இளநரை மறைந்து ஒரு முடி கூட வெள்ளையாக இல்லாமல் கருகருவென நீளமான, அடர்த்தியான கூந்தல் பெற இந்த சுரைக்காயை இப்படியும் பயன்படுத்தலாமே!

suraikkai-hair
- Advertisement -

சுரைக்காயை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்று நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல விஷயமாகத் தோன்றலாம். சுரைக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் தலைமுடிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள ரொம்ப உபயோகமாக இருக்கும். உடல் உஷ்ணம் அதிகரிப்பதன் காரணமாகவே பலருக்கும் தலைமுடி உதிர்கிறது. முடி உதிர்வதை முற்றிலுமாக நிறுத்தி, இளநரையை போக்கி, கருகருவென்று அடர்த்தியான, நீளமான கூந்தலை பெறுவதற்கு சுரைக்காய் எந்த வகையில் உதவி செய்கிறது? சுரைக்காய் ஹேர் பேக் எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கருகருவென நீளமான அடர்த்தியான கூந்தல் பெறுவதற்கு முதலில் ஐந்தாறு சுரைக்காய் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக ஒரு பேஸ்ட் போல தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சுரைக்காய் நீர் காய் என்பதால் அதிலேயே தண்ணீர் சுரக்கும்.

- Advertisement -

இந்த சுரைக்காய் பேஸ்டுடன் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். விட்டமின் ஈ கேப்ஸ்யூல் தலைமுடியின் வேர்க்கால்கல்லுக்குள் சென்று இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை தூண்டிவிட்டு இழந்த முடியை மீண்டும் வளர செய்யும் அற்புதமான ஆற்றல் கொண்டுள்ள சத்தாகும். இதை சுரைக்காய் உடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது இளநரை முற்றிலுமாக மறையும். எவ்வளவுதான் வெள்ளையாக உங்களுடைய முடி இருந்தாலும் அது கொஞ்ச நாட்களிலேயே கருகருவென கருப்பாக மாறிவிடும் அற்புதம் நடக்கும்.

சிறுவர் முதல் பெரியவர் வரை பலரை தாக்கக்கூடிய இந்த இளநரை பிரச்சனைக்கு சுரைக்காயை விட சிறந்த தீர்வு இருந்து விட முடியாது. ரொம்பவே சுலபமாக பயன்படுத்தக்கூடிய இந்த சுரைக்காய் பேஸ்ட் அப்படியே நேரடியாக தலையில் தடவ கூடாது. அது ஒட்டிக் கொண்டுவிடும். பிறகு சுத்தம் செய்வது ரொம்பவே சிரமம் ஆகிவிடும் எனவே இந்த கலவையை தயார் செய்த பின்பு இதை ஒரு வெள்ளை காட்டன் துணியில் போட்டு நன்கு பிழிந்து தண்ணீரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை பஞ்சில் நனைத்து தலை முடியினுடைய மண்டை ஓட்டு பகுதி முழுவதையும் ஒற்றி ஒற்றி எடுக்க வேண்டும். இதனால் மண்டை ஓட்டுக்குள் இதன் சத்து சென்று நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். உச்சந்தலை மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் நன்கு பஞ்சினால் ஊற்றி விட்டு பின்னர் முடியின் நுனிப் பகுதியிலும் சிறிதளவு தேய்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு அரைமணி நேரம் அப்படியே ஊற விட்டு பின்னர் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசினால் போதும். இது போல வாரம் ஒருமுறை செய்து வாருங்கள், நான்கு வாரத்திற்குள் உங்களுடைய இளநரை மறைய ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். சொட்டை தலையில் முடி முளைக்க வைக்கும் இந்த அற்புதமான சுரைக்காய் ஹேர் பேக் நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க ஆச்சரியப்படுவீங்க.

- Advertisement -