உங்கள் வீட்டில் துளசி செடி வாடி போய் விட்டதே என்று நீங்களும் வாடி விடாதீர்கள். பத்து ரூபாய் செலவு செய்யுங்கள் போதும் உங்கள் துளசி செடி வளரும் ஆச்சரியத்தை நீங்களே நம்ப மாட்டீர்கள்.

- Advertisement -

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் பாடல் வரிகள் அனைவருக்கும் தெரிந்தது தான். செடி வளர்ப்புக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கிறீர்களா? ஆசை ஆசையாக செடி வாங்கி வந்து வளர்ப்பவர்களுக்கு இந்த பாடலில் வரி அர்த்தம் நன்றாக புரியும். ஒரு செடி வாங்கி வந்து வீட்டில் ஆசையாக வளர்த்துக் கொண்டு இருக்கும் போது அந்த செடி வாடி போனா அதை பார்க்க எத்தனை கஷ்டமாக இருக்கும் என்பதை கூற வார்த்தைகளே கிடையாது.

அதுவும் இந்த துளசிச் செடியை மருந்துக்காக அதிக அளவில் பயன்படுத்தினாலும் கூட பெரும்பாலும் இதை தெய்வமாகவே வைத்து வணங்கும் முறையும் நம் வழக்கத்தில் உள்ளது. அத்தகைய ஒரு செடி நம் வீட்டிற்கு வந்து வாடி போனால் அதில் ஏதேனும் தவறு இருக்குமா என்று யோசிக்கும் அளவிற்கு இந்த துளசி செடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வைத்திருப்பார்கள். அத்தகைய செடி வாடாமல் நல்ல முறையில் வளரவும் வாடிய செடியை கூட துளிர்க்க வைக்கவும் ஒரு சில வழிகளை கையாண்டாலே போதும் அது என்ன எப்படி என்பதை இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

துளசி செடி வாடி விட்டால் முதலில் நாம் வைத்திருக்கும் தொட்டியிலிருந்து அந்த செடியை வேறொரு தொட்டிக்கு மாற்றி விட வேண்டும். துளசி செடி வைக்க பயன்படுத்தும் தொட்டியில் மண் எப்போதும் தளர்வாகவே இருக்க வேண்டும். மிகவும் இறுகிய நிலையில் இருந்தால் செடியின் வேரானது பரவ முடியாமல் கட்டாயமாக வாடி விடும். இது துளசி செடிக்கு அவசியம் என்றாலும் மற்ற செடிகளுக்கும் இதே முறை தான் மண் எப்போதும் ஓரளவிற்கு தளர்வாக இருக்க வேண்டியது அவசியம்.

இப்போது அந்த புது தொட்டியில் மண்ணை நிரப்பிக் கொள்ளுங்கள். அந்த மண் உங்கள் வீட்டில் உள்ள மண்ணாக இருக்கலாம், தோட்டம் மண்ணாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தொட்டியில் மண் நிரப்பிக் கொள்ளுங்கள். ஆனால் இத்துடன் கண்டிப்பாக தேங்காய் நார் உரம் இருக்கும் அல்லவா அதை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இதை சேர்க்கும் போது தான் மண் இறுகாமல் அந்த தேங்காய் நார் உரம் ஆனது மணலை தளர்வாகவே வைத்திருக்கும். எனவே கட்டாயமாக செடி வைக்கும் போது தேங்காய் நார் உரம் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. இந்த துளசி செடிக்கு கட்டாயமாக சேர்த்து விடுங்கள் இதன் வேர்கள் எல்லாம் மிகவும் மெல்லிய வேர்களாக இருக்கும்.

- Advertisement -

இப்படி வைத்த அந்த தொட்டியில் வாடிய துளசி செடியை வைத்து விடுங்கள். துளசி செடிக்கும் அதிக அளவில் வெயில் தேவைப்படாது ஓரளவுக்கு வெயில் இருந்தால் போதும். அதற்காக அதை நிழலிலேயும் வைக்கக்கூடாது. இப்படி வைத்த பிறகு உங்களிடம் வேறு ஏதேனும் உரம் இருந்தால் போடுங்கள் இல்லை என்றால் இந்த தேங்காய் நார் உரமே கூட போதும் இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். இதற்கு பூச்சி வராமல் இருக்க வேப்பம் புண்ணாக்கு அல்லது வேப்பங்கொட்டை ஊற வைத்த அந்த தண்ணீரை ஸ்ப்ரே செய்து விடலாம். இப்படி இதில் ஏதாவது ஒன்றை வாரத்துக்கு ஒரு முறை செய்து விடுங்கள்.

இப்போது இந்த செடி நல்ல துளிர் விட்டு வளர ஒரு முக்கியமான பொருளை இதில் நாம் சேர்க்க வேண்டும். அது வேறென்றும் இல்லை நீங்கள் உங்கள் வீட்டில் பால் காய்ச்சும் போது திரிந்து விட்டால் அந்த திரிந்த பாலில் தண்ணீர் தனியாக இருக்கும் அல்லவா, அந்த தண்ணீரை ஆற வைத்து அதனுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இந்த செடிக்கு ஊற்றி வாருங்கள். தண்ணீர் சூடாக இருக்கும் போது ஊற்றி விடாதீர்கள். எவ்வளவு காய்ந்த செடியாக இருந்தாலும் எப்படி துளிர்த்து வருகிறது என்று உங்களுக்கு தெரியும். ஏனென்றால் அந்த தண்ணீரில் அவ்வளவு புரோட்டின் சத்து உள்ளது. இது தான் துளசி செடி நன்றாக வளர சீக்ரெட். இது வாடிய செடிக்கும் பயன்படுத்தலாம் புதிதாக நீங்கள் வாங்கி வைக்கும் செடிக்கும் பயன்படுத்தலாம். அவ்வளவு தான் இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும். இதை ஒரு பத்து ரூபாய் சின்ன பால் பாக்கெட் வாங்கி கூட நீங்கள் செடிகளுக்காக இப்படி திரித்து ஊற்றலாம்.

இதையும் படிக்கலாமே: வெற்றிலை கொடி வளர்க்க ஆசையா இருக்கா? உங்க கிட்ட ஒரே ஒரு வெற்றிலை இருந்தா போதுங்க, அத வச்சி நீங்களே வெற்றிலை கொடியை ஈஸியா வளர்க்கலாம் வாங்க.

ஒரு மாதம் கழித்து பாருங்கள் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு துளசி செடி நன்றாக துளிர்த்து தழைத்து வளர்ந்து இருக்கும். இந்த முறையில் நீங்கள் புதிதாக வாங்கிய வந்த செடியை கூட பராமரிக்கலாம் செடி வாடவே வாடாது.

- Advertisement -