- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல்! ரொம்ப சுலபமாக இப்படி அரைச்சு பாருங்க 10 இட்லி...

ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல்! ரொம்ப சுலபமாக இப்படி அரைச்சு பாருங்க 10 இட்லி கூட அசராம சாப்பிடலாம்.

- Advertisement -

விதவிதமான சட்னி வகைகள் இருந்தாலும், அதில் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுப்பது இது போன்ற சில சட்னி வகைகள் தான். அதிலும் இஞ்சியை கொண்டு செய்யப்படும் இந்த துவையல் ரொம்பவே உடல் நலத்திற்கு நன்மைகளை செய்யக் கூடியது. ஜீரண சக்தியை அதிகரிக்கும், மேலும் வயிற்று உபாதைகளை போக்கும். சூப்பரான சுவையில் எப்படி இஞ்சி துவையலை சுலபமாக அரைப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இஞ்சி துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
இஞ்சி துண்டு – 50 கிராம், உளுத்தம் பருப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 7, புளி – சிறு எலுமிச்சை பழ அளவு, வெல்லம் – ஒரு சிறு துண்டு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: நல்லெண்ணெய் – ரெண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

இஞ்சி துவையல் செய்முறை விளக்கம்:
இஞ்சி துவையல் செய்வதற்கு முதலில் இஞ்சியை தோல் நீக்கி சீவி ரெண்டு விரல் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். இந்த துவையல் செய்யும் போது நல்லெண்ணெய் சேர்த்தால் தான் ருசி அதிகமாக இருக்கும்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். இவை பாதி அளவிற்கு வறுப்பட்டு கொண்டிருக்கும் பொழுதே இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். பின்னர் உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கி வந்த பிறகு விதைகள், நார் எல்லாம் நீக்கிய புளியை உருண்டையாக உருட்டி எடுத்து சிறு சிறு துண்டுகளாக பிரித்து போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒருமுறை நன்கு பிரட்டிவிட்டு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். இந்த பொருட்கள் எல்லாம் நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எல்லாவற்றையும் சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைக்கும் முன்பு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சிறிது வெல்லம் சேர்த்துக் கொண்டால் சுவை நன்றாக இருக்கும். இதில் விருப்பம் இல்லை என்றால் தவிர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ஃப்ரிட்ஜில் இட்லி தோசைக்கு மாவு இல்லையா. உடனடியாக 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து அசத்துங்க.

இதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் விட்டு காய விடுங்கள். நல்லெண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை உருவி சேர்த்து இரண்டு முறை பிரட்டிவிட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து சுடச்சுட இட்லி, தோசை தொட்டுக் கொண்டு சாப்பிட்டு பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். எல்லா வகையான வெரைட்டி ரைஸுக்கும் நல்ல காம்பினேஷன் ஆகவும் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்