இட்லிக்கு அரைக்கும் ‘அரிசி-உளுந்தை’ இனி தனித்தனியாக ஊற வைத்து 1 மணி நேரம் கஷ்டப்பட்டு அரைக்க வேண்டியதில்லை! 25 நிமிஷம் மட்டும் போதும், சும்மா பஞ்சு போல இட்லி வரும்.

idly-dosa-maavu-items
- Advertisement -

பொதுவாகவே இட்லிக்கு மாவு அரைக்கும் போது அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக ஊறவைத்து பிறகு ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டு கிரைண்டரில் ஆட்டி வைப்போம். அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக சேர்த்து விட்டால் இட்லியும் வராது, தோசையும் நன்றாக வராது என்று கூறுபவர்கள் தான் அதிகமாக இருப்பீர்கள். இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஊற வைத்து சிரமப்படாமல் அரைத்து வைத்தாலும் இட்லி பஞ்சு போல் வரும். தோசையும் மொறுமொறுவென்று சூப்பராக வரும். அதற்கு தேவையான வழிமுறைகள் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

making-idly

எல்லா வகையான சமையலுக்கும் சில ரகசிய குறிப்புகள் உண்டு. சின்ன சின்ன தவறுகள் மூலம் நாம் மிகவும் கஷ்டப்பட்டு சமைப்பது போல் இருக்கும். அதை மட்டும் திருத்திக் கொண்டால் உங்களை விட சமையல் கில்லாடிகள் யாரும் இருக்க முடியாது. இதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுது சரியான அளவை பயன்படுத்தி கொள்வது நல்லது. அரிசிக்கும், உளுந்துக்கு ஒரே அளவையை பயன்படுத்துங்கள். 250 கிராம் கொண்ட ஆழாக்கை எடுத்துக் கொண்டால் அதில் தலை தட்டாமல் 4 ஆழாக்கு அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதே ஆழாக்கில் 1 ஆழாக்கு தலை தட்டாமல் உளுந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் அரிசி எடுக்கும் பொழுது தலை தட்டினால் உளுந்திற்கும் அதே போல் தலை தட்ட வேண்டும். இரண்டையும் இரண்டு முறை அலசி நல்ல தண்ணீர் ஊற்றி மொத்தமாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அவற்றுடன் இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வையுங்கள் போதும். மாவு அரைக்கும் 1 மணி நேரத்திற்கு முன்னால் வெள்ளை அவலை 1/2 ஆழாக்கு அளந்து 2 முறை நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அவல் சேர்ப்பதால் இட்லி எவ்வளவு நேரம் ஆனாலும் காய்ந்து போகாது. சூப்பராக இருக்கும்.

aval

காலையில் நீங்கள் எழுந்ததும் ஊற வைத்தால் டிபன் முடித்து விட்டு அரைத்து வைத்து விடலாம். இரவில் இட்லி, தோசை சுடுவதற்கு மாவு பொங்கி தயாராகி விடும். 4 மணி நேரம் ஊறிய பிறகு கிரைண்டரில் சிறிது சிறிதாக சேர்த்து மொத்தமாக அரைக்க வேண்டும். எல்லாமே ஒன்றாக ஊற வைத்ததால் உங்களுக்கு தனித்தனியாக நேரம் எடுக்காது. அதிக நேரத்தை நீங்கள் மிச்சப்படுத்தி சுலபமாக மாவை அரைத்து விடலாம். அவலையும் ஒன்றாக சேர்த்து விடவும். 25 லிருந்து 30 நிமிடம் தான் இதற்கு நேரம் எடுக்கும். இடையிடையே 2 அல்லது 3 நிமிடத்திற்கு ஒரு முறை கையை வைத்து மாவை பதம் பார்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் விட்டுக் கொள்ளவும். 20 நிமிடம் ஆனதும் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் தனித்தனியாக அரைக்க வேண்டும் என்றால் கலக்கும் பொழுது உப்பு சேர்த்தால் போதும். ஆனால் நாம் ஒன்றாக அரைத்து விடுவதால் கிரைண்டரிலையே உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு நன்றாக வெண்ணெய் போல் திரண்டு வந்ததும், நீங்கள் வழக்கமாக மாவு எடுக்க பயன்படுத்தும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். எப்போதும் மாவு ஊற்றும் பொழுது மேலே சிறிது இடைவெளி இருக்க வேண்டும். அப்போது தான் மாவு பொங்கி வருவதற்கு சரியாக இருக்கும். இப்போது அப்படியே மூடி வைத்து விடவும். மாவு பொங்கி வருவதற்கு 8 மணி நேரம் எடுக்கும். எட்டு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் மாவு முழுவதும் பொங்கி இருக்கும். அதை நன்றாக கலக்கி விட்டு தேவையான மாவை எடுத்துக் கொண்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்.

idly-maavu

இதுபோல நீங்க மாவு அரைத்தால் நேரமும் மிச்சமாகும். சுவையும் அதிகமாக இருக்கும். நீங்கள் இந்த மாவில் இட்லி சுட்டால் இட்லி பஞ்சு போல வரும். தோசை சுட்டால் தோசையும் மொறு மொறுவென்று சிவக்க வரும். ஒரு முறை ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
புளிச்ச தோசை மாவை இனிமே கீழே கொட்டாதீங்க! அந்த மாவிலிருந்து, புளிப்பை தனியாக பிரித்து எடுத்துவிடலாம். சமையலறையில் சில டிப்ஸ்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Idli dosa maavu araippadhu eppadi Tamil. Idli maavu tips. Idli maavu tips in Tamil. Idly maavu araipathu Tamil. Idly maavu araipathu eppadi tips.

- Advertisement -