டிபன் செய்ய வீட்டில் எதுவும் இல்லையா? என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? மதியம் வடித்த சாதம் மிச்சமாக இருந்தால், அதை வைத்து சூப்பரா ஒரு டிபன் செய்யலாம். யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது….

rice tiffin
- Advertisement -

இல்லத்தரசிகள் எப்போதும் காலையில் என்ன செய்வது? மதியம் என்ன குழம்பு வைப்பது? என்ன காய் செய்வது? இரவில் என்ன டிபன் செய்வது? என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக அரைத்த மாவு காலி ஆகிவிட்டால் டிபன் செய்யும் யோசனை பயங்கரமாக இருக்கும். வீட்டில் எதுவுமே இல்லை என்ற சூழ்நிலையிலும் நாம் வடித்த சாதத்தில் மீதம் இருந்தால் அதை வைத்துக் கூட அருமையாக சூப்பரா ஒரு டிபன் செய்துவிடலாம். யாராலையும் மீதமான சாதத்தை வைத்து தான் இந்த டிபனை செய்திருக்கிறோம் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு ருசியாக இருக்கும் அந்த டிபனை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

வீட்டில் எப்படி இருந்தாலும் ஒரு வேலையாவது அரிசியை வடித்து சாதம் சாப்பிடும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு நாம் வடித்த சாதம் மீதம் ஆகிவிட்டால் அதில் தண்ணீரை ஊற்றி பழைய சாதமாக நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைகள் அந்த பழைய சாதத்தை விரும்பி சாப்பிடுவது இல்லை. அதையும் மீறி சாப்பிட்டாலும் அவர்களின் உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் கொடுப்பது இல்லை. வசதியான வாழ்க்கை மேற்கொள்பவர்கள் பழைய சாதத்தை சாப்பிடுவதில்லை. அந்த நேரத்தில் மீதமான சாதத்தை அவர்கள் வீணாக்கி விடுவார்கள். அல்லது குப்பையில் கொட்டி விடுவார்கள். இவ்வாறு செய்யாமல் மீதமான சாதத்தை வைத்து இரவில் சூப்பரா ஒரு இடியாப்பத்தை செய்து கொடுப்பதால் சாதமும் வீணாகாது. அனைவரும் சாப்பிடுவார்கள்.

- Advertisement -

இதற்கு நாம் குக்கரில் வைத்த சாதத்தை உபயோகப்படுத்தக் கூடாது. பானையில் வடித்த சாதத்தை தான் உபயோகப்படுத்த வேண்டும். ஒரு கப் அளவு சாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு கப் அளவு அரிசி மாவை போட்டு மறுபடியும் நன்றாக அரைக்க வேண்டும். இப்பொழுது இந்த அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு அந்த மாவு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு மாவு இலகுவாக இல்லாத பட்சத்தில் நாம் சிறிது தண்ணீரை தெளித்து பிணைந்து கொள்ளலாம். அல்லது சாதத்தில் தன்மைகேட்ப தண்ணீர் அதிகமாக இருப்பது போல் தோன்றினால் நாம் சிறிது அரிசி மாவை அதில் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிணைந்து கொள்ளலாம். சாதத்தில் உப்பு போட்டு வடிப்பவர்கள் அதற்கு ஏற்றார் போல் உப்பை குறைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மாவு நன்றாக பிணைந்த பிறகு ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி அந்த தண்ணீர் கொதித்த பிறகு நாம் இடியாப்ப அச்சில் தயார் செய்து வைத்திருக்கும் மாவை சேர்த்து இடியாப்பம் பிழிந்து, அடுப்பில் வைத்து பத்து நிமிடம் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு எடுத்து விட வேண்டும். பார்ப்பதற்கு அப்படியே பிரஷ் ஆன இடியாப்பம் போலவே அரிசி மாவில் செய்த இடியாப்பம் போலவே தெரியும். யாராலும் இது மதியம் மீந்து போன சாப்பாட்டால் செய்யப்பட்ட இடியாப்பம் என்று கண்டுபிடிக்கவே முடியாது.

இதையும் படிக்கலாமே: வெறும் 10 நிமிடத்தில் பாவ் பஜ்ஜி சுவையில், மசாலா பிரட் டோஸ்ட் எப்படி செய்வது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த யம்மியான டிஷ்ஷை விருப்பமாக சாப்பிடுவார்கள்.

ஒருவேளை சோற்றுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு மத்தியில் மதியத்தில் சமைத்த சாப்பாட்டை வீணாக்காமல் இரவில் அதை டிபனாக செய்து கொடுப்பதன் மூலம் உணவை வீணாக்காமல் தடுக்க முடியும்.

- Advertisement -