கண்ணுக்குத் தெரியாத இந்த சின்னப் பானை, உங்கள் கண்ணுக்கு புலப்படாத, பெரிய பிரச்சனைகளை கூட தீர்த்து வைக்கும்.

ganesh-pot

நம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு காரணம் என்னவாக இருக்கும், என்று அலசி ஆராய்ந்து அதை கண்டுபிடித்து விட்டால் சரிசெய்து விடலாம். ஆனால் சில கஷ்டங்கள் எதனால் வருகிறது என்பதே நமக்கு புரியாது. நம் கண்ணுக்குப் புலப்படாத இந்த பிரச்சினைகளை கண்டுபிடிப்பதற்கே நம் வாழ்க்கையில், பாதி முடிந்திருக்கும். ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கும் இந்த ஒரு சின்ன வாழ்க்கையை, வாழ்வதில் நேரத்தை செலவிடுவதோ, அல்லது எதனால் நமக்கு இவ்வளவு பிரச்சினைகள் என்பதை தெரிந்து கொள்வதற்காக நேரத்தை செலவிடுவதா? பாதி காலம் கஷ்டத்திலே கழிந்து விடுகிறது. பணம் காசு இல்லாத மனிதருக்கு கூட, மன நிம்மதி இருக்க வேண்டும்.

money

சில பேருக்கு அளவுக்கு அதிகமான பணம் இருக்கும், மன நிம்மதி இருக்காது. சிலபேருக்கு மன நிம்மதி இருக்கும் அளவுக்கு அதிகமான பணம் இருக்காது. இதில் நீங்கள் எந்த வாழ்க்கையை வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். கட்டாயம் மனநிறைவான வாழ்க்கை தான். அளவான பணம் இருக்கின்றதே, அது போதாதா?

சரி. மனிதனாக பிறந்து விட்டோம். பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. கண்ணுக்குத்தெரியாத பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்? சாஸ்திரத்தில் ஒரு சின்ன பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரம், உங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சினையாக இருந்தாலும் அதை நீக்கிவிடும். கெட்ட நேரத்தில் வரக்கூடிய பிரச்சனையையும் குறைப்பதற்கு வழி வகுக்கும். குறிப்பாக வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு தங்களது வீட்டை, தங்களுடைய ஜாதகப்படி, வாஸ்துவை, தாங்கள் நினைத்தது போல் மாற்றி அமைத்துக்கொள்ள முடியாது.

new-home

சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கும் இதே நிலைமை தான். எப்படியோ ஒரு வீட்டை கட்டி விட்டோம். ஆனால் திரும்பி பார்க்கும் பொழுது உங்களுடைய ஜாதகத்திற்கு, உங்கள் வீட்டின் அமைப்பு இப்படி இருக்கக் கூடாது என்று சொல்வார்கள். கட்டாயம் நம் கஷ்டத்திற்கு வீட்டின் அமைப்பு காரணமாக இருக்குமோ! என்ற ஒரு சந்தேகம் நம் மனதில் வந்து விட்டாலே போதும். வாழ்க்கையில் குழப்பங்களும் தானாக வந்து விடும். இதனால் முதலில் குழப்பம் இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக வாஸ்து நிபுணர்களால் கூறப்பட்டிருக்கும் இந்தப் பானை பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இப்போது பார்த்துவிடலாம். ஒரு சிறிய அளவிலான மண்பானையை எடுத்துக்கொள்ளுங்கள். 1 ரூபாய் நாணயங்கள் 11, அவ்வளவு தான். நீங்கள் புதியதாக வாங்கி வைத்திருந்த மண்பானையை நன்றாக கழுவி காய வைத்து விட்டு, அதில் இந்த 11 நாணயங்களை போட்டு உங்கள் வீட்டு கிழக்கு மூலையில், யார் கண்களுக்கும் தெரியாமல் வைத்துவிடுங்கள். ஆனால் பானையின் மேல் எந்த ஒரு பொருளையும் போட்டு மூடி விடாதீர்கள். பானை திறந்தபடி தான் இருக்க வேண்டும். அந்தப் பானை யார் கண்ணுக்கும் தெரியாத அளவிற்கு மறைக்கும்படி ஏதாவது ஒரு அழகு பொருளை, பானையின் முன்பாக வைத்துக் கொள்ளலாம். கட்டாயம் இந்தப் பானை உங்கள் வீட்டிற்கு வரும் மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியவே கூடாது. தெரிந்தால் கட்டாயம் இதற்கு பலன் இருக்காது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

clay-pot

எந்த காலத்திலும் இந்தப் பானையை மாற்ற வேண்டும் என்ற அவசியமே கிடையாது. பானையின் உள்ளே இருக்கும் நாணயங்களையும் அப்படியே விட்டு விடலாம். வருடக்கணக்கானாளும் இது கெட்டுப் போக போவதில்லை. இந்த பாணியை கிழக்கு மூலையில் வைத்துவிட்டு மூன்று மாதம் பொறுமையாக உங்களது வேலைகளை நீங்கள் கவனித்துக் கொண்டே இருங்கள். உங்கள் கடமைகளில் இருந்து தவறக்கூடாது. கட்டாயமாக உங்கள் வாழ்வின் தடைபட்டிருந்த காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை கண்கூடாக காணமுடியும். பல பேர் இந்த பரிகாரத்தின் மூலம் பலன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
அடுத்தவர்கள் வீட்டில் போடப்படும் சாம்பிராணியின் மனம் நம் வீடு வரை வீசுகிறது. நம்வீட்டு சாம்பிராணி மட்டும் ஏன் மணக்கவில்லை?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Prachanai. Prachanaigal theera Tamil. Kudumba prachanaigal theera. Vastu problem.