகல விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும்’ என்ற வரத்தை தேவியும் ராமரும் மருதாணி செடிக்கு தந்தார்கள். என்று கூறுகிறது வரலாறு.

- Advertisement -

ramar-setha

சீதா தேவியும் மகாலட்சுமியின் அம்சம் தான். சீதாதேவியின் மனதிலும், ராமரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்த இந்த குணத்தை உடைய, மருதாணியை வெள்ளிக்கிழமைதோறும், நம் வீட்டில் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து வருவது மிகவும் நன்மை தரும். அதுமட்டுமல்லாமல் ஜாதக கட்டத்தில் ஸ்ரீ தோஷம் உள்ளவர்கள், சுமங்கலி தோஷம் உள்ளவர்கள், சுமங்கலிப் பெண்களை தங்களது வீட்டிற்கு அழைத்து வயிறு நிறைய சாப்பாடு போட்டு, மருதாணி இலையை தானமாக கொடுத்தாலோ அல்லது அவர்கள் கைகளில் இட்டு விட்டாலோ, ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தின் தாக்கம் குறைக்கப்படும் என்று கூறுகிறது சாஸ்திரம். இதேபோல் வெள்ளிக்கிழமைகளில் மருதாணி இலையை சுமங்கலிப் பெண்கள் தங்களது கைகளில் வைத்துக் கொண்டால், மாங்கல்ய பலம் உண்டாகும் என்பதும் நம்பிக்கையாக இது நாள் வரை இருந்து வருகிறது. குறிப்பாக வட நாட்டில் திருமணத்திற்கு மருதாணி போட்டு விடும் சடங்கானது மிகவும் முக்கியமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சிலருக்கு தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ இருந்தால் கூட, அவர்கள் மருதாணி இலையை அரைத்து குழந்தைகளுக்கு வைத்து விடலாம். இந்த பரிகாரத்தின் மூலம் அவர்களுக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தன்னலம் இல்லாமல் செய்யும் உதவியை, காலத்திற்கும் இந்த உலகம் பேசும் என்பதையும் இந்த பதிவின் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே
திடீர் பணவரவு உரிய நேரத்தில் கிடைக்க இந்த பரிகாரத்தை செய்யலாம்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sthree dosham pariharam. Stree dosham in tamil. Maruthani palangal in tamil. Sumangali dosham. Pen sabam neenga pariharam.