வடை மாவை இதுவரைக்கும் கையால் தொட்டதே இல்லை என்பவர்கள் கூட, 1 நிமிஷத்துல, 100 உளுந்து வடை போடலாம். இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா.

vadai
- Advertisement -

பண்டிகை காலத்தில் இந்த உளுந்து வடை சுடுவது என்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவால். நிறைய பேர் வீட்டில் கிரைண்டரில் தான் உளுந்து ஆட்டி வடை சுட வேண்டும். அப்போதுதான் நல்லா வரும் என்று சொல்லுவார்கள். ஆனால் மிக்ஸி ஜாரிலும் உளுந்து மாவை ஆட்டி சாஃப்டான வடை சுட முடியும். அதற்கு சில டிப்ஸ் எல்லாம் இருக்கு. வாங்க சூப்பரான உளுந்து வடையை மிக்ஸி ஜாரில் மாவு ஆட்டி, சுலபமாக எப்படி சுட்டு எடுக்கலாம் என்று இந்த ரெசிபி மூலம் தெரிந்து கொள்வோம். வடையை கையால் தட்டி விடவே தெரியாது என்பவர்களும் இன்னைக்கு இந்த பதிவை படிச்சா, வடையை தட்டிப் போட்டு சூப்பரா சுட்டு எடுக்கலாம்.

செய்முறை 

200 இல் இருந்து, 250 கிராம் அளவு உளுந்தை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை தண்ணீரை ஊற்றி அலசி கீழே கொட்டி விட்டு, நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் உளுந்தை ஊற வைத்து விடுங்கள். உளுந்து நன்றாக ஊறி வந்த பிறகு, சுத்தமாக தண்ணீரை வடிகட்டி விட்டு, இந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக ஐஸ் கட்டிகள் போட்டு அரைத்தால் உளுந்து மாவு புசுபுசுவென சூடு ஆகாமல் அரைபடும். (ஐஸ் கட்டிகளை போட்டு அரைத்தால், தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது.) உளுந்தை முதலில் கொரகொரப்பாக ஒன்றும் இரண்டுமாக தண்ணீர் ஊற்றாமல் பல்ஸ்மோடில் ஒட்டி விட்டு, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் அல்லது ஐஸ் கட்டி போட்டு அரைத்தால் உளுந்து மாவு புசுபுசுவென கிடைக்கும்.

- Advertisement -

ஐஸ் கட்டிகள் இல்லை என்றால் ஊறிய பின்பு இந்த உளுந்தை அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கலாம். ஜில்லுனு இருக்கக் கூடிய உளுந்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்தால், உளுந்து சீக்கிரம் சூடாகாமல் புசுபுசுவென அரைபட்டு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரைத்த இந்த உளுந்து மாவை எடுத்து ஒரு அகலமான கிண்ணத்தில் போட்டுக்கோங்க. 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு போட்டு, உங்கள் கையைக் கொண்டு அந்த உளுந்து மாவை நன்றாக கலக்க வேண்டும்.

- Advertisement -

ஒரே பக்கமாக வட்ட வடிவில் மாவை அடித்து கலக்கி விட்டால், மாவு புசுபுசுவென நன்றாக பொங்கி வரும். கையில் கலக்கும் போதே. (உளுந்து மாவில் விரல்களை உள்ளே விட்டு, இங்கிலீஷில் O போடுவோம் அல்லவா. இந்த O மாதிரியே ரவுண்டா மாவை விரல்களால் கலந்து கொண்டே இருக்க வேண்டும்.

5 நிமிடம் கலந்து விட்டு பிறகு இந்த மாவில் மிளகு, சீரகம், இஞ்சி துருவல், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பெருங்காயம் சிறிதளவு போட்டு மீண்டும் கலந்து வடை தட்டி விட வேண்டும். (கையால் அடிக்க சிரமமா. உங்க வீட்டில் பீட்டர் இருக்குதா, அந்த பீட்டரை உளுந்து மாவில் வைத்து ஒரு நிமிடம் அப்படியே அடித்துவிட்டால் ஐஸ்கிரீம் போல மாவு புசுபுசுவென பொங்கி வரும்.)

- Advertisement -

இங்கே தான் சிரமமே இருக்கிறது. வாழை இலையில் தண்ணீரைத் தொட்டு வடையை தட்டி விட்டாலும் ஷேப் வரவில்லை. கையால் வடை விட தெரியவே தெரியாது. என்ன செய்யலாம்.

ஒரு டம்ளர் எடுத்துக்கோங்க. அந்த டம்ளருக்கு மேலே முதலில் ஒரு காட்டன் துணியை போட்டு ரப்பர் பேண்ட் போட்டுக்கோங்க. அந்த துணிக்கு மேலே ஒரு மைக்கா கவர் போட்டு ரப்பர் பேண்ட் டைட்டாக போட்டுருங்க. இப்போது இந்த கவருக்கு மேலே தான் வடை தட்ட போகின்றோம். மைக்கா கவருக்கு மேலே தண்ணீர் தொட்டு துடைத்து விட்டு, தயாராக இருக்கும் வடை மாவிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து வைத்து லேசாக தட்டிவிட்டு, விரலை தண்ணீரில் தொட்டு, வடைக்கு நடுவே ஓட்டை போடுங்க. இப்போது இந்த டம்ளரை அப்படியே கொண்டு போய், டம்ளருக்கு மேலே தட்டி இருக்கும் வடையை சூடாக இருக்கும் எண்ணெயில் சாயுங்க.

இதையும் படிக்கலாமே: வீட்டிலேயே தேன்குழல் முறுக்கு சுடுவது இவ்வளவு ஈஸியா? கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ரெசிபி மட்டும் தெரிந்தால் போதும் வீட்டிலேயே மொறு மொறு முறுக்கு சுட்டு அசத்தலாம்.

டம்ளருக்கு மேலே கவரில் தட்டி வைத்திருக்கும் வடை மாவு, சறுக்கிக் கொண்டு போய் எண்ணெயில் விழுந்து விடும். அவ்வளவுதான் சூப்பரான ஷேப்பில் மெதுவடை தயார். கடகடவென எண்ணெய் சட்டி முழுவதும் வடையை தட்டி போட்டு விடலாம். பிறகு பொன்னிறமாக சிவக்க விட்டு எடுத்தால் சூப்பரான வடை தயார். ட்ரை பண்ணி பாருங்க நீங்க வேணும்னா இந்த மெத்தடை.

- Advertisement -