செம்பை தங்கமாய் மாற்ற சித்தர்கள் கூறிய ரகசியம்

irumbu-thangam

கடவுளின் அனுகிரகத்தோடு சித்தர்கள் இந்த உலகத்தில் நிகழ்த்திக்காட்டிய அற்புதங்கள் பல உண்டு. மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் தியானம் செய்து இறைவனிடம் இருந்தும் தங்களது குருவிடம் இருந்தும் அவர்கள் பெற்ற சக்தியின் மூலம் இந்த உலகிற்கு பல நன்மைகள் செய்துள்ளனர்.

மூலிகைகளை வைத்து நோய்களை குணப்படுத்துவதோடு நின்றுவிடாமல் செம்பை தங்கமாக்குவது இரும்பை தங்கமாக்குவது போன்ற பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டியுள்ளனர். அதோடு அதை எப்படி செய்வது என்ற முறையும் எழுத்துபூர்வமாக ஓலைச்சுவடிகளில் குறிப்பிட்டுள்ளார். உலோகத்தை தங்கமாகும் இந்த வித்தையை  ரசவாதம் என்பார்கள்.

தண்ணூரல் அற்று விட்டால் தாமிரமும் தங்கமாகும் என்கிறார் ஒரு சித்தர். அதாவது தாமிரம் என்கிற செம்பில் இருந்து பச்சை நிற களிம்பை நீக்கி விட்டால் செம்பு தங்கமாகும் என்கிறார் சித்தர்.

இந்த பச்சை நிற களிப்பை நீக்கிவதற்கான வழி முறையையும் கூறியுள்ளார். அது என்ன வென்றால் கூத்தன் குதம்பை சாற்றில் 9 முறை உருக்கி ஊற்றினால் செம்பு தங்கமாகும். அனால் கூத்தன் குதம்பை என்று சித்தர் எதை இங்கு குறிப்பிடுகிறார் என்பது நமக்கு புரியாத புதிராக உள்ளது. கூத்தன் குதம்பையை கண்டறிந்தால் செம்பை தங்கமாக்குவது சாத்தியமே. அனால் அதை கண்டறிவதற்கு குருவின் அருள் வேண்டும்