10 நிமிடத்தில் அரிசி மாவில் பஞ்சு போல சாஃப்ட் இட்லியும், பர்பெக்ட்டான ஹோட்டல் ஸ்டைல் சட்னியும் தயார் செய்யலாம். சுடச்சுட இட்லி கூட இந்த சட்னி ஊத்தி சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

instant idly hotel style chutney
- Advertisement -

இப்பொழுது உள்ள காலக்கட்டத்தில் பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். எதையும் நிதானமாக பார்த்து செய்யக்கூடிய கால அவகாசம் யாருக்கும் கிடையாது இந்த நேரத்தில் ஒரு இட்லி சாப்பிட வேண்டும் என்றால் அதற்கு முன்னவே மாவு ஊறவைத்து அரைத்து என பெரிய வேலை பார்க்க வேண்டி இருக்கும் அதை எல்லாம் இல்லாமல் நினைத்த நேரத்தில் சட்டு என்று இட்லியும் அதற்கு ஒரு அருமையான ஹோட்டல் ஸ்டைல் சட்னியும் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இன்ஸ்டன்ட் இட்லி செய்முறை விளக்கம்:
முதலில் இந்த இட்லி செய்வதற்கு ஒரு பவுலில் ஒன்றரை கப் அளவு அரிசி மாவு எடுத்துக் கொள்ளுங்கள் அதில் அரை கப் ரவை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்த பிறகு ஒரு கப் புளித்த தயிரை சேர்த்து அதையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள் அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மாவை நன்றாக கலந்து கொள்ளுங்கள் ஒருவேளை உங்களுக்கு மாவு இட்லி பதத்திற்கு வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு பத்து நிமிடம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஹோட்டல் ஸ்டைல் சட்னி செய்முறை விளக்கம்: 
இந்த நேரத்தில் நாம் ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சேர்க்காத ஒரு சட்னி எப்படி தயார் செய்வது என்று பார்த்து விடலாம் அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள் இரண்டு பல் பூண்டு 2 பச்சை மிளகாய் இரண்டு இதை மூன்றையும் லேசாக வதக்கிய பிறகு கால் கப் பொட்டுக்கடலை கால் கப் வேர்க்கடலை சேர்த்து நன்றாக ஒரு முறை வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்போது வதக்கிய வெங்காயம் பொட்டுக்கடலை வேர்க்கடலை அனைத்தையும் ஒரு மிக்ஸி சாருக்கு மாற்றிய பிறகு கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்து ஒரு பௌலில் ஊற்றிக் கொள்ளுங்கள் இதற்கு சின்ன தாளிப்பு கரண்டி வைத்து எண்ணெய் விட்டு சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு காய்ந்த மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை இந்த சட்னியில் ஊற்றி விடுங்கள் அருமையான ஹோட்டல் ஸ்டைல் சட்னி தயார்.

- Advertisement -

இப்போது நாம் ஏற்கனவே கரைத்து வைத்த மாவை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு கால் ஸ்பூன் மட்டும் ஏனோ சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அடித்து விடுங்கள் பிறகு அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி சூடானவுடன் இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி இட்லி ஊற்றி வைத்து விடுங்கள் ஐந்து நிமிடம் இருந்தால் போதும் இட்லி நல்ல பஞ்சு போல சாப்டாக வெந்து விடும்.

இதையும் படிக்கலாமே: அட்டகாசமான சுவையில் நொடியில் தயார் செய்யக்கூடிய ஜவ்வரிசி கேரட் பாயாசம் நீங்களும் இதே மாதிரி செஞ்சு பாருங்க வீட்டில் இருப்பவர்கள் திரும்பத் திரும்ப செய்ய சொல்லுவாங்க!

ரொம்ப சிம்பிளான இந்த ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா போதும் 10 நிமிஷத்துல மல்லிப்பூ இட்லியும் ஹோட்டல் சட்னியும் தயார். எந்த இன்ஸ்டன்ட் இட்லியும் ஹோட்டல் ஸ்டைல் சட்னியும் மிஸ் பண்ணாம நீங்க ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -