எந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் எப்படி இருப்பார்கள் தெரியுமா ?

astrology

இன்றைய சூழலில் பணம் என்பது மனிதர்கள் வாழ ஒரு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் ஜோதிடம் மூலமாக ஒரு மனிதனின் ராசியை வைத்து அவர் பண விஷயத்தில் எப்படி செயல்படுவார் என்பதை கணிக்க முடியும்.

மேஷம்
mesham

மேஷ ராசிகாரர்கள் எப்பேர்ப்பட்ட பண பிரச்சனை வந்தாலும் அதை பொறுமையாக சமாளிக்கும் திறன் கொண்டவர்கள். அதே போல் கொடுத்த கடனை வசூலிக்கும் திறமையும் இவர்களுக்கு உண்டு. ஆனால் கடன் வாங்கும்போது இவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்
rishabam

ரிஷப ராசிக்கார்கள் தரகராக செயல் படும் எந்த தொழிலிலும் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் இவர்கள் தன்னிச்சையாக ஒரு தொழிலில் ஈடுபட்டால் சில நேரங்களில் பண பிரச்சனை ஏற்படும். எதிர்காலம் கருதி பணத்தை சேர்ப்பதில் இவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

மிதுனம்
midhunam

- Advertisement -

மிதுன ராசிகாரர்களுக்கு பணத்தின் மீது அவ்வப்போது நாட்டம் குறையும். இவர்கள் நீண்ட கால முதலீடுகளில் ஈடுபடுவது நல்லது. பணத்தின் மீது இவர்களின் ஈடுபாடு எப்படி கம்மியோ அதே போல் சொத்து சேர்ப்பதிலும் இவர்களின் ஆர்வம் குறைவாகத் தான் இருக்கும்.

கடகம்
kadagam

கடக ராசிக்காரர்கள் எப்போதும் பண விடயத்தில் கவனமாக இருப்பார்கள். பணத்தை சம்பாதிக்கும் எண்ணமும் இவர்களிடம் அதிகமாக இருக்கும். சம்பாதித்த பணத்தை முறையாக சேமித்தால் இவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்
simmam

சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் சற்று ஆடம்பரமாக இருக்க நினைப்பார்கள். ஆடம்பரத்திற்கு ஏற்றார் போல பண சம்பாதிப்பதில் இவர்கள் கெட்டிக்காரர்கள் தான். ஆனால் சம்பாதித்த பணத்தை எதிர்காலத்திற்காக சேர்த்து வைக்கும் எண்ணம் தான் இவர்களிடம் குறைவாக இருக்கும்.

கன்னி
kanni

பணத்தை சிக்கனமாக செலவு செய்வதில் கன்னி ராசிக்கார்கள் வல்லவர்கள். ஒருதடவைக்கு 100 தடவை இவர்கள் பணத்தை எண்ணி பார்த்து செலவழிப்பார்கள். பணத்தை சேமிக்க தொடங்கினாள் இவர்கள் நன்றாக சேமிப்பார்கள்.

துலாம்
thulam

துலாம் ராசிகள் பணத்தை சம்பாதித்தாலும், சில நேரங்களில் பெரிய பெரிய தொகையை கூட சிலரிடம் ஏமர்ந்துவிடுவார்கள். பண விஷத்தை பொறுத்தவரை இவர்கள் அடுத்தவர்களிடம் ஆலோசனை செய்து முதலீடு செய்வதே நல்லது.

விருச்சிகம்
virichigam

விருச்சிக ராசிக்கார்களிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பது யாருக்கும் அவ்வளவு எளிதில் தெரியாது. பண விஷயத்தில் இவர்கள் எப்போதும் ரகசியம் காப்பார்கள். செய்யும் செலவுகளை குறித்துவைத்துக்கொள்ளும் பழக்கம் இவர்களில் சிலருக்கு உண்டு.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்கார்கள் பணத்தை சம்பாதிப்பதில் திறமையாக செயல்பட்டாலும் சில நேரங்களில் பொறுப்பில்லாமல் செலவழிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் பண விஷயத்தில் எப்போதும் இவர்களுக்கு நிதானம் தேவை.

மகரம்
magaram

மகர ராசிக்கார்கள் பணத்தை சம்பாதிக்க முடிவு செய்து உழைக்க ஆரமித்தால் பணம் இவர்களிடம் குவிய ஆரமிக்கும். நண்பர்களுக்கு பணத்தை எளிதில் செலவழிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. பணத்தை சேமிக்கும் எண்ணம் இவர்களிடம் சற்று குறைவாகவே இருக்கும்.

கும்பம்
kumbam

கும்ப ராசிக்கார்கள், பணத்தை எதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதை யோசித்தாலும், பணத்தை முதலீடு செய்ய தயக்கம் காட்டுவார்கள். இவர்கள் பணத்தை முறையாக சேமிப்பது மிக மிக அவசியம்.

மீனம்
meenam

மீனா ரசிகர்கள் பண விஷத்தை பொறுத்தவரை ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பண விஷயத்தில் இவர்களின் போக்கு பொதுவாக இருக்கும். அதனால் சில நேரங்களில் இவர்களை மற்றவர்கள் தவறாக வழிநடத்தவும் வாய்ப்புள்ளதது.