எவர்சில்வர் பாத்திரத்தில் பால் சுண்டி தீய்ந்து போய் விட்டதா? 5 நிமிஷத்துல கை கூட வைக்காமல் சுத்தம் செய்வது எப்படி?

milk-burnt-vessel
- Advertisement -

வீட்டில் அன்றாடம் சமைக்கும் பொழுது மற்ற ஏதாவது ஒரு பொருட்கள் அடுப்பில் வைத்து இருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால் இந்த பாலை மட்டும் வைத்து விட்டு எங்கேயும் செல்லவே முடியாது. அப்படி ஒரு வேளை பாலை வைத்து விட்டு சென்று விட்டால், சென்ற மறுகணமே பால் பொங்கி ஸ்டவ் முழுவதும் வீணாகி விடும். இவ்வளவு நேரம் அங்கேயே தானே நின்று கொண்டிருந்தோம்! அதற்குள் பால் பொங்கி விட்டது என்று பல முறை வருத்தப் பட்டிருப்போம். அதை விடக் கொடுமை பாலை வைத்து விட்டு சில சமயங்களில் மறந்தே போய் விடுவோம்.

milk-boiling

பால் தீய்ந்து பாத்திரம் அடிப்பிடித்து வீணாகிப் போயிருக்கும். அந்த கரையை போக்குவதற்கு நாம் படாதபாடு பட வேண்டும். ஆனால் இந்த முறையை பயன்படுத்தினால் ஐந்தே நிமிடத்தில் கை கூட வைக்காமல் தீய்ந்து போன பால் பாத்திரம் புத்தம் புதியதாக மின்னும். அதை எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பால் பாத்திரம் எப்பொழுதும் தனியாக வைத்திருப்பது மிகவும் நல்லது. வெவ்வேறு பாத்திரங்களில் பாலைக் காய்ச்சினால் அடிக்கடி பால் திரிந்து போகும் நிலை வரலாம். திடீரென பாலை பார்க்காமல் விட்டு விட்டு பாத்திரம் அடிப்பிடித்து கருகிப் போய் விட்டால் உடனே பதட்டம் கொள்ள தேவை இல்லை. சிறிது நேரம் வெறும் தண்ணீரில் அந்த பாத்திரத்தை கையோடு ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும்.

baking-soda

அதன் பிறகு வேறு ஒரு புதிய தண்ணீரை அந்த பாத்திரம் முழுவதும் நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா போட்டுக் கொள்ள வேண்டும். பேக்கிங் சோடா போடும் பொழுது தண்ணீர் ஓசையுடன் நுரை பொங்கி வரும். பின்னர் அதில் 2 டீஸ்பூன் அளவிற்கு வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் வினிகர் நீங்கள் வைத்திருக்கா விட்டால் எலுமிச்சைச் சாறு ஒரு மூடி அளவிற்கு விதைகள் நீக்கி சாறு எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து 5 நிமிடத்திற்கு கொதிக்க வையுங்கள். இந்த கலவையுடன் தண்ணீர் நன்கு கொதித்து வரும் பொழுது மேலே எழும்பும் தண்ணீரை பாத்திரத்தில் கை பிடிகளில் இருக்கும் விடாப்பிடியான கரைகளில் படுமாறு ஸ்பூன் கொண்டு தடவி விடுங்கள். தண்ணீர் நன்கு கொதித்ததும் அடியிலிருக்கும் விடாப்பிடியான பால் கரை தானாகவே நீங்கி விடுவதை நாம் பார்க்கலாம். பின்னர் அந்த தண்ணீர் ஆறும் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். கொதித்த தண்ணீர் ஆறியதும் தனியே வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை பயன்படுத்தி வெளிப்புறங்களில் இருக்கும் கரைகளையும் அகற்றி விடலாம்.

vessels

எவ்வளவு கடினமான பால் கரையாக இருந்தாலும் இந்த முறையை பயன்படுத்தி செய்யும் பொழுது நிச்சயமாக முக்கால் பாகம் கறை நீங்கி விட்டிருக்கும். அதன் பிறகு மீதம் எடுத்து வைத்துள்ள தண்ணீரை ஊற்றி அதில் சோப் அல்லது பாத்திரம் தேய்க்கும் லிக்விட் பயன்படுத்தி லேசாக எப்போதும் போல் தேய்த்து விட்டால் போதும். பாத்திரம் புத்தம் புதியதாக மின்னும். பொதுவாக பால் பாத்திரத்தை தேய்ப்பதற்கு நிறையவே சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து கொதிக்க வைக்கும் பொழுது எந்த விதமான விடாப்பிடியான கரைகளும் பாத்திரத்தில் இருந்து எளிதாக நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு ஃபிளாஸ்க் உள்ளே கறை பிடிச்சு, கெட்ட வாடை அடிக்குதா? அந்த ஃபிளாஸ்கை இனி தூக்கி போட வேண்டாம். புதுசு போல மாற்ற சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -