- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இட்லி தோசைக்கு மாவு இல்லாத டைம்ல பத்தே நிமிஷத்துல இப்படி சூப்பரான ஒரு டிபன் செஞ்சு...

இட்லி தோசைக்கு மாவு இல்லாத டைம்ல பத்தே நிமிஷத்துல இப்படி சூப்பரான ஒரு டிபன் செஞ்சு கொடுங்க. ரொம்பவே வித்தியாசமான அதே சமயம் சூப்பரான பிரேக் ஃபாஸ்ட் ரெசிபி.

- Advertisement -

டிபன் என்றாலே பெரும் பாலும் இந்த இட்லி தோசை தான் மற்ற டிபன் வகைகள் கூட இதற்கு அடுத்தது தான். வீட்டில் மாவு இல்லாத சமயத்தில் சட்டென்று அதே நேரத்தில் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான ஒரு உணவை செய்து கொடுக்க நினைத்தால் இந்த ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க இப்போ அந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை

இந்த அடை செய்வதற்கு முதலில் நாலு ஸ்லேஸ் பிரத் துண்டுகளை எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் முக்கால் கப் ரவை இதற்கு வறுத்த ரவை, வறுக்காத ரவை எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொண்டு கால் கப் தண்ணீர் ஊற்றி இதை பைன் டேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு வெங்காயம், ஒரு கேரட், பாதி கொடை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். கேரட்டை மட்டும் தோல் நீக்கி சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பௌலில் அரைத்து வைத்த மாவையும் அரிந்து வைத்த காய்கறி, வெங்காயம் இவற்றையெல்லாம் சேர்த்த பிறகு காரத்திற்கு ஒரு ஸ்பூன் சில்லி பிளாக்ஸ், கால் டீஸ்பூன் கரம் மசாலா, கால் ஸ்பூன் மஞ்சள் கால் ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு ஐந்து நிமிடம் வரை அப்படியே வைத்திருங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் கழித்து ரவை ஊறி மாவு இன்னும் கொஞ்சம் கட்டியாகி இருக்கும். சமயத்தில் லேசாக தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் தோசை கல் வைத்து சூடானவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பிறகு மாவை கொஞ்சம் தடிமனாக ஊற்றி தட்டு போட்டு மூடி ஒரு புறம் சிவந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள். நல்ல சுவையான பிரட் அடை தயார்.

இதையும் படிக்கலாமே: மகாராஷ்டிரா ஸ்டைலில் முட்டை கிரேவி செய்முறை

இதை குழந்தைகளுக்கு சுட சுட செய்து கொடுங்கள். இதற்கு சைட் டிஷ் கூட தேவையில்லை காய்கறிகள் எல்லாம் சேர்த்திருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான நல்ல டேஸ்ட்டான ஒரு பிரேக் ஃபாஸ்ட் ஆக இருக்கும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்