உங்கள் மன பயத்தை போக்கும் கல் உப்பு பரிகாரம். 21 நாட்களில் பலனை கட்டாயம் உணர்வீர்கள்.

salt

உப்பு என்று சொன்னாலே அதற்கு தனி மகத்துவம் தான். ஏனென்றால் ஒரு வீட்டில் லட்சுமி கலாட்சியம் நிறைந்து இருக்க வேண்டுமென்றால் அந்த வீட்டில் உப்பு நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். பொதுவாக உப்பிற்கு உள்ள மகத்துவத்தைப் பற்றி பல பேர் சொல்லி, பலருக்கு பல விதமான பரிகாரங்கள் தெரிந்திருக்கும். இந்த பரிகாரம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நம் வீட்டில் இருக்கும் நிம்மதியற்ற சூழ்நிலையையும், நம் மனதில் இருக்கும் தேவையற்ற பயத்தையும் போக்குவதற்கு இந்த கல் உப்பை வைத்து என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

salt

உப்பினை கையில் வைத்திருந்தாலே அது நம் உடம்பிலிருந்து எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் நீக்கிவிடும் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் ஒருவர் கையில் இருந்து உப்பை, மற்றவருக்கு கொடுக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். அதாவது உப்பை கரண்டியில் தான் பரிமாற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. நம் கைகளால் தொட்டு, உப்பை எடுத்து, அடுத்தவர் கையில் நேரடியாக கொடுத்தால், ‘கொடுப்பவருக்கு இருக்கும் எதிர்மறை ஆற்றலானது, வாங்குபவரையும் தாக்கக்கூடும் என்பதால்தான். இதனால்தான் உப்பை கையில் தரக்கூடாது என்று நம் வீட்டில் இருக்கும் பெரியோர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட பல மகத்துவத்தை கொண்ட இந்த உப்பினை வைத்து நம் முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கும், நமக்கு நன்மையை மட்டுமே தரும் சுலபமான பரிகாரங்கள் உள்ளது. இதற்கு ஒரு கண்ணாடி டம்ளர், 2 கைப்பிடி உப்பு, சுத்தமான தண்ணீரும் போதும். சிலபேருக்கு தேவையற்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு, ‘இது நடந்து விடுமோ’ ‘அது நடந்து விடுமோ’ என்ற தவறான நினைப்பும், எதிர்மறை சிந்தனைகளும் மனதிற்குள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்கள் இரவில் நிம்மதியாக தூங்கூட மாட்டார்கள். ஒருபடி அதிகமாக போய், பல கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை கெடுத்து, நிம்மதியையும் கெடுத்து விடும். இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால், நீங்கள் படுக்கும் இடத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில், இரண்டு கைப்பிடி அளவு உப்பு போட்டு, அந்த டம்ளர் முழுவதும் தண்ணீரால் நிரப்பி விட வேண்டும். இந்தக் கண்ணாடி டம்ளரை நீங்கள் படுக்கும் இடத்தில் கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். தரையில் படுபவர்கள் கீழே கொட்டத அளவிற்கு உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரை வாஷ் பேசினில் கொட்டி விடவும். 21 நாட்கள் தொடர்ந்து இப்படி செய்தாலே பலவீனமாக இருக்கும் உங்களது மனம், பலம் அடைவதை உணர முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் பரிசோதித்துப் பார்த்து பலனை அடையலாம்.

water

சில பேருக்கு வீடு மிகவும் பெரிய வீடாக இருக்கும். படுக்கை அறைகள் மூன்று, நான்கு கூட இருக்கும். இப்படி இருக்கும் வீடுகளில் சிலருக்கு ஓரு அறையில் படுத்து தூங்கினால் நிம்மதி இருக்கும். மற்றவர்கள் தங்கும் அறையில், மற்றவர்களுக்கு நிம்மதி இருக்காது. அதாவது ஒரே வீடு தான். ஆனால் அறைகளுக்குள் சூழ்நிலை மாறுபடும். எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் இருக்கின்றது என்பதை உணர்கிறீர்களோ, அந்த அறையில், ஒரு கண்ணாடி டம்ளரில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம். காலையில் எழுந்தவுடன் அந்த தண்ணீரை வாஷ் பேசினில் கொட்டி விடவும். சில குறிப்பிட்ட அறைகளில் படுத்தால் தூக்கம் வராது என்று, அந்த அறையை பயன்படுத்தாமலேயே சிலர் இருப்பார்கள். 21 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு பிறகு, அந்த அறையில் தூங்கி பாருங்கள். கட்டாயம் உங்களுக்கு வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

சிலருடைய வீடு நிம்மதி இழந்து இருக்கும். சதாகாலமும் சண்டை சச்சரவு உள்ள வீடுகளில், ஒரு கண்ணாடி டம்ளரில், உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி தயார் செய்து உங்களது குளியல் அறையில் வைத்து விட வேண்டும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரை எடுத்து உங்கள் வீட்டு வாஷ் பேசினில் ஊற்றி விடலாம். இதற்கும் 21 நாட்கள் தான் கணக்கு. மேற்குறிப்பிட்டுள்ள எந்த பிரச்சனைக்கு பரிகாரத்தை செய்வதாக இருந்தாலும் இரவு நேரத்தில்தான் செய்யப்பட வேண்டும். அதாவது எட்டு மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்து வைத்து விடுங்கள். காலை எழுந்ததும் அந்த தண்ணீரை எடுத்து கீழே கொட்டி விடவும். இவ்வளவு தான்.

water1

மாதத்திற்கு ஒரு முறையாவது சமுத்திர நீரில், அதாவது கடல் நீரில் குளிப்பது எதிர்மறை ஆற்றலை குறைக்கும். கடல் நீரை எடுத்து வந்து நம் வீடு முழுவதும் தெளிப்பது நல்ல பலனை தரும். எல்லோராலும் தொடர்ந்து இப்படி செய்ய முடியுமா? கேள்விக்குறியான விஷயம் தான். இதற்காக தான், கல் உப்பு கலந்த நீரை நம் வீட்டில் இப்படி, முறையாக உபயோகப்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்பதற்காக நம் முன்னோர்களால் கூறப்பட்ட பரிகாரங்கள் தான் இவை. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன். இதில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பெறுவதற்கு அதிகப்படியான பலன் உள்ளது என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
கண்ணுக்குத் தெரியாத இந்த சின்னப் பானை, உங்கள் கண்ணுக்கு புலப்படாத, பெரிய பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kal uppu palangal in Tamil. Kal uppu pariharam. Stone salt uses. Kal uppu payangal. Kal uppu pariharam in Tamil.