40 வயதை தாண்டினால் கூட உங்க முகத்தில் சுருக்கமே வராது. வெறும் பத்து ரோஜா பூவை வைத்து, பத்து வயதை குறைத்து காட்டலாம். அது எப்படின்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா. இந்த பியூட்டி டிப்ஸ் உங்களுக்காக.

rose-water2
- Advertisement -

ரொம்ப ரொம்ப ஈஸியா முகத்தில் இருக்கும் சுருக்கத்தை குறைக்க, முகச்சுருக்கத்தை வராமல் தடுக்க, முகப்பருக்களை வராமல் தடுக்க, பிக்மென்டேஷனை குறைக்க ஒரு வழி உள்ளது. உங்களுடைய முகத்தில் நிறைய மாசுமங்கு இருக்கிறது. குறைந்த செலவில் அதிகப்படியான அழகை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த அழகு குறிப்பை முழுமையாக படிக்கலாம். இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் சீக்கிரம் வயதாகாது. அப்படியே வயதானாலும் அந்த தோற்றம் உங்களுடைய முகத்தில் தெரியவே தெரியாது. அத்தனை பேரழகை கொடுக்கும் அந்த குறிப்பு என்னவாக இருக்கும். அழகின் மேல் ஆர்வம் இருப்பவர்களுக்கு மட்டும் இந்த அழகு குறிப்பு.

வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயார் செய்யும் முறை:
இது எங்களுக்கும்தான் தெரியும். ரோஸ் வாட்டர் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்று. இதில் என்ன அற்புதம் இருக்கிறது. இந்த ரோஸ் வாட்டர் தயார் செய்யும் போது இதில் நாம் ஒரு அற்புதம் வாழ்ந்த இயற்கையான பொருளை சேர்க்கப் போகின்றோம். அது என்ன தெரியுமா. அதிமதுரம். இது அழகு குறிப்புக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்ள்தான். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

- Advertisement -

சின்ன சின்ன கட்டையாக கிடைத்தாலும் சரி, அல்லது அதிமதுரம்  பொடியாக கிடைத்தாலும் சரி, அதை நீங்கள் இந்த அழகு குறிப்புக்கு பயன்படுத்தலாம். பொடியாக கிடைத்தால் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டையாக கிடைத்தால் அதை இடுக்கில் போட்டு நன்றாக இடித்து தூள் செய்து குறிப்புக்கு பயன்படுத்துவோம்.

rose-water

முதலில் பத்திலிருந்து பதினைந்து பன்னீர் ரோஜாக்கள் நமக்குத் தேவை. இதற்கு வேறு எந்த பூக்களையும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது. பன்னீர் வாசம் நிறைந்த ரோஜாக்களை பயன்படுத்துவது தான் நல்ல பலனை கொடுக்கும். அந்த ரோஜா பூவில் இருக்கும் காம்புகளை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும் ஒரு பவுலில் போட்டு, முதலில் கழுவி விடுங்கள். அதன் பிறகு ஒரு அகலமான பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். அது மண்சட்டியாக இருந்தால் ரொம்ப நல்லது.

- Advertisement -

அந்த பாத்திரத்தில் கழுவிய ரோஜா இதழ்களை போட்டுக் கொள்ளவும். இது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி விடுங்கள். இப்போது இந்த ரோஜா பூவில் நாம் எடுத்து வைத்திருக்கும் அதிமதுர பொடியை 1 ஸ்பூன் சேர்க்க வேண்டும். கட்டையாக இருந்தால் இரண்டு சின்ன துண்டு கட்டைகளை நசுக்கி இதில் போட்டுக்கோங்க.

இப்போது அந்த பாத்திரத்திற்கு நடுவே ஒரு சின்ன கிண்ணத்தை வைத்து விட்டு, பெரிய பாத்திரத்திற்கு மேலே தட்டு போட்டு மூட வேண்டும். அந்தத் தட்டு நடுவில் குமிழ் வெச்ச தட்டாக இருக்க வேண்டும். அந்த தட்டில் கவிழ்த்தபடி இந்த பாத்திரத்திற்கு மேல் மூடி, இதை அப்படியே அடுப்பில் வைத்து, அடுப்பை பற்ற வைத்து, 7 லிருந்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இடையே ஒரு முறை தட்டை திறந்து பாருங்கள். (கீழே கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும்.)

- Advertisement -

Face pack

அந்த ரோஜா பூவில் நாம் ஊற்றிய தண்ணீர் எல்லாம் கொதித்து ஆவியாகி, அந்த சின்ன கிண்ணத்தில் விழுந்திருக்கும். ரோஜா பூவில் ஊற்றிய தண்ணீர் முழுவதும் சுண்டி விட்டால் இடையே இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மீண்டும் தட்டை போட்டு மூடுங்கள். அவ்வளவுதான் 10 நிமிடத்தில் தண்ணீர் எல்லாம் ஆவிரியாக அந்த சின்ன சின்னத்தில் கிடைத்திருக்கும்.

face10

அந்த தண்ணீரில் எந்த அளவுக்கு வாசம் நிறைந்த ரோஸ் வாட்டர் இயற்கையாக உங்களுக்கு கிடைத்திருக்கும் தெரியுமா. அவ்வளவும் சருமத்திற்கு நன்மை தரக்கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தண்ணீர் தான். அதை அப்படியே எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டொர் செய்தால் இரண்டு வாரம் கெட்டுப்போகாது. இதை எப்படி பயன்படுத்தலாம்.

face7

இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் இருக்கும் மேக்கப்பை நீக்கிவிட்டு முகத்தில் ஸ்பிரே செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் உங்கள் சருமத்திற்கு எந்த பொடி செட் ஆகும் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இயற்கையான இந்த அழகு குறிப்பு போதும். தேவையற்ற முடிகள் எல்லாம் தானாக நிரந்தரமாக உதிர்ந்து போகும்.

கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு, அல்லது அரிசி மாவு கோதுமை மாவு எதுவாக இருந்தாலும் சரி அதில் கொஞ்சமாக நாம் தயார் செய்திருக்கும் ரோஸ் வாட்டர் ஊற்றி கலந்து பேக்காக முகத்தில் போட்டும் பயன்படுத்தலாம். உங்களுடைய விருப்பம் தான். ஆக மொத்தத்தில் இந்த தண்ணீர் உங்கள் சருமத்தில் இறங்க வேண்டும். சரும பிரச்சனை எல்லாம் படிப்படியாக குறையும். இவ்வளவு எளிமையான மலிவான அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -