வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வரும் பொழுது ஒரு விதமான நாற்றம் வீசினால்! அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பணத்தடை நீங்க வீட்டை இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.

home-cash

ஒரு சில சமயங்களில் நம்முடைய வீட்டை ஒரு நாள் முழுவதும் அப்படியே போட்டு விட்டு வெளியில் எங்காவது சென்று இருப்போம். மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது, வீட்டிற்குள் நுழையும் பொழுதே ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இப்படி வீட்டிற்குள் நுழையும் பொழுது துர்நாற்றம் வீசும் வீடுகளில் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதாக அர்த்தமாகிறது. கோவிலுக்குள் எப்படி தெய்வீக மணம் கமழும் படியாக எப்போதும் இருக்கின்றதோ! அதே போல வீட்டிலும் இருந்தால் அந்த வீட்டில் நிச்சயம் செல்வ வளம் குறையவே செய்யாது! வருமான தடை என்பது இருக்கவே இருக்காது. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சுப விரயமாக செலவு செய்ய முடியும். அதை எப்படி சாத்தியமாகலாம்? என்பது தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

new home

நாம் எத்தனை நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்தாலும் துர்நாற்றம் என்பது வீசக்கூடாது. பத்து நாள் கழித்து வீட்டிற்குள் நுழையும் பொழுதும், அந்த வீட்டில் நல்ல ஒரு வாசனை வீச வேண்டும். அப்படி நம்முடைய வீட்டை நாம் வைத்துக் கொண்டால் தான் அந்த வீட்டில் பண தடை என்பது ஏற்படாமல் இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும். அதற்கு நாம் நம்முடைய வீட்டை எப்படி வைத்து இருக்கிறோம் என்பதில் தான் சூட்சமம் உள்ளது.

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக வீட்டின் கதவு, ஜன்னல்கள் என்று அத்தனையும் கட்டாயம் திறந்து வைக்க வேண்டும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலான சூரிய வெளிச்சம் நம் வீட்டிற்குள் விழுவது அவசியமாகும். எந்தவொரு வீட்டில் சூரிய வெளிச்சம் உள்ளே வர முடியாதபடி இருக்கின்றதோ! அந்த வீட்டில் நிச்சயம் பண தடை இருக்கும். மன நிம்மதி என்பது இருக்கவே செய்யாது. சூரிய வெளிச்சத்தை உள்ளே வர விடுங்கள். உச்சி வெயிலின் பொழுது அனைத்தையும் மூடி வைத்துக் கொள்ளலாம். அதுவரை திறந்து வைத்து சூரிய கதிர்களை வீட்டிற்குள் படுமாறு செய்ய வேண்டும்.

sunlight-home

துர்நாற்றம் வீசக்கூடிய எந்த ஒரு இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். குளியலறை, கழிப்பறை அடிக்கடி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல் அன்னபூரணி வாசம் செய்யும் சமையலறையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சமைக்கும் மற்றும் வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்றி குப்பைக் கூடையில் போடும் பொழுது கட்டாயம் அது மூடி வைத்திருக்க வேண்டும். திறந்து வைத்திருந்தால் அதிலிருந்து வரும் துர்நாற்றம் வீடு முழுவதும் பரவச் செய்யும். இரவில் எப்பொழுதும் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே சென்று விடுவாள் என்ற ஐதீகம் உண்டு. எனவே ஒரு நாளில் நீங்கள் சேர்த்து வைக்கும் குப்பைகளை மறுநாள் காலையில் வீட்டில் இருந்து வெளியேற்றி விட வேண்டும்.

- Advertisement -

குறைந்தது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது வீடு முழுவதையும் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மாதக்கணக்கில் ஒட்டடை அடிக்காமல் இருந்தால் வீட்டில் கட்டாயம் எதிர்மறை ஆற்றல் பெருகும் துவங்கிவிடும். அடிக்கடி பிரச்சனைகளும், சண்டை, சச்சரவுகளும், பணக் கஷ்டமும் வரும். குழந்தைகளின் கல்வியில் மந்தநிலை ஏற்படும். ‘சுத்தம் சோறு போடும்’ என்ற பழமொழி இதற்கு சரியான உதாரணமாக இருக்கும். வீட்டில் எப்பொழுதும் தெய்வீக மணம் கமழ வைத்துக் கொள்ள வேண்டும்.

vastu-direction

அதற்கு சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பட்டை, குங்கிலியம் ஆகிய மூலிகை பொருட்களை ஒரு சிறிய கண்ணாடி பௌலில் போட்டு வீட்டின் வடகிழக்கு திசையில் யாருடைய கால்களிலும் படாத வண்ணம் மேல்புறமாக ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். அதிலிருந்து வரும் மணம் வீடு முழுவதும் பரவி தெய்வீக ஆற்றலை உண்டு செய்யும். வீட்டை நீங்கள் இப்படி வைத்துக் கொண்டால் நீங்கள் எத்தனை நாள் கழித்து வீட்டிற்குள் வந்தாலும் துர்நாற்றம் எதுவும் வீசாமல், தெய்வீக மணம் கொண்ட நேர்மறை அதிர்வலைகளை பெற முடியும். இதனால் வீட்டில் கட்டாயம் மடமடவென செல்வ நிலை உயரும்.

இதையும் படிக்கலாமே
கோவிலில், மற்றவர்கள் ஏற்றிய தீபச்சுடரில் இருந்து, நம்முடைய வேண்டுதலுக்காக தீபத்தை ஏற்றி வைத்தால், நமக்கான வேண்டுதல் பலிக்காது? தீராத கஷ்டம் நம்மை வந்து ஒட்டிக் கொள்ளும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.