சொதப்பலான சமையலைக் கூட சரிசெய்ய, சமையலறையில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய 5 டிப்ஸ் உங்களுக்காக.

cooking
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சமைக்க மட்டும் தெரிந்து இருந்தால் போதாது. சில சமயங்களில் சமையல் சொதப்பி விட்டால், அதை சரி செய்யவும் தெரிய வேண்டும். சமையல் அறையில் இருக்க கூடிய பொருட்களை வீணாக்காமல், வாசம் போகாமல், வண்டு பிடிக்காமல் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு தேவையான சின்ன சின்ன சமயலறை குறிப்புகள் உங்களுக்காக.

Tip 1:
நெய் பாட்டிலை புதுசா வாங்கி திறந்து பயன்படுத்தும்போது, அதில் மணல் மணலாக சூப்பராக நல்ல வாசம் இருக்கும். ஆனால் அந்த நெய்யை கொஞ்ச நாட்கள் வைத்து பயன்படுத்தும் போது நெய்யில் வாசம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். நெய் பாட்டிலில் இருக்கும் கடைசி சொட்டு நெய் வரை எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்றால், அந்த நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை போட்டு வையுங்கள். நெய் முழுமையாக தீரும் வரை நல்ல வாசத்தோடு இருக்கும்.

- Advertisement -

Tip 2:
நாம் செய்யக்கூடிய பொரியல் வறுவல் இவைகளில் சில சமயம் உப்பு அதிகமாகிவிடும். சில சமயம் காரமும் அதிகமாகிவிடும். அதை உடனடியாக எப்படி சரி செய்வது. கொஞ்சம் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொட்டுக்கடலை மாவை உப்பு காரம் அதிகமான பொரியலில் தேவையான அளவு சேர்த்து நன்றாக கலந்து விட்டால் பொரியலில் சுவையும் அதிகரிக்கும். உப்பு காரமும் சரியாக வந்துவிடும்.

இதேபோல் தான் குழம்பில் உப்பு காரம் அதிகமாகிவிட்டால் கொஞ்சமாக பொட்டுக்கடலையை மாவை தண்ணீரில் போட்டு கரைத்து அந்த தண்ணீரை குழம்பில் ஊற்றி இரண்டு கொதி விட்டால், உப்பு சரியாகிவிடும்.

- Advertisement -

Tip 3:
குக்கரில் சாம்பார் வைப்பதற்கு தேவையான அளவு துவரம் பருப்பை போட்டு, மிதமான தீயில் லேசாக ஒரு நிமிடம் போல வறுத்துவிட்டு, அதன் பின் அந்த பருப்பை தண்ணீரை ஊற்றி கழுவி, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயம், பூண்டு, சிறிதளவு உப்பு இந்த 4 பொருட்களை சேர்த்து அதன் பின்பு வேக பருப்பை வைத்து சாம்பார் வைத்தால் கேஸ்ட்ரிக் பிராப்ளம் வராமல் இருக்கும். அதாவது பருப்பு சாப்பிடுவதால் வாயுத்தொல்லை வருவது குறையும்.

Tip 4:
சிக்கன் மட்டன் என்று அசைவம் சமைக்கும் போது அந்த இறைச்சியை எவ்வளவு தான் கழுவினாலும் அதிலிருக்கும் அசைவ வாடை போகவே போகாது. வாங்கி வந்த இறைச்சியை முதலில் தண்ணீர் ஊற்றி நான்கிலிருந்து ஐந்து முறை நன்றாக கழுவிவிடுங்கள். இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவை அந்த சிக்கனில் போட்டு நன்றாக கலந்து விட்டு, ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள். அதன் பின்பு ஒரு முறை தண்ணீரை ஊற்றி கழுவி விட்டால், அந்த இறைச்சியில் சுத்தமாக அசைவ வாடை அதாவது நீச்ச அடிக்காமல் இருக்கும்.

Tip 5:
முட்டை உடைக்கும் போது முட்டையிலிருந்து ஒரு சொட்டு அல்லது இரண்டு சொட்டு கீழே விழுந்துவிட்டால் என்ன தான் அதை சுத்தம் செய்தாலும் அதில் இருந்து வாடை வீசும். முட்டை கொட்டிய இடத்தில் முதலில், ஊற்றிய முட்டைக்கும் மேலே கொஞ்சமாக உப்புத் தூளைத் தூவி விடுங்கள். அதன் பின்பு அதை துடைத்து எடுத்துவிட்டு, அதன்பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்தால் முட்டையின் வாடை சிறிதளவுகூட வீசாது.

Tip 6:
அரிசியை ஸ்டோர் செய்து வைத்திருக்கும் டப்பாவில் வண்டுகள் பூச்சிகள் அதிகமாக வருகிறதா? அந்த அரிசியில் ஒரே ஒரு வசம்புத் துண்டை போட்டு வைத்தால் போதும். அதில் நீண்ட நாட்கள் பூச்சி வராமல் பாதுகாப்பாக இருக்கும். வசம்புத் துண்டு இல்லை என்றால், பூண்டுக்கு உள்ளே இருக்கும் காம்புகள், பிரியாணி இலை, தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட ஈரம் இல்லாத கொட்டாங்குச்சி துண்டுகள், இதில் எதை அரிசி, பருப்பு வகைகளில் போட்டு வைத்தாலும் அதில் வண்டு வராது.

- Advertisement -