இளமையாக இருப்பது எப்படி? சித்தர்கள் கூறிய வழிமுறைகள்

siddhar

நாம் எல்லோரும் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆனால், அது நமக்கு நாம் உயிர் வாழும் காலங்களில் மூன்றில் ஒரு பங்கு தான் கிடைக்கும். இதனை பற்றி இன்னும் விரிவாக இப்பதிவில் காணலாம்.

 

அக்காலகட்டத்தில் சித்தர்கள் மற்றும் வாழ்ந்த அனைவருமே இளமையாகவும், ஆரோக்கியமாகவும் எந்தவித நோய் நொடி தன்னை நெருங்காத விதத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் எல்லாவற்றிலும், சிறந்தவர்களாகவும், வலிமையாகவும் காணப்பட்டார்கள். ஆனால், தற்போதைய காலத்தில் யாரும் அப்படி இல்லை. முதலில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொண்டால் தான் நாம் அனைத்தையும் சாதிக்க முடியும்.

 

இளமையாக வாழ சித்தர்கள் கூறிய சில வழிமுறைகள். முதலில், அதிகாலை சீக்கிரமாக எழ வேண்டும். எக்காரணம் கொண்டும் மதியவேளையில் தூங்ககூடாது. மதிய வேளைகளில் தூங்குவது  நமது உடல் முதிர்ச்சி தன்மையை அடைந்து இதனால் இளமையாக இருப்பது சாத்தியமாகாது. உணவு உட்கொள்ளும் பொழுது மெதுவாகவும் நன்கு உணவு செரிக்கும் படி உண்ணவேண்டும். அதேபோல் நாம் எப்பொழுதும் இளமையாக இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நமது உணர்வுகள் தான் நம்மை என்றும் இளமையாக வைத்திருக்கும்.

- Advertisement -

Siddhar

நமது உடலில் இருக்கும் கழிவுகளை நாம் அன்றாடம் சுத்தம் செய்து கொள்வது நல்லது. மனதில் நாம் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் எப்பொழுதும் இளமையாக இருக்கிறோம் என்று. வயதை நாம் கணக்கிடவே கூடாது. முடிந்த அளவு மற்ற உணவுகளை உட்கொள்ளாமல் இயற்கை உணவை உன்ன கற்றுக்கொள்ளவேண்டும். இளமையாக இருக்க இயற்கை உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பழங்களை அன்றாடம் ஒரு வேளையாவது உண்ணுவது நல்லதாகும். உடலில் எக்காரணம் கொண்டும் சூட்டை அதிகமாக தங்க விடக்கூடாது. இதனால் முதுமையை நாம் தடுக்க முடியும்.

இதையும் படிக்கலாமே:
தியானத்தின் மூலமாக மனதை ஒருநிலை படுத்த முடியும்? விவரம் இதோ

English Overview:
Here we have How to be young forever in tamil. We have details of how to be young forever too.