வீட்டை சுத்தம் செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கிறதா? அப்போ இந்த எளிய வீட்டு குறிப்புகள் உங்களுக்காக தான்

cleaning
- Advertisement -

காலை எழுந்தவுடன் டீ போடுவதில் இருந்து இரவு உணவு சமைப்பது வரை ஒரு நாள் முழுவதுமே அன்றைக்கான வேலைகளை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். இதில் எங்கிருந்து கூடுதல் வேலைகளான ஒட்டடை அடிப்பது, வீட்டை கழுவுவது, வீட்டில் இருக்கும் சோபா, மெத்தைகளை சுத்தம் செய்வது, இது போன்ற வேலைகளை செய்யமுடியும். இவ்வளவு வேலைகள் இருக்கின்றதா என்று நினைக்கும் பொழுது தலை சுற்றிகிறதல்லவா?. இவ்வாறு அனைவரும் கஷ்டம் என்று நினைக்கும் வேலைகளை எப்படி எளிமையாக செய்வது? என்பதற்கான குறிப்புகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

kitchen

குறிப்பு: 1
மைக்ரோ பைபர் சோபாக்கள் மீது அதிகப்படியான கறைகள் படிந்திருந்தால் அவற்றை 100 சதவீதம் ஆல்கஹால் கொண்டு பிரஷ் பயன்படுத்தி சோபாவினன் மீது துடைத்து எடுத்தோம் என்றால் சோபாவில் உள்ள கறைகள் அனைத்தும் முழுவதுமாக சுத்தமாகிவிடும்.

- Advertisement -

குறிப்பு: 2
தினமும் காய்கறி நறுக்குவதற்கு காய்கறி கட்டிங் போர்டை பயன்படுத்துகிறோம். இதனை தினமும் பயன்படுத்துவதால் இதன் ஓரங்களில் கறைகள் படிய ஆரம்பிக்கும். இந்த கரைகளை அகற்றுவதற்கு எலுமிச்சை பழத்தினை இரண்டாக அறிந்து கொண்டு அதில் ஒரு பாதியில் உப்பை தடவிக்கொண்டு இந்த கட்டிங் போர்டின் மீது வைத்து நன்றாக தேய்த்து விட்டால் கட்டிங் போர்டு நன்றாக சுத்தமாகிவிடும்.

vegetable1

குறிப்பு: 3
செம்பு பாத்திரங்களை தினமும் உபயோகித்து வந்தால் அவை நாளடைவில் சற்று அழுக்குப் படிந்த நிறத்தில் மாறி விடும். இதனை சுத்தம் செய்வதற்கு நீங்கள் கடைகளில் சான்விச் மற்றும் பீட்சா வாங்கும் பொழுது அதனுடன் தொட்டுக்கொள்ள கொடுக்கும் ஸ்கெட்சப் வைத்து இந்த செம்புப் பாத்திரங்களை தேய்க்கும் பொழுது இவை நன்றாக பள பளவென்று மாறிவிடும்.

- Advertisement -

குறிப்பு: 4
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படுத்தும் வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்வதென்பது மிகவும் கடினமான வேலையாகும். ஒரு வாளியில் பாதியளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் வாஷிங் பவுடர் மற்றும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கி விட்டு அந்த தண்ணீருக்குள் வெள்ளை நிற ஷூக்களை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, அதன் பின்னர் துவைத்தால் ஷூவிலிருக்கும் கறைகள் அனைத்தும் சுத்தமாகி நல்ல வெண்மை நிறத்தில் மாறிவிடும்.

Kadaai

குறிப்பு: 5
கடாயில் இருக்கும் விடாப்பிடியான தரைகளை அகற்றுவதற்கு உருளைக்கிழங்கை இரண்டாக அறிந்து அதில் ஒரு பாதியை எடுத்து சோடா உப்பில் தோய்த்து கடாயை நன்கு தேய்த்து கழுவினால் கடாயில் இருக்கும் விடாப்பிடியான கரைகள் அகன்று கடாய் சுத்தமாகிவிடும்.

stove

குறிப்பு: 6
வீட்டில் இருக்கும் கேஸ் அடுப்பை தினமும் தவறாமல் பயன்படுத்துகிறோம். அடுப்பில் நெருப்பு வரும் பகுதிக்கு அருகில் இருக்கும் தட்டின் மீது நிறைய கருப்பு கறைகள் படிந்திருக்கும். இவற்றை சுத்தம் செய்ய வீட்டில் கைகழுவ பயன்படுத்தும் ஏதேனும் ஒரு ஹேண்ட்வாஷிலிருந்து சிறிதளவு எடுத்துக் கொண்டு அதனை அந்த தட்டின் மீது தடவி ஒரு நிமிடம் ஊற வைத்து அதன் பின்னர் ஒரு இரும்பு நார் வைத்து தேய்த்தோம் என்றால் அதில் இருக்கும் கரைகள் அனைத்தும் முழுவதுமாக சுத்தமாகிவிடும்.

- Advertisement -