உங்க வீட்ல இட்லி தோசை மாவு இல்லை என்ற கவலை இனி வேண்டாம். ராகி மாவு, ரவையை வைத்து 10 நிமிடத்தில் இந்த தோசையை சுட்டு கொள்ளுங்கள்.

ragi-rava-dosa
- Advertisement -

இட்லி தோசை மாவு இல்லை என்றால் கடையில் போய் மாவு வாங்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. உங்களுடைய வீட்டிலிருக்கும் ராகி மாவை வைத்து ஆரோக்கியமான இந்த தோசையை 10 நிமிடத்தில் தயார் செய்து விடுங்கள். ராகி ரவா தோசை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாரத்திற்கு இரண்டு நாள், இட்லி மாவு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி இந்த தோசையை உங்களுடைய குழந்தைகளுக்கு ஊற்றிக் கொண்டால். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ragi-rava-dosa2

முதலில் ஒரு அகலமான பவுல் எடுத்து, அதில் ராகி மாவு – 1 கப், அரிசி மாவு – 1/2 கப், ரவை – 1/2 கப், தயிர் – 1 டேபிள்ஸ்பூன் இவைகளை சேர்த்து நன்றாக கலந்து அதன்பின்பு 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். ராகி மாவு எனப்படும் கேழ்வரகு மாவை எந்த கப்பில் அளந்தீர்களோ, மற்ற பொருட்களையும் அதே கப்பில் அளந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 துண்டுகள், சிறிய துண்டு இஞ்சி – துருவியது, தேங்காய்த்துருவல் – 2 ஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, இவைகளை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அந்த மாவை நன்றாக மீண்டும் கரைத்து அப்படியே 10 நிமிடங்கள் ஊறவைத்து விடுங்கள்.

ragi-rava-dosa3

மாவு தண்ணீர் பதத்தில் தான் இருக்கவேண்டும். கெட்டிப் பதத்தில் இருக்கக்கூடாது. மாவு நன்றாக ஊறிய பின்பு, ரவை தண்ணீரை உறிஞ்சி இருந்தால், மீண்டும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம். 10 நிமிடங்கள் கழித்து, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் இந்த மாவை ரவா தோசை ஊற்றுவது போல தோசைக்கல்லில் பரவலாக ஊற்றி விட வேண்டும்.

- Advertisement -

தோசைக்கல்லில் தோசை ஓட்டை ஓட்டையாக விழும். அது அப்படியே இருக்கட்டும். ஓட்டைகளை மூடி விட கூடாது. தோசையின் மேல் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து மொறுமொறுவென்று சிவக்க வைத்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுத்தால் ராகி ரவை தோசை தயார்.

ragi-rava-dosa1

ஆரோக்கியமான கொத்தமல்லி சட்னி இதற்கு தொட்டுக்கொள்ள தோதாக இருக்கும். ஒரு கடாயை வைத்து அதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 3 போட்டு, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு சிறிய துண்டு இஞ்சி, 2 பல் பூண்டு, சிறிய துண்டு புளி, இவைகளைப் போட்டு ஒரு நிமிடங்கள் வதக்கி, இறுதியாக கொத்தமல்லி தழையை போட்டு, ஒரு கைப்பிடி தேங்காய் துருவலை போட்டு, உடனே அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலேயே ஒரு வதக்கு வதக்கி கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த விழுது ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சமாக தண்ணீர் விட்டு, கொஞ்சம் கெட்டியாக கொத்தமல்லி சட்னி தயார் செய்து, கடுகு கருவேப்பிள்ளை பெருங்காயம் தாளித்து போட்டால், கமகம வாசத்தோடு கொத்தமல்லி சட்னி தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
உப்பு தண்ணீரில் உங்களுடைய வீட்டு டைல்ஸை துடைத்தாலும் வெள்ளைத் திட்டுக்கள் வரவே வராது. மாப் போடும்போது 1 ஸ்பூன் இந்த லிக்விட் சேர்த்துக்கோங்க! உங்கள் டைல்ஸ் சட்டுனு பளபளப்பாக மாறிவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -