பைசா செலவில்லாத இந்த உரத்தை ரெடி பண்ணி வச்சிக்கிட்டீங்கன்னா போதும். உங்க வீட்ல இருக்க பூச்செடி காய்ச்செடி எல்லாம் கண்ணா பின்னான்னு தளதளன்னு வளர்ந்து நிக்கும்.

- Advertisement -

செடி கொடி வளர்க்கும் அனைவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதற்கு தேவையான உரங்களை தயார் செய்வது தான். என்ன தான் செடிகளை ஆசைப்பட்டு வாங்கி வளர்த்தாலும் கூட எல்லாவற்றுக்கும் அதிகமான விலை கொடுத்து உரங்களை வாங்கி பயன்படுத்த முடியாது. வீட்டில் பயன்படுத்தும் கிச்சன் கழிவுகளை உரமாக பயன்படுத்தினாலும் கூட, அதற்கு இன்னுமே போஷாக்கான உரங்களை கொடுக்க வேண்டும். அதிலும் தொட்டியில் வைத்து வளர்க்கும் செடிகளுக்கு அதிகப்படியான சத்துக்கள் தேவைப்படும். இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் செடிகளுக்கு கொடுக்கக் கூடிய சத்து மிகுந்த ஒரு உரத்தை செலவே இல்லாமல் வீட்டில் எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு நாம் பழவகைகளை தான் உரமாக மாற்ற போகிறோம். பழவகைகளின் உரம் என்றதும், இது தான் எங்களுக்கு தெரியும்மே என்று அனைவரும் யோசிப்பீர்கள். இதில் பழங்களை உரமாக்க போவதில்லை. இதில் இருக்கும் விதைகளை மட்டும் பயன்படுத்த போகிறோம். பழங்களை பொறுத்த வரையில் சாப்பிட பிறகு விதைகளை தூரத் தான் போடுவோம். அந்த பழங்களில் இருக்கும் விதைகளை தூக்கி போடாமல் சேகரித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் குறிப்பாக பலாப்பழத்தில் உள்ள கொட்டை. ஒரு சிலர் மட்டும் இதை தான் சமையலுக்கு பயன்படுத்துவார்கள் மற்ற இடங்களில் இது வீணாகத் தான் போடுவோம். அப்படியில்லாமல் பலாப்பழத்தின் கொட்டை கிடைத்தால் உடனே அதை அரைத்து பவுடராக்கி கொள்ளுங்கள். பவுடரை ஆற வைத்து அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இதே போல எந்த வகையான பழத்தில் இருக்கும் விதைகளாக இருந்தாலும் எடுத்து காய வைத்து அரைத்து ஒன்றாக கலந்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். அதே போல் நம் வீட்டில் வாங்கி வைக்கும் ஒரு சில பொருட்கள் சீக்கிரத்தில் வண்டு வந்து வீணாகி விடும். உதாரணமாக முந்திரிப் பருப்பு, வால்நட், வேர்க்கடலை, எள் போன்றவை எல்லாம் இவற்றையெல்லாம் கூட அரைத்து பவுடராக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பிளாஸ்டிக் டப்பா எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் எந்த பழ விதைகளின் பவுடராக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் மூன்றில் ஒரு பங்கு வேப்பம் புண்ணாக்கு. இதற்கும் வேப்பம் புண்ணாக்கு பதிலாக வேப்பங்கொட்டை கிடைத்தால் அதையே பவுடராக்கி சேர்த்துக் கொள்ளலாம். இவற்றுடன் நமக்கு தேவையான இன்னொரு முக்கியமான பொருள் சாம்பல். பழ விதைகள் ஈரத்தன்மையுடன் இருக்கும். இத்துடன் சாம்பலை கலக்கும் போது ஈரத்தன்மைகளை உறிஞ்சி விடும். அதே சமயம் செடிகளுக்கு ஊட்டச்சத்து ஆகவும், வண்டு பூச்சி வராமல் இருக்கவும் உதவும்.

- Advertisement -

பழவிதைகளின் பவுடர் எவ்வளவு எடுத்திருக்கிறீர்களோ, அதில் மூன்றில் ஒரு பங்கு வேப்பங்கொட்டை பவுடரும், மூன்றில் ஒரு பங்கு சாம்பலும் கலந்து ஒரு டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் எந்த செடியாக இருந்தாலும் தொட்டியில் வைத்திருந்தால் அதற்கு ஒரு ஸ்பூன் மட்டும் சுற்றி இருக்கும் மண்ணில் போட்டு கலந்து விடுங்கள். தரைகளில் வைத்திருப்பதாக இருந்தால் அதைப் போல மண்ணில் கொட்டி கலந்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல் செடிக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு காய்கறி செடிகளில் காய் பிடிக்காமல் பூவாகவே உதிர்ந்து விடுகிறதா? வீட்டிலேயே இந்த எளிமையான உரத்தை கொடுத்து பாருங்க நிறைய காய் பிடிக்குமே!

இப்படி தயாரித்து வைக்கும் இந்த உரம் மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த ஒரு உரத்தை தயார் செய்து வைத்துக் கொண்டால், நீங்கள் வீட்டில் வளர்க்கும் எந்த செடியாக இருந்தாலும் நன்றாக செழித்து வளர்ந்து பூத்து காய்த்து உங்கள் தோட்டமே பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

- Advertisement -