இட்லிக்கும், தோசைக்கும் அரைத்த மாவு பக்குவம் தவறினாலும் பரவாயில்லை! சொதப்பல் மாவில், சூப்பரா இட்லி, தோசை சுட்டுவிடலாம்.

idli-dosai
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய வீடுகளில் அடிக்கடி செய்யக்கூடிய காலை உணவு, பெரும்பாலும் இட்லி தோசையாக தான் இருக்கிறது. இதற்கான மாவை நாம் அறைக்கும் போது, எவ்வளவு பக்குவமாக அறைதாலும், சிலசமயம் இட்லி கல்லு போல் இருப்பதும், வரவர என்று போவதும், இயற்கை தான். தோசை சுடும்போது மொறு மொறு வென்று, ஹோட்டல் தோசை போல் வரவில்லை என்ற குறை, தினம்தோறும் சமையலறையில் இருக்கும் பெண்களுக்கு கட்டாயம் வரும். இந்த இட்லி, தோசை இரண்டையும் சூப்பராக செய்வது எப்படி? என்பதைப் பற்றியும் இதோடு சேர்த்து சில குறிப்பையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Idli

நீங்கள் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவில், இட்லி ஊற்றுவதற்கு முன்பாக, தேவையான மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு சட்டி இட்லி ஊற்றி வைக்க வேண்டும் என்றால், அதற்கு தேவையான மாவில், 2 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணை ஊற்றி, மாவை நன்றாக கலக்கி விட்டு, அதன் பின்பு இட்லியை ஊற்றி வைத்து பாருங்கள்! இட்லி ஆறினாலும் வறண்டு போகாது. கல்லு போல் மாறாது. இதேபோல் இட்லி மாவு அரைக்கும் போது கொஞ்சம் தண்ணீர் பதத்தில் வந்து விட்டாலும், பரவாயில்லை. அந்த மாவை, 4 மணிநேரம் பிரிட்ஜில் வைத்துவிட்டு, அதன் பின்பு இட்லி ஊற்றி வைத்தோமேயானால் இட்லி சூப்பராக வரும். மாவு கெட்டி தன்மைக்கு மாறிவிடும்.

- Advertisement -

அடுத்ததாக தோசை. தோசை சுடுவதற்கு மாவை, ஒரு சிறிய பாத்திரத்தில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி வடித்த, கஞ்சி தண்ணீரை, சிறிதளவு அந்த தோசை மாவில் ஊட்டி நன்றாக கலக்கிக் கொண்டு, அதன் பின்பு தோசை ஊற்றுங்கள். தோசை சிவப்பு நிறமாகவும் இருக்கும். அதே சமயம் மொறுமொறுவென்று வரும். அதாவது கெட்டியான இட்லி மாவில், கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைத்து தோசை ஊற்றுவோம் அல்லவா? அந்த தண்ணீருக்கு பதிலாக, இந்த அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் ஊற்ற வேண்டும். அவ்வளவுதான்.

dosai-maavu

இதற்கு பதிலாக அரிசி கழுவிய தண்ணீர் இருந்தால் கூட, அதை சூடு படுத்தி தோசை மாவில் சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு முறை, அரிசியை நன்றாக கழுவி, அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். மூன்றாவது முறை கழுவிய தண்ணீரை, சூடுபடுத்தி பயன்படுத்துவதில் தவறில்லை.

- Advertisement -

சில பேர் வீட்டில் இரும்பு தோசை கல்லாக இருந்தால், அதில் சில சமயம் தோசை வராமல் ஒட்டிக்கொள்ளும். அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த தோசைக்கல்லை முதலில் நன்றாக சூடு படித்துவிட்டு, அதாவது அடுப்பை முழு வேகத்தோடு வைத்து தோசை கல்லிலை நன்றாக சூடுபடுத்தி விட வேண்டும். அதன் பின்பு, அந்த தோசைக்கல்லில், ஓரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் கருப்பு நிற காந்தலை எல்லாம், ஒரு கரண்டியை வைத்து செதுக்கி சுத்தம் செய்துவிட வேண்டும்.

dosai

அதன் பின்பாக, தோசைக்கல்லை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்துவிட்டு, அடுப்பில் வைக்க வேண்டும்,. சூடான தோசைக்கல்லில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி,  வெங்காயத்தை இரண்டாக வெட்டி, ஒரு பகுதியை வைத்து தோசைக்கல்லை நன்றாக துடைத்து எடுத்து விட வேண்டும். அதன் பின்பு, உங்கள் வீட்டில் வாழை இலை இருந்தால், அந்த வாழை இலையில், சிறிய துண்டு அளவிலான வாழை இலையை எடுத்து, சுருட்டி, எண்ணெய் தொட்டு கல்லை நன்றாக துடைத்துவிட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்யும் பட்சத்தில் உங்களது தோசைக்கல்லில் தோசை ஒட்டாமல் வரும் என்பதில் சந்தேகமே இல்லை. வாரத்திற்கு ஒரு முறை தோசைக்கல்லின் கருப்பை சுத்தம் செய்வது கட்டாயம் தேவை. அடுத்ததாக, சில பேர் வீடுகளில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கோதுமை மாவு, இப்படியாக அரைத்த மாவுகளில் சீக்கிரமே வந்து வந்து விடும். மிளகாய்த்தூள் மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, இப்படி காரம் சம்பந்தப்பட்ட பொருட்களில் சிறிதளவு உப்புத் தூளை சேர்த்து கலந்து வைத்தோமேயானால், அந்தப் பொடியில், சீக்கிரமாக வண்டு வராது. 6 மாதம் வரை வண்டு வராமல் இருக்கும்.

dosaikal

அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு இப்படிப்பட்ட மாவெல்லாம், சிலசமயம் இனிப்பு செய்வதற்காக பயன்படுத்துவோம். இப்படிப்பட்ட பொருட்களில் வெள்ளைத் துணியில் சிறிதளவு உப்பை கட்டிப்போட்டு வைத்தீர்கள் என்றால், அந்த மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கும். மேற்குறிப்பிட்டுள்ள குறிப்புகள் அனைத்தும் அன்றாட சமையல் வேலையில் நமக்கு தேவையான குறிப்புகள் தான். சமையலறையில் நாம் செய்யக்கூடிய வேலையானது சுத்தமாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் சூப்பராகவும் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சமயலறையில் இதை செய்தால் பிசுபிசுப்பும் இருக்காது பூச்சிகளும் இருக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Idli batter recipe Tamil. idli. Idli Tamil samayal. Soft idli preparation Tamil

- Advertisement -