சோர்வாகவும், வெளிரிய நிறத்துடனும் இருக்கும் முகத்தினை இளமைப் பொலிவுடன் மீட்க 1 ஸ்பூன் கசகசா போதும்!

gasagasa-face
- Advertisement -

முகம் பலருக்கும் வெயிலில் சுற்றித் திரிவதால் தன்னுடைய இயற்கையான நிறத்தை இழந்துவிடும். மெலனின் எனும் மூலக்கூறு குறைந்தால் சருமத்தின் இயற்கையான நிறம் மங்கி கறுத்து போய் காணப்படும். முகத்தில் இருக்கும் தோல் பகுதி இருகி இருக்கும் பொழுது இளமையாக இருக்கும். நாளடைவில் வயதாக வயதாக அது தளர ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் வயதான தோற்றத்தை அடைவதுண்டு. இளம் வயதிலேயே இப்படி சோர்வான மற்றும் தளர்வான வெளிரிய சருமம் கொண்டவர்கள் இந்த ஒரு பொருளை இப்படி செய்தால் இளமை திரும்பும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்

முகத்தில் இருக்கும் தளர்வை நீக்க முதலில் ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது பருகி இருக்க வேண்டும். தண்ணீரின் அளவை குறைக்கும் பொழுது சருமத்தின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும் சரியான தூக்கமின்மை காரணமாகவும் முகம் மலர்ந்து இல்லாமல் சோர்வுடன் காணப்படும். 8 டம்ளர் தண்ணீரும், 8 மணி நேரத் தூக்கமும் முகத்தை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள உதவும்.

- Advertisement -

முகத்தில் இருக்கும் சிறு சிறு துவாரங்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை புதுப்பிக்க தினமும் ஒரு முறையாவது ஆவி பிடிக்க வேண்டும். நீங்கள் ஆவி பிடிக்கும் தண்ணீருடன் கொஞ்சம் புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து கொதிக்க வைப்பது நல்லது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றி வசீகரிக்கும் சருமத்தை மீட்டுக் கொடுக்கும்.

எனவே புதினா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து நன்கு பத்து நிமிடத்திற்கு இடைவிடாமல் ஆவி பிடியுங்கள். முகத்தில் இருக்கும் நுண்துளைகளுக்குள் இந்த மூலிகை பொருட்கள் உட்புகுந்து செயலாற்ற வேண்டும். ஆவி பிடித்த பிறகு எப்போதும் ஒரு காட்டன் துணியை வைத்து முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும். சருமம் என்பது மிகவும் மென்மையான ஒரு இடமாகும். எனவே முகத்தை துடைக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

ஆவி பிடித்த பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு கசகசாவை எடுத்து தேவையான அளவிற்கு தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் போட்டால் கட்டாயம் அரைபடாது எனவே உரல் அல்லது அம்மியில் இட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த இந்த விழுதினை முகம் முழுவதும் நன்கு தடவி உலர விட்டு விட வேண்டும். குறைந்த பட்சம் 20 நிமிடம் நன்கு உலர விட வேண்டும். அப்போது தான் முகத்துடன் இந்த பேக் நன்கு ஒட்டிக் கொண்டுவிடும். முகம் இறுகி, முகத்தில் சோர்வுகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படும்.

20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். பச்சைத் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது. கை பொறுக்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி அந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வந்தால் நிச்சயம் உங்கள் முகம் இயற்கையான இரத்த ஓட்டத்துடன், இளமையான தோற்றத்துடன், புதுப் பொலிவுடன் காணப்படும். நீங்களும் முயற்சி செய்து பார்த்து பயனடையுங்கள்.

- Advertisement -