இது தெரியாம தான் இத்தனை நாள் குழம்பிக்கிட்டு இருந்தோமா? இப்படி யோசிக்கும் அளவிற்கு பல சூப்பரான டிப்ஸ் இருக்கு. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

cloth icon
- Advertisement -

இந்த வீட்டு வேலையை காலை முதல் மாலை வரை எவ்வளவு தான் சுறுசுறுப்பாக செய்து கொண்டே இருந்தாலும், சில விஷயங்களை கொஞ்சம் நுணுக்கமான தெரிந்து வைத்துக் கொண்டால், அந்த வேலைகளை அத்தனை நேரம் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியது இருக்காது. அப்படியான சில தகவல்கள் இந்த வீட்டு குறிப்பு பதிவில் உள்ளது அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் போது மதியம் அரைத்து வைத்த மாவை இரவே ஊற்ற முடியாது. அதற்குள் மாவும் புளித்திருக்காது. மதியம் அரைத்த மாவை இரவே ஊற்ற ஒரு சூப்பரான ஐடியா இருக்கு. அதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை இரவுக்கு தேவையான அளவு ஒரு சில்வர் பாத்திரத்தில் எடுத்து அந்த மாவு பாத்திரத்தை சூடான தண்ணீரில் வைத்து அடுப்பை அணைத்து விட்டு, மாவையும் இறுக்கமாக மூடி போட்டு மூடி விடுங்கள். இரவுக்குள் மாவு நன்றாக புளித்து விடும்.

- Advertisement -

இதே போல் அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்த மாவு ஒரு வாரம் ஆனால் கூட கெட்டுப் போகாமல் அப்படியே இருக்க வேண்டும் என்றால், மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் பொழுது ஒரு வெற்றிலையை அதில் போட்டு வைத்து விடுங்கள். வெற்றிலையை போடும் போது அதன் காம்பு பகுதி மாவின் உள்ளே இருக்கும் படி போட்டுக் விடுங்கள். இப்படி ஸ்டோர் செய்து வைத்தால் ஒரு வாரம் கூட மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

தயிர் வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் முதல் 10 நாள் வரை கூட கெடாமல் இருக்கும். அதையே வெளியில் வைத்தால், காலை வைத்தது இரவுக்குள்ளாகவே ஒரு மாதிரி வாடை வந்து விடும். இனி வெளியில் வைத்தாலும் கூட மூன்று நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்க, அதில் ஒரு சின்ன துண்டு தேங்காய் போட்டு வைத்து விடுங்கள். மூன்று நாள் ஆனால் கூட தயிர் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

தனி மிளகாய்த் தூளை பெரும்பாலும் கடையில் தான் வாங்கி வைத்துக் கொள்வோம். இப்படி வாங்கும் அந்த தூள் கலப்படமில்லாது தானா என்று தெரிந்து கொள்ள, ஒரு டம்ளர் தண்ணீரில் அந்த மிளகாய் தூளை கொஞ்சமாக போட்டு பாருங்கள், தூள் மேலே மிதந்தால் கலப்படமில்லை என்று அர்த்தம். போட்டவுடன் அடியில் சென்று தண்ணீரில் கலந்து விட்டால் தூளில் கலப்படம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு சிலர் துணிகளை தினமுமே அயன் செய்தது பிறகு தான் பயன்படுத்துவார்கள். அப்படி அடிக்கடி துணியை அயன் செய்யும் போது துணியின் நிறம் மங்கி விடுவதோடு, அயன் பாக்ஸில் இருக்கும் கறைகளும் சில நேரங்களும் துணிகளில் பிடிக்க வாய்ப்புள்ளது. அதற்கு துணிகளின் மீது நியூஸ் பேப்பர் போட்டு அதன் பிறகு அயன் செய்தால் துணிகளின் நிறமும் மாறாது அழுக்கும் படியாது. இப்படி அடிக்கடி நியூஸ் பேப்பர் போட்டு அயர்ன் செய்வதற்கு பதிலாக அலுமினியம் பாயில் பேப்பரை ஐயன் பாக்ஸில் நன்றாக சுற்றி விட்டு வைத்து விட்டால் பயன்படுத்த ஈசியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: அட இது எல்லாமே சூப்பர் ஐடியாவா இருக்கேங்க! இல்லத்தரசிகளை, ஸ்மார்ட் இல்லத்தரசிகளாக மாற்றும் செலவை குறைக்கும் புத்தம் புதிய ஐடியாக்கள் 10 இதோ உங்களுக்காக.

ரேஷன் அரிசியில் அதிகமாக வண்டு, பூச்சிகள் போன்றவை வைக்கும். வெயில் காலத்தில் காய வைத்து எடுத்து விடலாம். ஆனால் மழைக்காலத்திலோ அல்லது வெயில் படாத இடத்தில் இருப்பவர்களும் அதை எப்படி காய வைப்பது என்று தான் இப்போது பார்க்க போகிறோம். அதற்கு முதலில் ஒரு அகலமான தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஸ்டவ்வை பற்ற வைத்து அதன் மேல் அந்த தட்டை வைத்து சூடு படுத்திக் கொள்ளுங்கள். தட்டு நன்றாக சூடான உடன் அடுப்பை அணைத்து விட்டு அரிசியை அதில் கொட்டு விடுங்கள். அந்த சூட்டிற்கு வண்டுகள் எல்லாம் வெளியேறி விடும். அப்படியே இருந்தாலும் பூச்சி இறந்து விடும். அதன் பிறகு நீங்கள் அரிசி புடைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த குறிப்புகள் எல்லாம் உங்கள் தினசரி வீட்டு வேலையை சுலபமாக்கும் பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -