வீட்டில் மீந்து போன இந்த மாவை செடிகளுக்கு ஊற்றினால் செழிப்பாக வளருமா? இதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

plant-idli-maavu
- Advertisement -

வீட்டில் வளர்க்கும் செடிகளுக்கு நம் வீட்டில் வீணாக கூடிய பல பொருட்கள் உரமாகி கொண்டிருக்கிறது. காய்கறி கழிவுகள், பழ கழிவுகள், வேக வைத்த தண்ணீர், அழுகிய உணவுப் பொருட்கள், காய்ந்த சருகுகள், இலைகள் என்று எது கிடைத்தாலும் இயற்கை உரமாக நம்முடைய செடிகளுக்கு போட்டு வருவதன் மூலம் செடிகள் செழிப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வகையில் நம் வீட்டில் இருக்கும் இந்த மாவை செடிகளுக்கு ஊற்றினால் அது செழிப்பாக வளருமா? இதில் மறைந்துள்ள உண்மை என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் அனுதினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது இட்லி மாவு! இட்லி, தோசைக்கு அரைக்க கூடிய இந்த இட்லி மாவு இல்லாமல் சமையலே செய்யவே முடியாது என்கிற அளவிற்கு மாறி போய்விட்டது. அடிக்கடி பயன்படுத்தக் கூடிய இந்த இட்லி மாவு மீந்து போவதால் ஒருவிதமான புளிப்பு தன்மை அதிலிருந்து உண்டாகிறது. இது செடிகளுக்கு உரமாக கொடுப்பதன் மூலம் செடிகள் பச்சை பசேல் என வளர்கிறது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் உண்மையில் இட்லி மாவு புளித்தாலும் அதில் பெரிதாக சத்துக்கள் ஒன்றும் கிடையாது. ஸ்டார்ச் நிறைந்துள்ள இந்த இட்லி மாவில் புளிப்பு தன்மை ஏற்படுவதால் நுண்ணுயிரிகள் பெருகுகிறது. இந்த புளிப்பு தன்மையை ஏற்படுத்தக்கூடிய அமிலம் செடிகளுக்கு உரமாக கொடுப்பதால் நுண்ணுயிரிகளுக்கு அது நல்ல சத்துள்ள உணவாக மாறுகிறது. இதனால் மண்ணில் இருக்கக்கூடிய நுண்ணுயிரிகள் நன்கு வளர்ந்து பெருகும்.

நுண்ணுயிரிகள் பெருகுவதால் செடிகளும் செழிப்பாக வளர்கிறது எனவே மண்ணை வளமாக்க கூடிய சத்து இந்த இட்லி மாவுக்கு உண்டு. எனவே இனி மீந்து போன இட்லி மாவை கீழே ஊற்றாமல் அதில் தாராளமாக மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் வரை உங்கள் மாவிற்கு ஏற்ப ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஒவ்வொரு செடிகளுக்கும் ஒரு மக் என்கிற விகிதத்தில் வாரம் ஒரு முறை நீங்கள் கொடுத்து வந்தால் போதும், உங்களுடைய மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் நல்ல ஊட்டச் சத்துள்ளவையாக வளர்ந்து பல்கி பெருகும்.

- Advertisement -

இதன் மூலம் நம்முடைய மண் தரமானதாக மாறுகிறது மேலும் இந்த வளத்தின் காரணமாக செடிகளின் வேர்களுக்கும் நல்ல சத்து கிடைத்து பச்சை பசேல் என செடிகள் செழிப்பாக வளரும். பட்டுப் போன செடிகளும், வளம் இல்லாத தொட்டியில் இருக்கும் மண்ணும் நல்ல வளம் பெற, செடிகள் செழித்து வளர துணை புரியக்கூடிய ஒரு அமில தன்மையை கொண்டுள்ள இந்த மீந்து போன இட்லி மாவு பயனுள்ளதாகவே இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் துளசி செடி வாடி போய் விட்டதே என்று நீங்களும் வாடி விடாதீர்கள். பத்து ரூபாய் செலவு செய்யுங்கள் போதும் உங்கள் துளசி செடி வளரும் ஆச்சரியத்தை நீங்களே நம்ப மாட்டீர்கள்.

எனவே நம் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு மாதம் இரண்டு முறை அல்லது வாரம் ஒரு முறையாவது மீந்து போன இட்லி மாவை இது போல தண்ணீரில் நீர்க்க கரைத்து பின்னர் உரமாக கொடுக்க வேண்டும். மேலும் இந்த உரத்தை கொடுக்கும் பொழுது பூச்சிகளும், எறும்புகளும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே அவற்றிலிருந்து செடிகளை பாதுகாக்க வேப்ப எண்ணெய் ஸ்ப்ரே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இட்லி மாவு மட்டும் அல்லாமல் அரிசி கழுவிய தண்ணீர், மீந்து போன சாதத்தில் இருக்கும் தண்ணீர் மற்றும் சாத கரைசலை கூட செடிகளுக்கு உரமாக போடலாம்.

- Advertisement -