இனி பங்க்ஷன் போறதுக்காக பார்லர் சென்று ஆயிரக் கணக்கில் பணத்தை செலவு செய்ய வேண்டாம். பத்து ரூபாய் செலவு பண்ணா போதும் பத்தே நிமிஷத்துல அழகு தேவதையாக ஜொலிக்கலாம்.

beauty lemonsugar
- Advertisement -

இப்போதெல்லாம் வீட்டில் அல்லது வெளியில் எந்த ஒரு சின்ன விசேஷம், விழா என எதுவாக இருந்தாலும் முதலில் நாம் பார்லருக்கு சென்று முகத்தை அழகு செய்வது கொள்வதை ஒரு முக்கியமான வேலையாகவே கருதுகிறோம். இனி இது போல பங்க்ஷன் நேரங்களில் நீங்கள் பார்லர் சென்று தான் அழகு செய்து கொள்ள வேண்டும் அவசியமே இல்லை இந்த அழகு குறிப்பு பதிவில் உள்ளதை ட்ரை பண்ணாலே போதும் பத்து நிமிடத்தில் முகம் பளிச்சென்று மாறி விடும்.

பத்து நிமிடத்தில் முகம் பளிச் சென்று மாற
வீட்டில் பங்க்ஷன் என்றாலே நமக்கு ஒரு வித டென்ஷன் வந்து விடும். எப்படியான மேக்கப் போடுவது என்ன ஹேர் ஸ்டைல் செய்வது எந்த மாதிரியான உடைகளை தேர்ந்தெடுப்பது என்று பார்த்து பார்த்து செய்வோம். இவை அனைத்துமே செய்தாலும் பிரதானமானது என்னவோ முகத்தை பளிச்சென்று நல்ல நிறமாக காட்டுவது தான். அதற்கென்று இனி நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவையே இல்லை. வீட்டில் இந்த ஒரு சின்ன ரெமிடியை ட்ரை பண்ணா போதும் அப்படி ஒரு இன்ஸ்டன்ட் அழகை பெறலாம்.

- Advertisement -

இந்தப் பேக் தயாரிக்க முதலில் ஒரு பவுலில் அரை எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை நன்றாக கரையும் வரை கலந்து விட வேண்டும். லெமன் சாறில் சர்க்கரை சேர்க்கும் பொழுது உடனே கரைந்து விடாது. எனவே சர்க்கரை நன்றாக கலந்து நல்ல ஒரு தேன் பதத்திற்கு வர வேண்டும். அது வரை நாம் கலந்து விட வேண்டும்.

அதன் பிறகு பேர் ஆண்ட் லவ்லி பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் உள்ள கிரீமை ஒரு ஸ்பூன் வரும் அளவிற்கு எடுத்து அதை இந்த எலுமிச்சை சாறு சர்க்கரை கலந்த கலவையில் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விடுங்கள். இதுவும் சேர்த்தவுடன் பால் திரிந்தது போல இருக்கும். சிறிது நேரம் கைவிடாமல் கலந்தால் பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும் இப்போது முகத்திற்கான இந்த தயாராகி விட்டது.

- Advertisement -

இதை முகத்தில் போடுவதற்கு முன்பாக முகம் நன்றாக துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு முகத்தை ஈரம் இல்லாமல் துடைத்து பின்பு இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் போட்டு விடுங்கள். முகத்தில் கருந்துட்டுக்கள் இருந்தால் அங்கு மட்டும் கொஞ்சம் கூடுதலாக போட்டுக் கொள்ளுங்கள். கண்களின் மேல் புறம் இதை போட வேண்டாம். அதே போல் முகப்பரு அதிகமாக இருப்பவர்கள் இதில் லெமன் சாறுக்கு பதிலாக தக்காளி சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இந்த பேக் உங்கள் முகத்தில் 10 நிமிடம் இருந்தால் போதும் அதன் பிறகு லேசாக மசாஜ் செய்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள் போதும். அப்புறம் நீங்களே உங்க முகத்தை பாருங்க அவ்வளவு பளிச்சென்று மாறியிருப்பீர்கள். இதன் பிறகும் மேக்கப் போட வேண்டும் என்றாலும் போட்டுக் கொள்ளலாம். மேக்கப் போட்டாலும் உடனடியாக கலைந்து விடாமல் நீண்ட நேரம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 3 நாள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டால் போதும். கழுத்து, கைமுட்டி, கால் முட்டி, அக்குள் பகுதியில் இருக்கும் அடர் கருப்பு நிறம் கூட கண்ணுக்கே தெரியாமல் காணாமல் போகும்.

இந்த பேக்கை அடிக்கடி முயற்சி செய்யக் கூடாது. மாதம் ஒரு முறை மட்டும் செய்தாலே போதும். ஏதாவது பங்க்ஷன் போக வேண்டும் என்றால் அந்த நேரத்தில் இந்த பேக் உங்களுக்கு நல்ல ஒரு ரிசல்ட்டை கொடுக்கும் இந்த ஃபேஸ் பேக் முறை பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -