உங்கள் முகம் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? ஒருமுறை, இதை போட்டாலே முகம், தங்க நிறத்தில் பளபளப்பாக மாறும்.

face
- Advertisement -

எல்லா பெண்களுக்கும் தங்களுடைய முகம் தங்கம் போல ஜொலிக்க வேண்டும். பளபளப்பாக இருக்க வேண்டும், என்ற எண்ணம் தான் இருக்கும். நம்முடைய அழகை மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக, செயற்கையான முறையில் க்ரீம், ஜெல் இவைகளை பயன்படுத்துவதை விட இயற்கையாக இருக்கும் பொருட்களை வைத்து நம்முடைய சருமத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். அந்த வரிசையில் இயற்கையான பொருட்களை வைத்தே சொல்லப்பட்டுள்ள, ஒரு குறிப்பு தான் இது. ஒரு வாட்டி இத ட்ரை பண்ணி பாருங்க. ஒரு முறை போட்ட உடனேயே, உங்களது சருமத்தின் நிறத்தில் வித்தியாசம் கட்டாயமாக தெரியும் என்பதில் சந்தேகமே கிடையாது.

face

இதற்கு நம் வீட்டிலேயே ஒரு ஃபேஸ் பேக் தயாரிக்க போகின்றோம். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். பாதி அளவு கேரட், 4 துண்டு வெள்ளரிக்காய், காய்ச்சாத பால் 2 ஸ்பூன், வெள்ளை சர்க்கரை 2 ஸ்பூன், தக்காளி பாதி அளவு, இவைகளை ஒன்றாக சேர்த்து விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். அப்படியே அரைத்தாலே, சர்க்கரையும், வெள்ளரிக்காயும், தக்காளியும் சேரும்போது தண்ணீர் விட ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்தப் பேஸ்டை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். எந்த ஃபேஸ் பேக்கை போடுவதற்கு முன்பாக, உங்களது முகத்தை பச்சைப் பாலை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். காய்ச்சாத பச்சை பாலில், பஞ்சை நனைத்து அந்தப் பஞ்சை கொண்டு உங்கள் முகத்தை நன்றாகத் துடைத்து எடுத்தாலே போதும். உங்கள் வீட்டில் பஞ்சு இல்லை என்றால், காட்டன் துணியில் இப்படி செய்யலாம். முகத்தில் இருக்கும் அழுக்கு முதலில் சுத்தமாக வேண்டும்.

face1

அதன் பின்பாக தயார் செய்து வைத்திருக்கும் விழுதை, முகத்தில் கொஞ்சம் திக்காக அப்ளை செய்து விடுங்கள். இதை கைகளால் எடுத்து முகத்தில் அப்ளை செய்ய முடியவில்லை என்றால், சின்ன பிரஷ் அல்லது பஞ்சை பயன்படுத்தி முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். ஃபேஸ் பேக் அப்படியே 10 நிமிடங்கள் இருக்கட்டும். அதன் பின்பாக உங்கள் கைகளில் கொஞ்சம் தண்ணீர் தொட்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்து, பச்சைத் தண்ணீரால் கழுவி விட்டாலே போதும்.

- Advertisement -

எப்போதும் இயற்கையான ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி விட்டு, உடனே சோப்புப் போட்டு முகத்தைக் கழுவ கூடாது. (இந்த ஃபேஸ் பேக் கொழகொழப்பாக அப்ளை செய்வதற்கு, வசதியாக இருக்காது. கொஞ்சம் திறிதிறியாக, முகத்தில் அப்ளை செய்ய சிரமமாகத்தான் இருக்கும். சோபாவில் சாய்ந்து கொண்டு, முகத்தை மேல் பக்கமாக தூக்கி வைத்துக்கொண்டு, அப்படியே அப்ளை செய்து கொள்ளுங்கள்.)

Carrot juice benefits in Tamil

இந்த பேஸ்டை, ஃப்ரீசரில் இருக்கும் டிரைவில் ஊற்றி வைத்து, ஐஸ் கட்டியாக மாற்றி வைத்துக் கொள்ளலாம். ஒருநாள் இந்த பேஸ்டை, ஃபேஸ் பேக்காக பயன்படுத்துங்கள். மற்றொரு முறை அந்த ஐஸ் கியூபால், மெதுவாக முகத்தை மசாஜ் செய்து கொடுங்கள். 10 நிமிடம் மசாஜ் செய்தால் போதும்.

- Advertisement -

face-pack

இப்படி செய்யும் பட்சத்தில் முகத்தில் சீக்கிரம் சுருக்கம் விழாது. இளமையான தோற்றம் இருக்கும். ஒரு முறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டு கழுவிய உடனேயே, உங்களது முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். உங்கள் சருமம், தங்கம்போல் கட்டாயம் ஜொலிக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒரு முறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
வாழ்நாள் முழுவதும் இளமையோடு, ஆரோக்கியத்தோடு, அழகாக இருக்க வேண்டுமா? இன்றிலிருந்தே இதை குடிக்க தொடங்குங்கள்!

இது போன்ற மேலும் பல அழகு சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -