இந்த வெயில் காலத்துக்கு நல்லா கட்டியா, கிரீமியா, ஐஸ் கிரீம் மாதிரி தயிர் வேணுமுன்னா இந்த பாத்திரத்தில் உறை போடுங்க. கடையில் வாங்குற கிரீம் தயிர் எல்லாம், நீங்கள் தோய்க்கும் தயிருக்கு முன்னால் தோற்றுப் போகும்.

curd
- Advertisement -

மாக்கல் தயிர் ஜாடியை எப்படிப் பழகுவது. அந்த ஜாடியில் எப்படி தயிர் உறை போடுவது என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அப்படி என்னங்க இந்த மாக் கல் ஜாதியில் அதிசயம் இருக்கிறது என்று கேக்கறீங்களா. நிச்சயம் இந்த கல்லால் செய்யப்பட்ட ஜாடிக்கு ஸ்பெஷல் இருக்கிறது.

மெக்னீசியம் சத்து நிறைந்த கல்லைக் கொண்டுதான் இந்த ஜாடி தயாரிக்கப்படுகிறது. ஆகவே மெக்னீசிய குறைபாடு வராமல் இருக்க இந்த கல் சட்டியை சமையலறையில், அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். காலப்போக்கில் இந்த கல்சட்டியை எல்லாம் நாம் மறந்து விட்டோம். சரிங்க இனி வரக்கூடிய காலகட்டத்தில் ஆவது கொஞ்சம் இயற்கைக்கு மாறுவோம். உடல் ஆரோக்கியம் பெறுவோம்.

- Advertisement -

மாக்கல் ஜாடியை பழகுவது எப்படி?
புதியதாக வாங்கிய இந்த கல் ஜாடியை முதலில் சுத்தமான துணியை வைத்து துடைத்து விடுங்கள். அதன் பின்பு இதில் கொஞ்சமாக தூள் உப்பு போட்டு, ஒரு சாப்டான ஸ்பாஞ்ச் நாரை வைத்து தேய்த்து கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்கும் லிக்விட் எல்லாம் ஊற்றி கழுவ வேண்டாம். காரணம் இந்த ஜாடியில் கண்ணுக்கே தெரியாத சின்ன சின்ன ஓட்டைகள் இருக்கும். அதன் உள்ளே கெமிக்கல் கலந்த டிஷ்வாஷர் போய் உட்கார்ந்து கொண்டால் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல.

தூள் உப்பு போட்டு தேய்த்த மண் ஜாடியை சுத்தமாக கழுவி விட்டு, இதன் உள்ளே 5 லிருந்து 7 நாட்கள் வடித்த கஞ்சி தண்ணியை ஊற்றி ஊற வைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் வெறும் சுடுதண்ணீரை கூட இதன் உள்ளே ஊற்றி ஊற வைக்கலாம். ஆனால் குறைந்தது ஐந்திலிருந்து ஏழு நாட்கள் இப்படி சுடுதண்ணீரில் இந்த ஜாதியை ஊற வைக்க வேண்டும். பிறகு தான் தயிர் உறை போட பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

இந்த ஜாடியை கையாளும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கண்ணாடி பாத்திரம் போல தான், இந்த கல் ஜாடியையும் புழங்க வேண்டும். கொஞ்சம் வேகமாக தரையில் வைத்தால் கூட, இது விரிசல் விட்டு உடைந்து விடும். இதனுடைய விலையும் கொஞ்சம் கூட தான் இருக்கும். காரணம் இது முழுவதும் கையாலே செய்யப்படக்கூடிய ஜாடி. இந்த ஜாதியை தொட்டுப் பார்த்தாலே ஜில்லுனு இருக்கும். இதன் உள்ளே தயிரை உறை போட்டு வைத்தால் அவ்வளவு எளிதில் புளிக்காது. அதேசமயம் கட்டியாக தயிர் உறையாகி, நல்ல சுவையில் நமக்கு கிடைக்கும்.

மாக்கல் ஜாதியில் தயிர் உறை போடுவது எப்படி?
நன்றாக கஞ்சி தண்ணீர் ஊற்றி பழகிய ஜாடியை சுத்தமான தண்ணீரில் கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெதுவெதுப்பாக இருக்கும் காய்ச்சிய திக்கான பாலை ஊற்ற வேண்டும். பசும்பாலாக இருந்தால் மிகவும் சிறப்பு. பாலை விரலால் தொட்டுப் பார்த்தால் பாலில் சூடு இருக்க வேண்டும். பால் கொதிக்க கொதிக்க இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் உரைமோர் விட்டு, லேசாக கலந்து விட்டால் போதும். பிறகு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் கழித்து திக்கான தயிர் நமக்கு கிடைத்து விடும். உங்களுடைய ஊர் குளிர் பிரதேசமாக இருந்தால் பால் தயிராக மாற கூடுதல் நேரம் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கிச்சன் டவல் கிளீன் பண்றது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம நிறைய டவல் வேஸ்ட் பண்ணிட்டோமே!

பால் தயிராக மாறிய பின்பு இந்த ஜாடியில் இருந்து தயிரை தனியாக வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். பிறகு உறை போட்ட இந்த கல்ச்சாடியை நன்றாக துணியை வைத்து துடைத்து எடுத்து விட்டு, மீண்டும் உப்பு போட்டு தான் கழுவ வேண்டுமே தவிர, எக்காரணத்தை கொண்டும் சோப்பு போட்டு கழுவி விடாதீர்கள். பிறகு ஜாடியில் தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு காய வைத்து எடுத்து பத்திரப்படுத்தி வைத்து விடுங்கள்.

- Advertisement -