பத்தே நிமிடத்தில் முகக்கருமை நீங்க ஃபேஸ் பேக்

skin whiting tips
- Advertisement -

பொதுவாகவே ஆண்கள் பெண்கள் என அனைவருமே தங்கள் முகத்தை எப்பொழுதும் பளிச்சென்று பிரகாசமாக வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள். இயற்கையாகவே நல்ல நிறத்துடன் இருப்பவர்கள் கூட மேலும் தங்கள் நிறத்தை கூட்டிக் கொள்ள தான் ஆசைப்படுவார்கள். அப்படி இருக்கையில் கருமை நிறமானவர்கள் தங்கள் நிறத்தை மாற்ற நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இப்போதைய காலக்கட்டத்தில் நல்ல நிறத்துடன் இருப்பவர்கள் கூட இந்த சுற்றுச்சூழல், வெயில் காரணமாக நிறம் மாறித் தான் போகிறார்கள். இந்த அழகு குறிப்பு பதிவில் ஆண்கள் பெண்கள் நிறமாக இருப்பவர்கள் கருமை நிறம் கொண்டவர்கள் என அனைவரும் பயன்படுத்தக் கூடிய ஒரு அருமையான அதே நேரத்தில் எளிமையான முறையில் செய்ய கூடிய ஃபேஸ் பேக்கை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முகம் பளிச்சென்று மாற ஃபேஸ் பேக்

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க நாம் கடைகளில் சென்று எதுவும் வாங்க தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை போதும். முதலில் இரண்டு ஸ்பூன் பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு. இதற்கு வெள்ளை உளுந்தை பயன்படுத்துங்கள். இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடருடன் ரெண்டு ஸ்பூன் கோதுமை மாவையும் கலந்து ஒரு காற்று போகாத பாட்டில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இது தான் நாம் ஃபேஸ் பேக் தயாரிக்க பயன்படுத்த போகும் முக்கியமான பொருள். இப்போது உங்கள் முகத்திற்கு இந்த பேக்கை போடுவதற்கு முன்பாக அந்த பவுடரில் இருந்து இரண்டு ஸ்பூன் மட்டும் ஒரு பவுலில் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் ஒரு ஸ்பூன் கட்டியான அதே நேரத்தில் அதிகம் புளிக்காத தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் இதை கலக்க ரெண்டு ஸ்பூன் பால் சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு காய்ச்சியப் பால் காய்ச்சாத பால் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் சேர்த்து நல்ல பேஸ்ட் போல குழைத்து கொள்ளுங்கள்.

இப்போது முகத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகு ஈரம் இல்லாமல் துடைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த பேக்கை போட்டு இரண்டு நிமிடம் லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பிறகு 10 நிமிடம் உங்கள் முகத்தில் இதை அப்படியே விட்டு விடுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை துடைத்து பாருங்கள் 10 நிமிடத்திற்கு முன் பார்த்த முகம் தானா இது இப்படி பளிச்சென்று உள்ளதே என்று நீங்களே ஆச்சரியப் படுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: வெண்ணெய் அழகு குறிப்பு

இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வெளியில் எங்கு சென்று வந்தால் உடனே போடுங்கள். முகக்கருமை உடனே நீங்கி விடும் அது மட்டும் இன்றி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்துங்கள். இதில் எந்தவிதமான கெமிக்கலும் இல்லாததால் பயன்படுத்தும் போது எந்த மாதிரியான பிரச்சினையும் சருமத்திற்கு ஏற்படாது. முக கருமையை நீக்கும் இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -