என்ன! வெறும் பத்து ரூபாய்க்கு இத வாங்கினா கிச்சன், பாத்திரம், சிங்க் எல்லாமே பளிச்ன்னு மாறுமா?ஆச்சர்யமா இருக்குல வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

வீட்டில் பாத்திரம் தேய்ப்பது சிங் சுத்தம் செய்வது சமையல் மேடை சுத்தமாக வைத்துக் கொள்வது எல்லாமே நாம் தினமும் செய்யும் வேலைகளில் ஒன்று தான். ஆனால் இதையெல்லாம் சுத்தம் செய்ய தனித்தனியாக நாம் லிக்விட் போன்றவற்றை வாங்கி வைத்திருப்போம். இனி அது போல இல்லாமல் பத்து ரூபாய்க்கு இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி லிக்விட் தயாரித்து வைத்துக் கொண்டால் சமையலறை முழுவதுமே பளிச்சென்று இருக்கும். வாங்க அது என்ன லிக்விட் எப்படி செய்வது என்பதை எல்லாம் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக சமையலறையை சுத்தம் செய்வது என்பதை மிகப் பெரிய வேலை தான். சமையலறையை சுத்தம் செய்வது என்றாலே பாத்திரம் தேய்ப்பது கிட்சன் சிங்க் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக சுத்தம் செய்து கொண்டு இருக்க வேண்டும். இதற்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக லிக்விட் வாங்கி தேய்த்துக் கொண்டிருப்போம். இதற்கென நாம் அதிக அளவில் பணத்தை செலவழிக்க வேண்டியது இருக்கும். இப்போது அதை குறைப்பதற்கான எளிய வழியை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வீட்டிலே பாத்திரம் தேய்க்கும் லிக்விட் தயாரிக்கும் முறை:
இதற்கு பத்து ரூபாய் பாத்திரம் தேய்க்கும் சோப்பு வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான சோப்பை வாங்கிக் கொள்ளலாம். இதை காய் சீவும் சீவலில் சீவி நன்றாக தூள் செய்து கொள்ளுங்கள். துருவிய இந்த சோப்புத் தூளை ஒரு பாக்ஸில் அளந்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொள்ளுங்கள். எந்த அளவிற்கு தூள் சேர்க்கிறீர்களோ அதே அளவிற்கு இரண்டு மடங்கு கொதிக்கும் தண்ணீரை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இவை இரண்டையும் கலந்த பிறகு கால் டம்ளர் வினிகருடன் ஒரு டேபிள் ஸ்பூன் உப்புயையும் இந்த கலவையில் கலந்து கொள்ளுங்கள். வினிகர் இல்லாத சமயத்தில் ஒரு முழு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறை வடிகட்டி அதை சேர்த்து பிறகு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த கலவையை உங்கள் வீட்டில் இருக்கும் பழைய வீம், ஹார்பிக் பாட்டில் அல்லது லைசால் பாட்டில் இருந்தால் அதை சுத்தம் செய்த பிறகு அதில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த பாட்டில் மேலே சிறிய தூளை மூடியுடன் இருக்கும். அதில் ஊற்றி பயன்படுத்தும் போது லிக்விட் வீணாகாமல் அதே நேரத்தில் அதிக நாட்கள் வாசத்துடன் இருக்கும்.

நம் சாதாரணமாக பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலில் மூடியில் ஓட்டை போட்டு இந்த லிக்விடை ஊற்றி பயன்படுத்தும் போது இதன் வாடை வெளியேறி விடும். எனவே இது போன்ற பாட்டில்களில் ஊற்றி மூடி வைத்துக் கொண்டால் நீண்ட நாட்களுக்கு வாசமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த வெயில் காலத்துக்கு நல்லா கட்டியா, கிரீமியா, ஐஸ் கிரீம் மாதிரி தயிர் வேணுமுன்னா இந்த பாத்திரத்தில் உறை போடுங்க. கடையில் வாங்குற கிரீம் தயிர் எல்லாம், நீங்கள் தோய்க்கும் தயிருக்கு முன்னால் தோற்றுப் போகும்.

இந்த லிக்விடை வைத்து பாத்திரம் தேய்ப்பது முதல் கிச்சன் மேடை, செல்ஃப், சிங்க் என அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய இது மட்டும் இருந்தாலே போதும். உங்கள் சமையலறை முழுவதும் எப்பொழுதும் பளிச் சென்று இருக்கும். இனி இதற்கென தனித்தனி லிக்விட் வாங்கி பணத்தையும் செலவழிக்க வேண்டியதில்லை.

- Advertisement -