உடல் எடையை குறைக்க வேண்டும். அதே சமயம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும். இதற்கு என்ன புரோட்டின் டிரிங்க் குடிப்பது. பலவகையான பிராண்டுகளில், பலவகையான புரோட்டீன் பவுடர், விலை அதிகமாக கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் இதில் எந்த அளவுக்கு ஆரோக்கியம் உள்ளது என்பது நமக்கு தெரியாது. உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும் அதே சமயம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உங்க வீட்ல, உங்க கையால இந்த பொருட்களை வாங்கி, இப்படி புரோட்டின் பவுடர் தயாரிச்சு ஒரு பாட்டிலில் போட்டு வச்சுக்கோங்க. இதை பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டுப்போகாது. வீட்டிலேயே பக்குவமாக புரோட்டின் பவுடர் தயார் செய்வது எப்படி.

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து விடுங்கள். அதில் பாதாம் – 1 கப், பிஸ்தா – 1/2 கப், வால்நட் – 1/2 கப், முந்திரி பருப்பு – 1/4 கப், இந்த பொருட்களை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் வறுத்து கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களை ஒரு தட்டில் போட்டு ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக அதே கடாயில் ஓட்ஸ் – 1/2 கப், சேர்த்து ஒரு நிமிடம் போல வறுத்தாலே போதும். ஓட்ஸ் சீக்கிரமாக வறுபட்டு விடும். இதையும் அதே தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக அதே கடாயில் பூசணி விதை – 2 டேபிள்ஸ்பூன், சூரியகாந்தி விதை – 2 டேபிள்ஸ்பூன், வெள்ளரி விதை – 2 டேபிள் ஸ்பூன், எள்ளு – 2 டேபிள் ஸ்பூன், இந்த நான்கு பொருட்களையும் போட்டு 2 நிமிடங்கள் அதாவது, எள்ளு பொரிந்து வரும் அளவிற்கு வறுத்து இந்த பொருட்களையும் அதே தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த கப்பில் பாதாமை அளந்து எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே கப்பில் மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவேண்டும். ஒரே அடியாக மிக்ஸியை ஓட வைத்து அரைக்கக் கூடாது. ஏனென்றால் நாம் இந்த புரோட்டீன் பவுடரில், நட்சை பயன்படுத்தியுள்ளோம். எண்ணெய் கசிவதற்கு வாய்ப்பு உள்ளது. மிக்ஸியை பல்ஸ் மோடில் வைத்து, நிறுத்தி நிறுத்தி ஓட்டி முடிந்தவரை பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக அரைத்த இந்த பவுடருடன் 1/2 கப் பால் பவுடர் சேர்த்து மிக்ஸியில் இரண்டு ஓட்டு ஓட்டி இந்த பவுடரை கொஞ்சம் பெரிய ஓட்டைகள் உள்ள சல்லடையில் போட்டு சலித்து கொள்ள வேண்டும்.

சலிக்கும் போது நமக்கு தேவையான புரோட்டின் பவுடர் திப்பி இல்லாமல் கிடைக்கும். சல்லடையில் மீதம் இருக்கும் திப்பிகளை, மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து சலித்து, புரோட்டீன் பவுடரை மொத்தமாக தயார் செய்து, அரைத்த சூடு ஆறிய பின்பு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இந்தப் பவுடர் கெட்டுப்போகாமல் இருக்க எந்த ஒரு பிரசர்வேடிவும் நாம் இதில் சேர்க்கவில்லை. முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்ட புரோட்டின் பவுடர் இது.

உடற்பயிற்சி செய்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் இந்த புரோட்டீன் பவுடரை குடிக்கலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களும் இதை குடிக்கலாம். ஒரு பெரிய டம்ளர் அளவு பாலில் 2 டேபிள்ஸ்பூன் புரோட்டீன் பவுடரை சேர்த்து, தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை – 1/2 ஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து விட வேண்டும். உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் உடற்பயிற்சி செய்து முடித்து அரை மணி நேரம் கழித்து இந்த டிரிங் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா. உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளுக்கு கூட இந்த புரோட்டீன் ட்ரிங்க் தாராளமாக கொடுக்கலாம்.