உங்க வீட்டு காய்கறி செடிகளில் காய் பிடிக்காமல் பூவாகவே உதிர்ந்து விடுகிறதா? வீட்டிலேயே இந்த எளிமையான உரத்தை கொடுத்து பாருங்க நிறைய காய் பிடிக்குமே!

veg-plant-the-more
- Advertisement -

வீட்டில் சிறு இடம் இருந்தால் கூட அங்கு செடிகளை நட்டு வைப்பது அதிர்ஷ்டம் கொடுக்கக் கூடிய விஷயமாக இருக்கும். வாஸ்து ரீதியாகவும் வீட்டில் செடிகள், கொடிகள் அதிகம் படர்ந்து பச்சை பசேல் என வைத்திருந்தால் தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட செடி வளர்ப்பில் காய்கறி செடிகளை நடுவது என்பது விசேஷமானது.

வீட்டில் ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்படும் காய்கறிகளை கொண்டு சமையல் செய்வதற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த காய்கறி நடவில் சில சமயங்களில் பூக்கள் பூத்து குலுங்கினாலும, காய்கள் காய்க்காமல் அப்படியே உதிர்ந்து விடும் விஷயமும் நடக்கிறது. இப்படி பூ பூத்து காய் பிடிக்காமல் இருந்தால் இதற்கு என்ன செய்யலாம்? என்பதை தான் இந்த தோட்டக் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் என்று விதவிதமான காய்கறிகளை விதைத்து அது வளர்ந்து அறுவடை செய்யும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதில் பூச்சி தொந்தரவுகளை கூட சமாளித்து விடலாம் ஆனால் பூக்கள் உதிர்வதை தான் சமாளிக்கவே முடியாத பிரச்சனையாக இருக்கும். அழகிய பூக்கள் பூத்து அது காய்க்காமல் போய்விட்டால் எந்த விதமான பயனும் இருப்பதில்லை.

காய்கறி செடிகளில் பூக்கள் பூத்து நன்கு அது காய்க்க ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்கு போதிய சத்துக்கள் தேவை. சத்துக்கள் இல்லை என்றால் அது பூவாகவே உதிர்ந்து விடும். இதற்கு முதலில் ஒரு லிட்டர் அளவிற்கு நன்கு புளித்த மோரை எடுத்துக் கொள்ளுங்கள். மோரில் இருக்கக்கூடிய நுண்ணுயிர்கள் செடிகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. இதனுடன் ஒரு லிட்டர் அளவிற்கு தேங்காய் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு முழு தேங்காயை உடைத்து சில்லுகளாக நறுக்கி அதிலிருந்து மூன்று முறை பால் எடுத்தால் ஒரு லிட்டர் அளவிற்கு வரவேண்டும். அந்த அளவிற்கு தண்ணீரை நீங்கள் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தேங்காய் பாலுடன் ஒரு லிட்டர் புளித்த மோர் இப்பொழுது சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் பாலும் மோரும் சேர்வதால் இதை தேமோர் கரைசல் என்பார்கள். சிறந்த ஒரு பூச்சி விரட்டியாகவும், வேரிலிருந்து சத்துக்களை உறிஞ்ச முடியாமல் சோர்ந்து போகக்கூடிய பூக்களுக்கு நல்ல ஒரு வலு கொடுத்து காய்க்க கூடிய தன்மையை அதிகரிக்க செய்யக்கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு.

பூவாகி காயாகி கனியாக கூடிய எல்லா வகையான செடிகளுக்கும் தேமோர் கரைசலை கொடுக்கலாம். கரும்பு மற்றும் பூச்செடிகளுக்கு தேமோர் கரைசலை கொடுக்கக் கூடாது. காய்கறி மற்றும் பழ வகையான செடிகளை பாழ்படுத்தக்கூடிய பூச்சி மற்றும் வண்டுகளை துரத்தி அடிக்கக்கூடிய சக்தி தேமோர் கரைசலுக்கு உண்டு. இதை கலந்து ஏழு நாட்கள் வரை நன்கு புளிக்க விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
குப்பையில் தூக்கி போடும் இந்த 1 பொருளை உங்க செடிக்கு போடுங்க. மில்லியன் கணக்கில் மல்லிப்பூ பூத்துக் குலுங்கும். பறிக்க இரண்டு கை போதாது.

தினமும் குச்சியை வைத்து கலந்து விடுங்கள். 7 நாட்களுக்கு பிறகு நல்ல உரமாக இது மாறி இருக்கும். இதனுடன் 10 மடங்கு அளவிற்கு நீங்கள் தண்ணீர் சேர்த்து உங்களுடைய காய்கறி மற்றும் பழ வகையான செடிகளுக்கு ஸ்பிரே செய்துவிடலாம். வேர்களுக்கும் ஒரு மக்கு வீதம் கொடுத்து வரலாம். இது போல தொடர்ந்து நீங்கள் வாரம் ஒருமுறை தேமோர் கரைசலை கொடுத்து வந்தால் காய்க்காத எல்லா வகையான காய்கறி செடியும் நன்கு கொத்து கொத்தாக காய்க்கும்.

- Advertisement -