உங்க வீட்டு கேஸ் பர்னரை கைபடாமல், கஷ்டப்படாமல் சுலபமாக புதுசு போல எப்படி மாற்றுவது? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

burnur
- Advertisement -

நம்ம எல்லார் வீட்லயும் இருக்கின்ற பல பிரச்சனைகளில், இந்த கேஸ் பர்னர் பிரச்சனையும் ஒன்று. வீட்டில் இருக்கும் பெண்கள் அடுப்பில் எதையாவது வைத்துவிட்டு, மறந்துவிடுவார்கள். அது பொங்கி வழிந்து கேஸ் பர்னரை போய் அடைத்துக் கொள்ளும். அதன்பின்பு கேஸ் சரியாக எரியாது. முதல் பிரச்சனை இது. இரண்டாவதாக, கேஸ் பர்னர் கரி பிடித்து அசுத்தமாக இருந்தால், நாம் சமைக்கும் பாத்திரத்திலும் சிலசமயம் கரி பிடிக்க ஆரம்பிக்கும். பழைய கேஸ் பர்னரை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது? எப்படி புதுசு போல மாற்றுவது?

gas

கேஸில் இருக்கும் 2 பர்னர்களையும் முதலில் பத்திரமாக கழட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் கேஸ் பரனர் முழுகும் அளவிற்கு வெந்நீரை ஊற்றி விடுங்கள். அதில் ஒரு எலுமிச்சைப்பழ அளவு சாறு பிழிந்து விடுங்கள். அதன்பின்பு முக்கியமான ஒரு பொருளை சேர்க்க போகின்றோம். அதுதான் ஈனோ சால்ட் ‘ENO salt’. (அடுப்பில் வைத்து இப்படி செய்யக்கூடாது. ஒரு அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீரை ஊற்றி தான் இந்த ட்ரிப் ஃபாலோ பண்ணனும்.)

- Advertisement -

ஈனோ சால்ட் என்று சொல்லப்படும் இந்த உப்பு, எல்லா மெடிக்கல் ஷாப் பிலும் கிடைக்கும். சில டிபார்ட்மென்டல் ஸ்டோரில் கிடைக்கின்றது. விலையும் மிக குறைவுதான். இதையும் அந்த வெந்நீரில் கொட்டி விடுங்கள். இந்த சால்ட்டை கொட்டும் போது, கொஞ்சம் நுரை பொங்கி வரும். பயப்பட வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சிறிய பாக்கெட் ஈனோ சால்ட் முழுவதையும் அந்த தண்ணீரோடு கலந்து விடுங்கள்.

இந்த பரனர், தண்ணீரில் 2 மணி நேரம் வரை அப்படியே ஊறட்டும். அதன்பின்பு தண்ணீரிலிருந்து வெளியே எடுத்த பர்னரை நல்ல தண்ணீரில் போட்டு விடுங்கள். முக்கால்வாசி சுத்தமாக இருக்கும். (சுடச்சுட தண்ணீர், எலுமிச்சை பழச்சாறு, ஈனோ சால்ட் இந்த 3 பொருட்கள் தான்.)

- Advertisement -

அதன்பின்பு பாத்திரம் தேய்க்கும் டிஷ் வாஷ் பார் அல்லது லிக்விட் எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். லிக்விடை ஒரு பல் தேய்க்கும் பிரஷால் தொட்டு, அழுக்கு படிந்த பர்னரை லேசாக தேய்த்து கொடுத்தாலே போதும். பின்னர் பர்னர் பளபளப்பாக மாறிவிடும்.

gas2

அப்படி இல்லை என்றால் நீங்கள் சாதாரணமாக பாத்திரம் தேய்க்கும் நாரை வைத்து தேய்த்தால் கூட, சாதாரண பாத்திரம் தேய்ப்பது போல தேய்த்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள் போதும்.  பரனர் புதுசு போல பளபளப்பாக மாறிவிடும். அதன் பின்பு கொஞ்சம் வெயிலில் உலர வைத்து விட்டு அடுப்பில் மாட்டிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பர்னரை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் ஒரு வாட்டி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
10 ரூபாய் நோட்டை இப்படி மடித்து, இந்த இடத்தில் வைத்து விடுங்கள்! பின்பு போதும் போதும் என்று சொன்னாலும் பண மழையை உங்களால் நிறுத்தவே முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -