- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகருமையாக இருக்கும் உதட்டையும் சிவப்பாக்கும் எளிய லிப் ப்லம்.

கருமையாக இருக்கும் உதட்டையும் சிவப்பாக்கும் எளிய லிப் ப்லம்.

- Advertisement -

முகத்தின் அழகை மேலும் அழகாக காட்டுவதற்கு உதவுவதுதான் நம்முடைய உதடு. இந்த உதடு சாதாரணமாக பிங்க் கலர் அல்லது ரோஸ் கலர் என்று கூறக்கூடிய நிறத்தில் இருந்தால் முகம் அவ்வளவு அழகாக தெரியும். ஆனால் சில பேருக்கு உதடு வறட்சி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல் உதடு கருத்துப் போய் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் உதட்டின் நிறத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு பல கெமிக்கல்கள் நிறைந்த லிப் ப்லம்களை உபயோகப்படுத்துவார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே மிகவும் எளிமையாக தயாரிக்க கூடிய இந்த லிப் ப்லமை உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இயற்கையான முறையில் லிப் ப்லம் தயார் செய்வது எப்படி என்று தான் பார்க்கப் போகிறோம்.

இந்த லிப் ப்லமை நாம் தயார் செய்வதற்கு நாம் கஷ்டப்பட வேண்டும் என்ற எந்தவித சூழ்நிலையும் இல்லை. மிகவும் எளிமையாக அனைவர் வீட்டிலும் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களை வைத்தே தான் இந்த லிப் ப்லமை நாம் தயார் செய்ய போகிறோம். உதட்டில் இருக்கக்கூடிய கருமைகள் பல காரணங்களினால் ஏற்படும். சிலருக்கு இளமையிலேயே உதடு கருத்துப் போய் இருக்கும். அதில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் செல்களை நீக்காமல் உதட்டை பராமரிக்காமல் இருக்கும் பொழுது அதில் நிரந்தரமாக பிக்மென்டேஷன் ஆக படிந்து விடும்.

- Advertisement -

சிலர் அதிகமாக தண்ணீர் குடிக்காமல் ஈரப்பதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்கும் பொழுது உதடு வறட்சி ஏற்பட்டு வெடிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இப்படி உதட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நீக்க உதவக்கூடிய லிப் ப்லமை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

இந்த லிப் ப்லமை நாம் தயார் செய்வதற்கு டபுள் பாய்லிங் மெத்தட் என்ற முறையில் அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் சிறிது தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது அதில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான நெய்யை சேர்க்க வேண்டும். நெய் உருகிய பிறகு அதில் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். 15 நிமிடம் அடுப்பில் இருந்த பிறகு அதை இறக்கி விட வேண்டும். அவ்வளவுதான் லிப் ப்லம் தயாராகிவிட்டது. இதை சாதாரணமாக நாம் வெளியிலேயே வைக்கலாம். பிரிட்ஜிலும் வைக்கலாம். ஆனால் சூடான இடத்தில் வைக்க கூடாது. நெய் உருகி தண்ணீராக மாறிவிடும் என்பதை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நெய்யில் இருக்கக்கூடிய இயற்கையான சத்துக்கள் நம் உதட்டை மென்மையாக பராமரிக்க உதவுகிறது. வறட்சித்தன்மையை நீக்குவதற்கும் உதவுகிறது. எலுமிச்சம் பழத்தில் இருக்கக்கூடிய சத்துக்கள் உதட்டில் இருக்கக்கூடிய பிக்மென்டேஷனை குறைக்க உதவுகிறது. இறந்த செல்களை நீக்க உதவுகிறது. கஸ்தூரி மஞ்சள் உதட்டில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி பழைய நிறத்தை கொண்டுவர உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: 24 மணி நேரமும் முகம் ஜொலி ஜொலிக்க அழகு குறிப்பு

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை 15 நிமிடம் செலவு செய்து நாமே நம் கையால் சுத்தமான லிப் ப்லமை தயார் செய்து உபயோகப்படுத்தலாம்.

சற்று முன்