கோவிலில் இறைவனின் அருளை பெற இதை செய்தால் போதும்

Temple

இறைவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. நம்மை எப்போதும் காத்தருளுகின்ற இறைவனை நாம் எங்கும் வழிபடலாம் என்றாலும் அந்த தெய்வத்தின் அருளை நாம் முழுமையாக பெற விஞ்ஞான முறைப்படி கட்டப்பட்டது தான் கோவில்கள். ஆனால் அக்கோவில்களில் இருக்கும் இறைவனை வழிபட்டும் தங்களின் விருப்பங்கள் நிறைவேறவில்லை என சிலர் வருந்துகின்றனர். அதற்கு காரணம், நாம் வழிபடும் முறைகளில் இருக்கும் சில தவறைகள் தான். எனவே கோவில்களில் வழிபடுவதன் முழு பலன்களை பெறும் வழிமுறைகளை இங்கு காண்போம்.

Gopuram

கோவிலுக்கு செல்லும் போது நாம் நன்றாக குளித்து நமது உடலை தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு நமது மனதில் மகிழ்ச்சி, கோபம், துக்கம் போன்ற எந்த விதமான உணர்வுகளும், தீய எண்ணங்களும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நமது ஆன்மாவில் இறைவன் நிறைந்திருக்க வேண்டும். எந்த ஒரு கோவிலுக்குச் சென்றாலும் அந்த கோவிலின் ராஜ கோபுரத்தை அதன் கீழே இருந்து, இரு கரங்களை தலைக்கு மேலே சேர்த்து வணங்குவதால் அந்த கோபுரத்தின் வழியே அப்பிரபஞ்ச சக்தி நம் உடலுக்குள் இறங்கும். இப்படி வணங்கிய பின்பு வலது காலை எடுத்து முதலில் வைத்து கோவிலுக்குள் செல்ல வேண்டும். ஏனெனில் நமது உடலின் வலது பகுதி நேர்மறை சக்திகள் நிறைந்திருக்கும் பகுதி என்பதால் அதன் ஆற்றல் பெருக உடலின் வலது பகுதியின் கை கால்களை நன்மையான விடயங்களுக்கு பயன்படுத்தினர் நம் முன்னோர்கள். அதை நாம் பின்பற்றிவருகிறோம். கோவிலுக்குள் வந்தவுடன் நேரே கோவிலின் கொடிமரத்திற்கு சென்று முதலில் தொட்டு வணங்குவதால், நமது உடலில் பஞ்சபூதத்தில் ஆகாயத்தின் நன்மையான அதிர்வுகள் நம் உடலில் நிறையும்.

பிறகு கோவிலின் இறைவனையும் இறைவியையும் வணங்க வேண்டும். அப்போது வழங்கப்படும் திருநீறு, குங்குமம் போன்ற பிரசாதத்தை நமது நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இதானால் நமது என்ன ஓட்டங்களை ஒருநிலை படுத்தி இறைவனை மட்டுமே மனதில் நிலை நிறுத்த முடியும். அது நம் மனதில் ஒருவித இன்பத்தையும் பரவச நிலையையும் உண்டாக்கும். பெரும்பாலானோர் தெய்வத்திற்கு தீபாராதனை காட்டும் போது சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு வேண்டிக்கொள்கின்றனர். ஆனால் இது ஒரு தவறான செயல் ஆகும்.

Thanjai periya kovil

ஒரு கோவிலின் மூலவர் அல்லது உற்சவர் தெய்வத்திற்கு தீபாராதனை காட்டும் போது, அக்காட்சியை கண்களை திறந்து நன்றாக தரிசித்து அக்காட்சியை நம் மனதில் பதியவைப்பதால் அந்த இறைவனின் அருள் நம்முள் நிறைந்திருக்கும். ஆலயத்தில் பிரதான இறைவனை மட்டும் வணங்கி விட்டு சிலர் அக்கோவிலின் உப தெய்வங்களை வணங்காமல் வந்து விடுகின்றனர். இது அந்த உப தெய்வங்களின் கோபத்தை சம்பாதித்து தரும். எனவே அந்த உப தெய்வங்கள் அனைத்தையும் ஒருவர் வணங்க வேண்டும்.

- Advertisement -

Sivan Temple

கோவில் பிரகாரத்தை சுற்றுகையில் இறைவனின் நாமம் அல்லது மந்திரத்தை ஜபிக்கலாமே தவிர குடும்ப விடயங்களை பேசிக்கொண்டு பிரகாரத்தை சுற்ற கூடாது. கோவில் பிரகாரத்தையும், நவகிரகங்களையும் சுற்றிய பிறகு கண்களை மூடிக்கொண்டு இறைவனை மட்டுமே மனதில் நிலை நிறுத்தி நம்மால் எவ்ளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கண்டிப்பாக தியான நிலையில் அமர வேண்டும். இவற்றை கடைபிடிப்பதால் நமக்கு அக்கோவிலின் நன்மையான சக்திகளும் இறைவனின் ஆசிகளும் கிடைக்கும். அதோடு நமது மனத்திலும் சிந்தையிலும் புது தெளிவு பிறக்கும். அதனால் நமக்கான பிரச்சனைகள் அனைத்திற்கும் சரியான ஒரு தீர்வு நமது மனதில் உதிக்கும்.

இதையும் செய்யலாமே:
ஆடி மாதத்திற்கு இத்தனை சிறப்புகளா ? வாருங்கள் பார்ப்போம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்

English Overview:
Here we explained how we need to worship the Hindu God in a temple. We can say it as Kovil Valipadu murai or Kovil vazhipadu murai in Tamil.