- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகழுத்து சுருக்கம் நீங்க டிப்ஸ்

கழுத்து சுருக்கம் நீங்க டிப்ஸ்

- Advertisement -

முகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு கழுத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் முகம் ஒரு நிறமாகவும் கழுத்து ஒரு நிறமாகவும் பலருக்கும் தென்படுவதை நாமே பார்த்திருப்போம். இப்படி முகத்திற்கு அதிக கவனம் செலுத்தி விட்டு கழுத்திற்கு கவனம் செலுத்தாமல் விடுவதன் மூலம் கழுத்தின் நிறமும் முகத்தின் நிறமும் வேறுபட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் முகத்தை விட கழுத்தில் சுருக்கம் அதிகமாக ஏற்பட்டு விடும். இது வயதான தோற்றத்தை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்சினையை நீக்குவதற்கு செய்யக்கூடிய எளிய வழிமுறைகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கழுத்தில் கருமைகளும், சுருக்கங்களும் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுபவை கழுத்தை முறையாக பராமரிக்காதது. மேலும் தைராய்ட் போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட குறைபாடுகளாலும் கழுத்தில் இப்படி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த பிரச்சினையை எளிதில் சரி செய்து விட முடியும்.

- Advertisement -

அன்னாச்சி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக செய்து அதை கழுத்தில் தடவி 15 லிருந்து 20 நிமிடம் வரை விட்டுவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்வதன் மூலம் சுருக்கத்தை குறைக்க முடியும்.

முட்டைகோஸின் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை கழுத்தில் தடவுவதன் மூலமும் கழுத்தில் இருக்கக்கூடிய கருமைகளும், சுருக்கங்களும் நீங்கி இளமையான தோற்றத்தை பெற முடியும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

பாதாம் பருப்பை காய்ச்சாத பசும்பால் ஊற்றி நன்றாக உரசி பேஸ்ட் போல செய்து கொண்டு அதை கழுத்தில் தடவுவதன் மூலமும் கழுத்து கருமையும், சுருக்கமும் நீங்கும்.

ஒரு ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு பன்னீரையும் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறையும் சேர்த்து நன்றாக கலந்து கழுத்தில் தடவி நன்றாக உலர விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் கழுத்தில் ஏற்பட்டிருக்கும் சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

பொதுவான குறிப்பு: கழுத்திற்கு நாம் பேக் போடுவதாக இருந்தாலும் சரி, அல்லது கிரீன் தடவுவதாக இருந்தாலும் சரி, எப்பொழுதும் கீழிருந்து மேலாக தான் தடவ வேண்டும். மசாஜ் செய்வதும் அப்படித்தான் கீழிருந்து மேலாக தான் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் தோலின் தளர்வுகள் மேல்நோக்கி தள்ளப்படுவதன் மூலம் இளமையான தோற்றத்தை பெற முடியும். மேலும் முகத்திற்கு நாம் எந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தினாலும் அதையே நம்முடைய கழுத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் முகம் மற்றும் கழுத்தின் நிறம் சரிசமமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பொடுகு பிரச்சனை தீர எளிய வழிமுறைகள்

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நம் கழுத்தில் இருக்கக்கூடிய கருமையும் சுருக்கத்தையும் நீக்க முடியும். மேலும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றி வர நல்ல முன்னேற்றம் தென்படும்.

சற்று முன்