உடல் முழுவதும் வெள்ளையாக மாற உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்

coffee
- Advertisement -

பலருக்கும் தான் வெள்ளையாக மாற வேண்டும், அழகாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி முகம் முழுவதும் தடவிக் கொள்வார்கள். இதனால் அவர்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் தேவையில்லாத பக்க விளைவுகள் உண்டாகும். அழகாக இருக்கும் உங்கள் முகத்தில் பருக்கள் உண்டாக ஆரம்பிக்கும், இதன் மூலம் கரும்புள்ளிகள், கருப்பு திட்டுக்கள் முகத்தில் படிய ஆரம்பிக்கும். எனவே இவற்றை எல்லாம் ட்ரை செய்வதை விட்டுவிட்டு, உங்கள் சமையலறையில் உள்ள இந்த மூன்று பொருள்களை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்திராத அழகை பெறமுடியும். வாருங்கள் இந்த 3 பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றியும், அவற்றை எப்படி பயன்படுத்தினால் உடலின் நிறத்தை வெள்ளையாக மாற்ற முடியும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கார்ன் ஃப்ளார் மாவு – 2 ஸ்பூன், காபி பவுடர் – 2 ஸ்பூன், பால் – 4 ஸ்பூன், வெள்ளரிக்காய் சிறியது – 1.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் இரண்டு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு மற்றும் 2 ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து லேசாக கலந்துவிட வேண்டும்.

பிறகு இவற்றுடன் அரை டம்ளர் பால் சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் இந்த கலவை கெட்டியாக ஆரம்பித்துவிடும். பின்னர் அடுப்பை அனைத்து விட்டு, கடாயை கீழே இறக்கி இந்த கலவையை நன்றாக ஆற விட வேண்டும். இப்போது இவற்றுடன் வெள்ளரிக்காயை பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு வெள்ளரிக்காயின் மீதுள்ள தோலை நீக்கி விட்டு, அவற்றை பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றை பேஸ்ட்டாக அரைத்து செய்து வைத்துள்ள கார்ன் ஃப்ளார் கலவையுடன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவு தான் நமக்குத் தேவையான ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.

பின்னர் முகத்தை சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு அப்படியே உலர விட வேண்டும். அதன் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் வெள்ளையாக மாறிவிடும். இதனை உடல் முழுவதும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வர முகத்தில் எண்ணெய் வடிதல் நீங்கும், முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், கருப்பு திட்டுகள் மற்றும் வெப்பத்தினால் உண்டாகும் வறட்சி போன்றவை மறையும். இது ஒன்று மட்டுமே போதும் உங்கள் சருமத்தின் நிறத்தை நல்ல அழகுடன் வைத்திருக்க. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -