உளுத்தம் பருப்பு ஊற வைக்காமல் அரைக்காமல் ருசியான மெது வடையை சுலபமாக செய்திட முடியும்

vadai3
- Advertisement -

மெதுவடை செய்வதற்கு பொதுவாக உளுந்து ஊற வைத்து அரைத்து பின்னர் செய்ய வேண்டும். அது தவிர பருப்பு வடை, மசால் வடை செய்வதற்கும் கடலைப்பருப்பை ஊற வைத்து அரைத்து அதற்கு பின்னால் தான் செய்ய வேண்டும். இந்த உடனடி மெதுவடை செய்வதற்கு உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டிய அவசியமில்லை. அரிசி மாவு இருந்தால் போதும் பத்து, பதினைந்து நிமிடங்களில் சுவையான மெதுவடை சுலபமான முறையில் செய்யலாம். இதன் ருசியும் மொறுமொறுவென அவ்வளவு அசத்தலாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் சொல்லும் வரை யாருக்கும் தெரியாது இது அரிசி மாவில் செய்த மெதுவடை என்று. அந்த அளவிற்கு ருசி மாறாமல் அப்படியே இருக்கும். வாருங்கள் இந்த சுவையான மெது வடையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப், தயிர்  – 1 கப், தண்ணீர்  – 1 கப், உப்பு  – முக்கால் ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, வெங்காயம்  – பொடியாக நறுக்கியது சிறிதளவு, கொத்தமல்லி இலைகள்  – பொடியாக நறுக்கியது சிறிதளவு, எண்ணெய்  – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும் (மாவு கலக்கும் வரை அடுப்பை பற்ற வைக்க தேவையில்லை). அதில் 1 கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின்னர் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து கட்டிகளில்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு,  அரை தேக்கரண்டி சீரகம்,  இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,  சிறிதளவு வெங்காயம் பொடியாக நறுக்கியது,  ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பை பற்ற வைக்க வேண்டும். பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து கலக்கவும். மாவு வெந்து நன்றாக திரண்டு வரும் வரை கிளற வேண்டும்.

- Advertisement -

அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்க வேண்டும். இப்பொழுது மாவு தயாராக உள்ளது. இதனை நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்னர் மாவிலிருந்து சிறிதளவு எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  பின்னர் கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு, ஒவ்வொரு உருண்டையாக எடுத்து லேசாக தட்டி, மெதுவடை செய்வது போல நடுவில் ஓட்டை போட்டுக் கொள்ளவ வேண்டும்.

இதே போல எல்லா மாவிலும் செய்த பின்னர்  ஒவ்வொரு வடையாக எண்ணெயில் போட வேண்டும். வடையை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். ஓரளவு சிவந்த பின்னர் திருப்பி போட வேண்டும். வடை பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுத்து வைக்க வேண்டும். அவ்வளவுதான்  சுவையான உடனடி வடை தயாராகிவிட்டது.

- Advertisement -