குளியலறையில் இருக்கும் பிளாஸ்டிக் பக்கெட்டை சுத்தம் செய்ய, இனி வினிகரும் வேண்டாம். சோடா உப்பும் வேண்டாம். இந்த 1 ஒரு பொருளை தடவினாலே அழுக்கு தானாக கரைந்து போய்விடும்.

buket-clean
- Advertisement -

குளியலறை தரை, சுவர் இவற்றை சுத்தம் செய்வது ஒரு கஷ்டம் என்றால், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பக்கெட், ஜக், இவைகளை சுத்தம் செய்வது அதைவிட பெரிய கஷ்டம். என்ன தான் சோப்பு போட்டு தேய்த்தாலும் அது புதுசு போல என்றுமே மாறாது. தினமுமே அழுக்குப் பிடித்த பக்கத்தில்தான் குளிக்க வேண்டுமா? தினம் தினம் உங்கள் வீட்டுக் குளியலறையில் இருக்கும் பக்கெட் புதுசாக இருக்க வேண்டுமென்றால் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. கட்டாயப் படுத்தல. உங்களுக்குப் பிடிச்சிருந்தா நீங்க ட்ரை பண்ணி பாருங்க. ஒரே ஒரு ஜக்குக்கு மட்டும். ஒர்க்கவுட் ஆச்சுன்னா எல்லாத்தையும் கிளீன் பண்ணிக்கோங்க.

buket-clean1

இந்த டிப்ஸை படிச்சு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு அப்புறமா, அடடா இதுல போய் பாத்ரூம் பக்கெட்டை எப்படி கிளீன் பன்றது! அப்படின்னு யோசிக்காதீங்க. நீங்க சோப்பு போட்டு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை சுத்தம் செய்தாலும், அது காய்ந்த பின்பு மறுபடியும் வெள்ளைத் திட்டுக்கள் வெளிப்படையாகத் தெரியும். நாம் சுத்தம் செய்த மாதிரியே இருக்காது.

- Advertisement -

ஆனால், இந்த பொருளை கொண்டு சுத்தம் செய்தால், அந்த வெள்ளைத் திட்டுக்கள் கூட தெரியாது. அப்படி என்ன பொருள்? சஸ்பென்ஸ் வைக்காம இப்பவே தெரிஞ்சிக்கலாம். நாம் இட்லி தோசைக்காக, நம் வீட்டில் அரைக்கும் இட்லி மாவு தான் அந்த பொருள். நம்ப முடியவில்லை அல்லவா? ஆமாங்க! எப்படி கிளீன் பன்றது இப்ப பாத்திரலாம்.

idli-mavu

கொஞ்சமா உங்க வீட்ல இருக்கிற இட்லி மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வெச்சுக்கோங்க. இன்னைக்கு மாவு ஆட்டி வெச்சிட்டு, நாளைக்கு இட்லி சுடுவீங்க இல்லையா, புளித்த மாவு, அந்த மாவை எடுத்துக் கொள்ளுங்கள். ‘அச்சச்சோ! சாப்பிடுகின்ற மாவில் பாத்ரூம் பக்கெட் தேய்ப்பதா?’ என்று நினைப்பவர்களுக்கு, இட்லி மாவு பிரிட்ஜில் வைத்து 15 நாட்கள் கழித்து வீணாக்குகிறார்கள் அல்லவா? அந்த மாவை வேண்டும் என்றாலும் கூட இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் அந்த மாவை உங்களது கைகளாலேயே தொட்டு அழுக்குப் பிடித்த பிளாஸ்டிக் பக்கெட் மீது நன்றாக தடவி விட்டு விடுங்கள். இந்த மாவை உங்களது கைகளால் தடவும் போதே, அந்த பக்கெட்டில் இருக்கும் அழுக்குகள் நீங்கி விடும். அதன் பின்பு ஸ்டீல் நாரால் மெல்ல தேய்த்து கொடுத்து, தண்ணீர்விட்டு பக்கெட்டை கழுவி பாருங்க. அப்படியே ஆச்சரியப்படுவீங்க.

buket-clean2

எவ்வளவு ஈஸி பாருங்க. சொல்லும்போதே நம்ப முடியலைல. டக்குனு உங்க வீட்ல இட்லி மாவு இருந்தா எடுத்து ட்ரை பண்ணி பாருங்க. முதல்ல ஒரே ஒரு பிளாஸ்டிக் ஜக்குக்கு மட்டும் கொஞ்சமா மாவெடுத்து ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்டு பாத்ரூம் கறை படிந்த ஜக்கிர்க்கு ஒர்க் அவுட் ஆச்சுன்ன, உங்க சொந்தக்காரங்க, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சொல்லி கொடுங்க. அவங்களும் பாத்ரூம்ல இருக்க பொருளை கிளீன் பண்ண கஷ்டப்படுவாங்க தானே.

இதையும் படிக்கலாமே
டீ போட்ற கேப்ல 5 நிமிஷத்துல உருளைக்கிழங்கு, ரவை ஃபிங்கர் சிப்ஸ்! இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களே! சூப்பர் ஸ்நாக்ஸ் இது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -