உண்டியலில் முதலில் இந்த பொருளை போட்டால் பணம் சீக்கிரம் சேரும். உண்டியல் நிரம்பி வழியும்.

date-hundi
- Advertisement -

சேமிப்பு என்பது நம்முடைய வாழ்க்கையில், எதிர்காலத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு அன்றாடம் ஒரு சிறு தொகையாவது சேமித்து வைக்க வேண்டும். சேமிப்பு என்றாலே நம்முடைய பழக்க வழக்கத்தில் முதலில் நாம் நினைவுக்கு வருவது உண்டியல். உண்டியலில் பணம் சேர்க்க வேண்டும் என்றால் சிறு பிள்ளைகளிலிருந்து, பெரியவர்கள் வரை கொள்ளை ஆசை இருக்கும். உண்டியலில் சீக்கிரம் பணம் சேர்க்கக் கூடிய சூட்சமமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சேமிப்பை அதிகரிக்கும் பரிகாரம்
குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கிக் கொடுக்கும் போது, கூடுமானவரை மண்ணால் செய்யப்பட்ட உண்டியலை வாங்கி கொடுங்கள். அந்த உண்டியலுக்கு மேலே அழகு படுத்துவதற்கு தேவையான சுவாமி படங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். ஸ்டிக்கர் விற்கிறது அல்லவா. சரஸ்வதி ஸ்டிக்கர், விநாயகர் ஸ்டிக்கர், குபேரர் ஸ்டிக்கர் இப்படி குழந்தைகளுக்கு விருப்பமான ஒரு சுவாமியின் புகைப்படத்தை வாங்கிக்கொடுத்து அந்த உண்டியலில் ஒட்டி விடுங்கள். விருப்பப்பட்டால் மண் உண்டியலுக்கு மேல் வர்ணம் கூட திட்டலாம்.

- Advertisement -

சேமிப்பை தொடங்குவதற்கு வளர்பிறை நாட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. நிறைந்த பௌர்ணமி, வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமை, வளர்பிறையில் வரும் புதன்கிழமை கூட உண்டியலில் முதலில் பணம் போடலாம். முதல் முதலாக உண்டியலில் பணத்தை போடுவதற்கு முன்பு, பூஜை அறையில் முதலில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். அந்த உண்டியலில் வெந்தயம் 3, கிராம்பு 3, டைமன் கல்கண்டு 3, இந்த பொருட்களை எல்லாம் போட்டுவிட்டு, அதன் பின்பு அதில் ஒரு 11 ரூபாயை முதலில் போடுங்கள். குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி அந்த உண்டியலில் பணத்தை போட வேண்டும்.

இந்த சேமிப்பில் போடக்கூடிய பணம் சுப செலவுக்காக செலவாக வேண்டும் என்ற, பிரார்த்தனையை தெய்வத்திடம் வைத்து அதன் பின்பு போட வேண்டும். தேவைப்பட்டால் மனதிற்குள் சுபச் செலவுக்காக, என்ற வார்த்தையை சொல்லிவிட்டு ஒவ்வொரு முறையும் அந்த உண்டியலில் பணத்தை போடுவது மேலும் சிறப்பு.

- Advertisement -

பூஜை அறையில் வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். பெண்கள் சேமிக்க விரும்பினால் நீங்கள் சேமிக்க கூடிய உண்டியலை, சமையலறையில் அலமாரியில் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு ரொம்ப ரொம்ப ராசியாக இருக்கும். அதே சமயம் சமையலறையில் பணம் சேர்த்து வைப்பது என்பது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக் கூடிய விஷயம்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாத பிரதோஷ நேரத்தை யாரும் தவற விடாதீங்க. இன்று இந்த 1 வார்த்தையை சொன்னால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் பஞ்சாக பறந்து போகும். இக்கட்டான சூழ்நிலை கூட இன்பமாய் மாறும்.

பிள்ளைகளின் படிப்பு, நகை வாங்க அல்லது வீட்டுக்கு தேவையான ஏதாவது பொருட்கள் வாங்க, பூஜையறை ஜாமான்கள் வாங்க என்று இப்படி சுபசலவுக்காக உண்டியலில் பணம் சேர்த்து பொருட்கள் வாங்குவது என்பது ஒரு நல்ல விஷயம். சேமிப்பை உங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அது அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -