வெறும் 5 ரூபாய் செலவில், முடியை டக்குனு கருப்பாக மாற்ற, சமயலறையில் இருக்கும் இந்த பொருளை யூஸ் பண்ணுங்க.

hair9
- Advertisement -

தலை முடியை கருப்பாக்கி கொள்ள நம்முடைய வீட்டில் எந்த பொருளும் இல்லை. ஹேர் டை தீர்ந்துவிட்டது. பியூட்டி பார்லருக்கு போவதற்கு நேரமில்லை. ஆனால், தலை முடியை கருப்பாக்கி கொண்டு வெளியில் செல்ல வேண்டிய கட்டாயம். என்ன செய்வது. இன்ஸ்டன்டாக நம்முடைய முடியை கருப்பாக மாற்ற ஒரு சூப்பரான சிம்பிளான ஐடியா உங்களுக்காக. இந்த பேக்கை ரெகுலரா பயன்படுத்தினால் தலைமுடி நிரந்தரமாக கருப்பாக மாறுமா என்று கேட்டால், அது நிச்சயம் முடியாதுங்க. இதை நீங்கள் ஒரு முறை பயன்படுத்தி விட்டு, மீண்டும் மீண்டும் தலைக்கு குளிக்கும் போது தலை முடியில் இருக்கும் கருமை நிறம் நீங்கி, மீண்டும் வெள்ளை நிறம் தெரியத்தான் செய்யும்.

சரி, இன்ஸ்டன்டா தலைமுடிக்கு கலர் கொடுக்கக்கூடிய ரெமிடி இதோ உங்களுக்காக. ஒரு சிறிய பவுளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1/2 ஸ்பூன் – ஆலோவேரா ஜெல், 1 ஸ்பூன் – காபி பவுடர், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து கலக்கவும். இதோடு 2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு ஊற்றி இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக 1 ஸ்பூனை வைத்து நன்றாக கலக்குங்கள். கொஞ்சம் திக்கான பக்குவத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய தலையில் எங்கெல்லாம் நரைமுடி இருக்கின்றதோ, அதை மறைப்பதற்கு நன்றாக அந்த இடத்தை சுற்றி இந்த க்ரீமை அப்ளை செய்து கொள்ளுங்கள். ஒரு சிறிய பிரஷ்ஷைக் கொண்டு தலைமுடிக்கு இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு 1/2 மணி நேரத்திலிருந்து, 1 மணி நேரம் வரை அப்படியே ஊற விட்டு விடுங்கள். பின்பு மைல்டான ஷாம்பு போட்டு லேசாக தலை குளித்து விட வேண்டும். இப்படி செய்தால் இன்சன்ட் ஆக உங்களுடைய வெள்ளை முடி கருப்பாக மாறி இருக்கும். வெள்ளை முடியின் மேல் இந்த கறை படியும் போது கருப்பாக மாறும். கருப்பு முடியில் பட்டு விட்டாலும் பரவாயில்லை. கருப்பு முடிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

பொதுவாகவே காபியைக் கலந்து நாம் குடிக்கும் போது வெள்ளை சட்டையின் மேல் பட்டு விட்டால், அதில் அப்படியே கறை பிடித்து விடும் அல்லவா. காய்ந்த பின்பு அந்த கறை சீக்கிரத்தில் போகாது. இதேபோல் தான் நம்முடைய தலையில் இருக்கும் வெள்ளை முடியில் இந்த காபி கலர் ஒட்டிக்கொள்ளும்‌. நீங்க வேணும்னா ஒரே ஒரு வாட்டி ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

- Advertisement -

பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. உடனடியாக உங்களை நீங்கள் அழகாக மாற்றி கொள்ள இது ஒரு சின்ன டிப்ஸ். நிரந்தரமாக தலைமுடியை கருப்பாக மாற்ற வேண்டுமென்றால் லவங்கம், கருஞ்சீரகம் இந்த இரண்டு பொருட்களையும் ஒவ்வொரு ஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை எப்போது வேண்டும் என்றாலும் உங்களுடைய தலையில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம்.

இந்த தண்ணீரை தலையில் ஸ்ப்ரே செய்து விட்டு ஒரு மணிநேரம் கழித்து அதன் பின்பு தலைக்கு குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் இந்த பிரிவை பயன்படுத்தி வர உங்களுடைய மூடி நிரந்தரமாக அடர் கருப்பு நிறத்திற்கு மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -