ஒரே வாரத்துல உங்க கொத்துமல்லி செடி கிடுகிடுன்னு வளரணும்மா?அப்போ இப்படி வச்சு பாருங்க.

- Advertisement -
  • கொத்தமல்லி போன்ற சிறு தாவரங்கள் வளர பெரிய அளவில் இடவசதி ஏதும் தேவை படாது. நாம் இருக்கும் இடத்திற்குள்ளே சின்ன சின்ன தொட்டிகளில் இயற்கையான உரங்களை கொண்டே நம் வீடுகளில் வளர்த்து விடலாம். இதனால் நம்மை சுற்றி உள்ள சுற்றுப்புறம் பசுமை ஆகவும், அழகாகவும், மாறுவதோடு ஏதோ நம்மால் இயன்ற அளவிலானது மருந்து கலக்காது இயற்கையான முறையில் சில சில பொருட்களையாவது உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை பெருக்கி கொள்ளலாம். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதை போல வளர்த்தால் நீங்களும் ஒரே வாரத்தில் உங்கள் வீட்டில் கொத்தமல்லி செடியை வளர்த்து விடலாம் அந்த வழிமுறை என்னவென்று பார்க்கலாம்.

முதலில் ஒரு தொட்டி எடுத்துக் கொள்ளுங்கள். தொட்டி கொஞ்சம் அகலமாக (நீளம் வேண்டாம்) இருந்தால் நல்லது. கொத்தமல்லி செடி வளர்க்க அதிக இடம் தேவை படாது எனவே ஒரு சிறிய தொட்டியாக இருந்தால் கூட அதிலும் வளர்க்கலாம். தொட்டியின் அடியில் தண்ணீர் ஊற்றினால் தேங்காமல் கீழே வடியுமாறு அடியில் துளைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முதலில் தொட்டியின் கால் பாகம் வரை செம்மண் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் தோட்ட மண் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை அதை எடுத்து தொட்டியின் கால் பாகம் வரும் வரை போட்டு வையுங்கள்.

மண்ணை மிகவும் அழுத்தம் கொடுக்காமல் லேசாக போட்டு வையுங்கள். அடுத்து தேங்காய் நார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை ஊற வைத்து வடிகட்டினால் சக்கை போன்று உங்களுக்கு கிடைக்கும் அதை இந்த மண்ணிற்கு மேல் பரப்பி விடுங்கள். அந்த தண்ணீரையும் கீழே ஊற்றி விட வேண்டாம் மற்ற செடிகளுக்கு அது நல்ல உரம் எனவே அதை வீணாக்கி விடாதீர்கள். தேங்காய் நார் சக்கைக்கு மேலே இன்னொரு கால் பாகத்திற்கு மண் புழு உரம் சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதாவது நீங்கள் சேர்க்கும் இந்த மூன்றும் தொட்டியின் முக்கால் பாகம் வரை வர வேண்டும். அந்த அளவிற்கு பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இதன் பிறகு முழு மல்லி எடுத்து ஒரு பேப்பரில் வைத்து பூரி கட்டை வைத்து அதன் மேல் லேசாக உருட்டுங்கள். அழுத்தம் கொடுத்து உருட்ட வேண்டாம் மல்லி விதை இரண்டாக உடைய வேண்டும் அவ்வளவு தான். அதன் பிறகு அந்த விதையை தொட்டியில் தூவி அதற்கு மேல் விதைகள் தெரியாதவாறு லேசாக மண்புழு உரத்தை போட்டு விடுங்கள்.

இவை அனைத்தும் போட்ட பிறகு மேலே கை வைத்து அழுத்தக் கூடாது. மணல், உரம் எல்லாம் லூசாக இருக்க வேண்டும். இப்போது ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி லேசாக மேலே ஸ்பிரே பண்ணி விட வேண்டும். அதிகமாக தண்ணீர் ஊற்றக்கூடாது கைளால் தெளித்தால் கூட சில சமயம் ஆங்காங்கே தண்ணீர் அதிகமாகி விதைகள் மேலே வந்து விடும் ஆகையால் ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் ஊற்றி தெளிப்பதே நல்லது.

- Advertisement -

இதன் பிறகு முதல் இரண்டு நாள் இந்த மல்லி தொட்டி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் மட்டும் காலை அல்லது மாலை வெயிலில் படும்படி வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாள் செய்து மூன்றாவது நாள் நீங்கள் தொட்டியை வெயில் படும் இடத்தில் மாற்றி வைத்து விடலாம். தண்ணீர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஸ்பிரே மட்டும் அடித்தால் போதும்.

இந்த முறையை நீங்கள் சரியாக பின்பற்றினால் நீங்கள் செடி வைத்த ஐந்தாவது நாளே முளைத்து ஒரு வாரத்திற்கு எல்லாம் கொத்தமல்லி நன்றாக முளைத்து வளர தொடங்கி இருக்கும்.

இதையும் படிக்கலாமே: புதிதாக வாங்கி வந்த பூ செடி போதும், போதும் என்கிற அளவுக்கு பூத்துக் குலுங்க வேண்டுமா? இதோ இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. பூத்துக்குலுங்கும் பூக்களை பறிக்கவே உங்களுக்கு நேரம் போதாது.

இந்த முறையில் கொத்தமல்லி செடி வளர்ப்பது மிக மிக சுலபம் இந்த முறையில் நீங்கள் உங்கள் வீடுகளில் சுலபமாக கொத்துமல்லி செடியை வளர்த்து அதன் மூலம் பயனடையலாம்.

- Advertisement -