ஐஸ் கட்டிகளை சமையலறையில் இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா? வேலையை சுலபமாக்கும் பயனுள்ள சமையல் குறிப்புகள்.

ice-cube
- Advertisement -

சமையலறையில் நாம் எத்தனையோ வேலைகளை செய்வதற்கு சிரமப்படுகிறோம். அதில் சில வேலைகளை சுலபமாக செய்து முடிப்பதற்கு இந்த ஐஸ் கட்டிகள் நமக்கு உபயோகமாக இருக்கும். ஐஸ் கட்டிகளை சமையலறையில் எந்தெந்த வேலைக்கு, எந்தெந்த விதத்தில், எப்படி எல்லாம் உபயோகமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்பதை பற்றிய சில டிப்ஸ்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த டிப்ஸ்களை தெரிந்து கொண்டு உங்களுக்கு எந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கின்றதோ, அதை உங்கள் வீட்டு சமையலறையில் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா வேலை சுலபமாக முடியும்.

Tip No 1:
வெரைட்டி ரைஸ்சுக்கு சாதம் வடிக்கும் போது நிறைய பேருக்கு அதை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வடிக்கவே தெரியாது. எப்படித்தான் சாதத்தை வடித்தாலும் அது ஒன்றோடு ஒன்று ஒட்டி பிசுபிசுவென இருக்கும். வெரைட்டி ரைசுக்கு சாதத்தை உதிரி உதிரியாக வடிக்க ஐஸ்கட்டிகளை எப்படி பயன்படுத்தலாம். அரிசியை நீங்கள் தண்ணீரில் ஊற வைக்கும்போது அந்த அரிசியில் நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகளைப் போட்டு, ஐஸ்கட்டிகளுடன் சேர்ந்த தண்ணீரில் சாதம் 30 நிமிடங்கள் ஊறட்டும். அதன் பின்பு எப்போதும் போல அரிசியை கழுவி குக்கரில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டு அரிசி எத்தனை விசில் வைத்தால் வேகுமோ அத்தனை விசில் வைத்தால் போதும்.

- Advertisement -

குக்கரில் விசில் வந்து முடிந்ததும் பிரஷர் அடங்கியவுடன் உடனடியாக குக்கரில் இருக்கும் சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி விட வேண்டும். சுடு சாதம் குக்கரில் அப்படியே இருந்தால் சாதம் குழையத்தான் செய்யும். இதேபோல் சாதம் வெந்ததும் குக்கரில் உள்ள சாதத்தை பெரிய கரண்டியை போட்டு அப்படியே கிளறி விட கூடாது. சிறிய ஸ்பூன் கொண்டு லேசாக கிளறி விட்டு அதன் பின்பு அகலமான பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆரம்பித்தால் வெரைட்டி ரைஸ் செய்வதற்கு சாதம் சரியான பக்குவத்தில் தயாராகும். குண்டானில் சாதம் வடிப்பதாக இருந்தாலும் இதே முறையை பின்பற்றலாம். 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சாதத்தை வேக வைத்தாலும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

oil-can2

Tip No 2:
நம்முடைய வீட்டில் நீண்ட நாட்களாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தி வந்தால் அதனுடைய நிறம் மங்கிப் போய்விடும். பார்ப்பதற்கு பழைய கண்ணாடி பாட்டில் போல மாறிவிடும். பழைய கண்ணாடி பாட்டிலுக்குள் இரண்டு அல்லது மூன்று ஐஸ்கட்டிகளைப் போட்டு, மூடி போட்டு, குலுக்கி விட வேண்டும். உள்ளிருக்கும் ஐஸ்கட்டியை பாட்டிலில், ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்பு அந்த கண்ணாடி பாட்டிலை கழுவிப் பாருங்கள். பழைய கண்ணாடி பாட்டில் கூட புதுசு போல மாறிவிடும்.

- Advertisement -

Tip No 3:
சமையலறையில் இருக்கும் எண்ணெய் பாத்திரங்களை கழுவுவது என்பது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய வேலை. எண்ணெய் பாத்திரத்திற்கு உள்ளே இருக்கும் பிசுபிசுப்பை சுத்தமாக சுலபமாக நீக்கவே முடியாது. எண்ணெய் பாத்திரத்திற்கு உள்ளே முதலில் மூன்று அல்லது நான்கு ஐஸ்கட்டிகளை போட்டுக்கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் கல் உப்பையும் சேர்த்து, கூடவே பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஜெல்லை இதோடு ஊற்றி, மூடி போட்டு தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே நன்றாக குலுக்கி விட வேண்டும். உள்ளே போட்ட பொருட்களோடு, எண்ணெய் பாட்டிலை குலுக்கிய உடன், இந்த எண்ணெய் பாத்திரத்தை அப்படியே 5 நிமிடங்கள் விட்டு விடுங்கள். அதன் பின்பு அதன் உள்ளே இருக்கும் ஐஸ் கட்டிகள் உப்பு இவைகளை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, மீண்டும் ஜெல் ஊற்றி நார் போட்டு லேசாகத் தேய்த்தால் எண்ணெய் பாத்திரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகள் சுலபமாக நீக்கிவிடும். முயற்சி செய்து பாருங்கள்.

idli-mavu

Tip No 4:
நிறைய பேர் வீடுகளில் இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்து உபரி ஆகாது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஊற வைத்த உளுந்தை 1/2 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து அதன் பின்பு கிரைண்டரில் போட்டு ஆட்டலாம். பிரிட்ஜில் வைக்க மறந்து விட்டால் உளுந்தை ஆட்டும்போது ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ்கட்டிகளை சேர்த்து ஆட்டங்கள். உளுந்து புசுபுசுவென பொங்கி வரும். அதேசமயம் கிரைண்டரும் அதிகப்படியாக சூடாகி நீங்கள் அரைக்கும் மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்கும்.

cleaning

Tip No 5:
சமையலறையில் ஒட்டி வைத்திருக்கும் டைல்ஸில் எண்ணெய் பிசுபிசுப்பு படிந்திருக்கும். இதை சுலபமாக சுத்தம் செய்ய ஐஸ்கட்டிகளை எப்படி பயன்படுத்துவது. ஐஸ் கட்டியை ஒரு கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று ஐஸ் கட்டிகளை வைத்து, கைக்குட்டையை மடித்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கை குட்டையை பயன்படுத்தி உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள டயில்ஸை சுத்தம் செய்து பாருங்கள். கைக்குட்டையின் உள்ளே இருக்கும் ஐஸ் கட்டி எண்ணெய் பிசுக்கு படிந்த இடத்தை சீக்கிரமே சுத்தம் செய்துவிடும். டயில்ஸில் இருக்கும் அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். பார்ப்பதற்கு டயில்ஸ் பளபளப்பாகவும் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -