இட்லி தோசை மாவில் உள்ள புளிப்பை நீக்க சூப்பரான டிப்ஸ்

idly thosai maavu pulippu neenga tips
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் காலை உணவிற்கு இட்லி தோசை என்பது இன்றியமையாத ஒரு உணவாக மாறி விட்டது. இட்லி தோசை என்று ஒன்று இல்லை என்றால் பெண்களுக்கு பெரும் பாடு தான். ஆனால் அப்படியும் சில நேரங்களில் நாம் இட்லி தோசைக்கு அரைத்து வைத்திருக்கும் மாவானது புளித்து விடும். அதை கொண்டு சமைத்தால் உண்பது கடினம். இது போன்ற சூழலில் புளித்த மாவில் இருந்து புளிப்பை நீக்கி சுவையான டிபன் செய்ய அருமையான டிப்ஸ் குறித்து பார்ப்போம்

பொதுவாக மாவு கறைபவரின் கை பக்குவத்திற்கு ஏற்றவாறு மாவின் தன்மை மாறுபடுவதை நாம் அனுபவ பூர்வமாகவே உணர்ந்திருப்போம். அவரவர் கை பக்குவத்தை உணர்ந்து காரைத்தாலும் சில நேரங்களில் சுதப்புவது உண்டு. அவற்றை சரி செய்ய இதோ டிப்ஸ்.

- Advertisement -

தோசை மாவு புளித்து விட்டால் டிப்ஸ் 1:
ஒருவேளை நீங்கள் தோசை வார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்து மாவு புளித்திருந்தால் அதை அரைமணி நேரத்தில் சரி செய்து விடலாம். அதற்கு தேவை இரண்டு டம்ளர் தண்ணீர் தான். முதலில் இரண்டு டம்ளர் தண்ணீரை தோசை மாவில் ஊற்றி அதை நன்றாக கலக்கி அரைமணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.

அரைமணி நேரம் கழித்து பார்த்தீர்கள் என்றால் அந்த மாவிற்கு மேலே நுரையோ அல்லது நீரோ இருக்கும். அதை அப்படியே ஒரு கரண்டி கொண்டு எடுத்து விட்டு, மீதம் இருக்கும் மாவில் ரவையோ அல்லது அரிசி மாவோ கலந்து தோசை வார்த்தால் புளிப்பு என்பது நீங்கி இருக்கும்.

- Advertisement -

தோசை மாவு புளிப்பு நீங்க டிப்ஸ் 2:
அரைமணி நேரம் கூட இல்லை, உடனே மாவை சரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை செய்யலாம். இதற்க்கு தேவையான பொருள்: வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா மற்றும் பெருங்காயம்.

வெங்காயம் தவிர்த்து மேலே குறிப்பிட்ட அணைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துவிட்டு அதை உங்கள் தோசை மாவில் சேர்த்து கெட்டியாக தோசைகளை வார்த்து அதற்க்கு மேல வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதன் மேலே தூவி விட்டு தோசையை திருப்பி போட்டால் சுவையான ஊத்தப்பம் தயார்.

இதையும் படிக்கலாமே: 7 வகையான மூலிகை டீ – இதை குடித்தால் எப்பொழுதும் தெம்பா இருப்பீங்க

தோசை மாவு அதிகம் புளிக்காமல் இருக்க டிப்ஸ் 3:
அதே போல ஒருவேளை 3 நாட்கள் வரும் அளவிற்கு மாவை அரைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கிறீர்கள் என்றால், அதை 3 கிண்ணங்களில் ஊற்றி முதலில் ஒரு கிண்ணத்தை பிரிட்ஜில் வைத்து விட்டு சற்று நேரம் கழித்து மற்றொரு கிண்ணத்தையும், இன்னும் சற்று நேரம் கழித்து மூன்றாவது கிண்ணத்தை வைக்கலாம். நேர இடைவெளி என்பது அவரவர் கை பக்குவத்தை பொறுத்து மாறுபடும். இப்படி சின்ன சின்ன சமையல் குறிப்புகள் மூலம் உங்கள் தோசை மாவை நீங்கள் சரி செய்யலாம்.

- Advertisement -